RECENT VIDEOS

அகமதாபாத்தில் மோடிக்காக ‘கோச்சடையான்’ சிறப்புக்காட்சி ஏற்பாடு?


அகமதாபாத்: சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து அடுத்த மாதம் ரிலீசாகவுள்ள ‘கோச்சடையான்' படத்தை பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்கு மட்டும் ஸ்பெஷலாக போட்டுக் காட்ட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் பிரச்சாரத்திற்காக சென்னை வந்திருந்த மோடி, ரஜினியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார். அந்தச் சந்திப்பில் அரசியல் இல்லை எனச் சொல்லப் பட்டாலும், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து கோவையில், மோடியைச் சந்தித்தார் நடிகர் விஜய். அதுவும் வழக்கம் போல் அரசியல் ரீதியான சந்திப்பில்லை என்றே சொல்லப் பட்டது. இந்நிலையில் தற்போது ரஜினியின் கோச்சடையான் படத்தை மோடிக்கு தனியாக போட்டுக் காண்பிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

விருப்பம்.... சென்னையில் ரஜினியைச் சந்தித்த மோடி அவரது கோச்சடையான் அனிமேஷன் படத்தைப் பார்க்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தாராம்.

சிறப்புக்காட்சி... அதையடுத்து, அகமதாபாத்தில் மோடிக்கு படத்தைப் போட்டுக் காண்பிக்க அப்படத்தின் இயக்குநரும், ரஜினியின் இளைய மகளுமான சவுந்தர்யா, சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளாராம்.

பட இயக்குநர்... மோடியுடன் அமர்ந்து படத்தை சவுந்தர்யா பார்க்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுப்பு... ஆனால், இத்தகவல் உண்மையானதல்ல என அப்படத்தின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.


இன்றைய ராசி பலன் 23-04-2014

 
மேஷம்
வாழ்க்கை தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். தொழில் ரீதியாக புதிய பொறுப்புகள்
வந்து சேரலாம். நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும்.
ரிஷபம்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.
மிதுனம்
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். வாகனங்கள் சம்பந்தப்பட்ட வகையில் திடீர் செலவுகள் ஏற்படலாம். உதவி செய்த சிலரே உங்களை உதாசீனப்படுத்துவது கண்டு வருத்தமடையலாம்.
கடகம்
நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள். உத்தியோகம், தொழிலில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணையும் வாய்ப்பு உண்டு.
சிம்மம்
பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாள். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். விரதம், வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள். பணியாளர் தொல்லை அகலும். குடும்பச் சுமை கூடும்.
கன்னி
சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வீடு, இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
துலாம்
இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தாய் வழி ஆதரவு பெருகும். வாங்கல் – கொடுக்கல்கள் ஒழுங்காகும்.
விருச்சகம்
எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும் நாள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியைக் கொண்டு வந்து சேர்ப்பர். வருமானம் திருப்தி தரும்.
தனுசு
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணி புரிவீர்கள். விவாகப் பேச்சுக்கள் முடிவாகலாம். தொகை வருவதற்கான அறிகுறி தோன்றும்.
மகரம்
வழிபாட்டால் முன்னேற்றம் காண வேண்டிய நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும். பயணத்தால் சிறு விரயம் உண்டு.
கும்பம்
விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். தொழில், வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்யும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
மீனம்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொலைதூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம். பரபரப்பாகச் செயல்படுவீர்கள்.

Mahabharatham Vijay Tv Serial 23-04-14 | Mahabharatham 23rd April 2014 | Vijay Tv Serial 23rd April 2014 | Vijay Tv Mahabharatham 23rd April 2014 | Vijay Tv Serial Mahabharatham 23-04-14 | Mahabharatham 23.04.14 | Episode 137
The epic saga of blood brothers at war. Indian mythology's greatest battle unfolds in living color in a multi-crore production that will both baffle and enthrall. Exquisitely detailed sets and props. This is a story a generation will be raised on.

தமிழ் ஹீரோயின் ஆனார் இந்தி குழந்தை நட்சத்திரம்

 
இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ஸ்ரீதேவியின் மகளாக வந்து அம்மாவை ஆங்கிலத்தில் திட்டிக் கொண்டிருப்பாரே அவர்தான் நிவீக்கா. இப்போது வளர்ந்து பெரிய பெண்ணாகிவிட்டார். பெங்களூரைச் சேர்ந்த நிவீக்காவை தமிழ் சினிமா, ஹீரோயினாக அறிமுகப்படுத்துகிறது. நிவீக்கா அறிமுகமாகும் படத்தின் பெயர் முருகாற்றுப்படை. சரவணன் என்ற புதுமுகம் ஹீரோ. படத்தின் தலைப்பை பார்த்துவிட்டு பக்திபடம் என்ற நினைத்து விடவேண்டாம். படம் பற்றி விளக்குகிறார் இயக்குனர் கே.முருகானந்தம்.

"ஹீரோவின் பெயர் முருகன். அவருக்கு 6 நண்பர்கள் கொண்ட படை இருக்கும் முருகனின் ஆறு படை என்பதைத்தான் முருகாற்றுப்படை என்று வைத்திருக்கிறோம் (இப்போ புரியுதுங்களா). சென்னையில் அடிக்கடி காலேஜ் ஸ்டூடண்ட் பஸ் டாப்புல ஏறி பயணம் பண்றது. திடீர்னு மற்ற காலேஜ் ஸ்டூடண்டோடு மோதிக்கிறதல்லாம் நடக்குது. படிக்கப்போன இடத்துல ஏன் இவுங்க இப்படி நடந்துக்குறாங்க என்கிற ரகசியத்தை சொல்லுற படம்.

காலேஜ் காம்ப்ளசுக்குள்ள ஜாதியும், அரசியலும் எப்படி நுழையுது. ஆர்ட்ஸ் காலேஜ் பசங்களும், இன்ஜினீயரிங் காலேஜ் பசங்களும் ஏன் மோதிக்கிறாங்க என்பதை விலாவாரியா சொல்றோம். அதுக்கு இடையில ஒரு லவ் இருக்கு. ஹீரோயின் செலக்ஷனப்போ நெட்டுல பார்த்து தேர்வானவர்தான் நிவீக்கா. தேர்வான பிறகுதான் அவர் இந்தியில் குழந்தை நட்சத்திரமா நடிச்சது எங்களுக்குத் தெரியும், நல்லா அழகா இருக்காங்க. நடிப்பும் சுலபமா வருது சீக்கிரமே பெரிய இடத்துக்கு வருவாங்க" என்கிறார். கே.முருகானந்தம்.

நம் ஓட்டு நம் உரிமை! திரைபிரபலங்கள் சொல்வது என்ன...?!

 
தமிழகத்தில் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் ஓய்ந்து, நாளை(ஏப்ரல் 24ம் தேதி) ஓட்டுப்பதிவு நடக்க இருக்கிறது. ஒவ்வொரு இந்திய குடிமகனும் தங்களது கடமையை ஆற்ற ஓட்டுப்போட தயாராகிவிட்டனர். ஓட்டளிப்பது நமது கடமை என திரைபிரபலங்களும் தங்களது தேர்தல் பிரசாரத்தை வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், நம் ஓட்டு நம் உரிமையை (ஓட்டுப்போடுவது) பற்றி திரைபிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்...

ஓட்டளிக்க தவறியவனுக்கு கேள்வி உரிமை இல்லை - வைரமுத்து, கவிஞர்

இந்தியா, மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதற்கு இந்த தேர்தல் தான் அடையாளம். இதுவரைக்கும் உலகில் நிலவிய ஆட்சி வடிவங்களில், குறைந்த தீமை உடையது இந்த ஜனநாயகம் தான். தங்கள் எஜமானர்களை, கடைக்கோடி மனிதனும் தீர்மானிக்கும் உரிமை தந்ததும் இந்த தேர்தல் முறைதான். ஓட்டு போடும் கடமையை செய்கிறவன், இந்த உரிமையை சரியாக பயன்படுத்துகிறான். அரசியல்வாதிகள் ஆயிரம் கனவு கண்டாலும், ஒவ்வொரு முறையும் இந்திய வாக்காளன், தான் நினைக்கும் தீர்ப்பை தர தயங்கியது இல்லை. ஓட்டளிப்பது கடமைபோல ஒரு உரிமை. உரிமைபோல ஒரு கடமை. ஓட்டளிக்க தவறியவனுக்கு, கேள்வி கேட்க உரிமை இல்லை; எனவே, தவறாமல் வாக்களியுங்கள்.

ஓட்டு போடுவது இனிமையான அனுபவம் - சிவகார்த்திகேயன்

கல்லூரி படிப்பு முடிந்ததும், திருச்சியில், முதல் ஓட்டுப்போடும் வாய்ப்பு கிடைத்தது; மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. நானே போய், சென்னையில் ஓட்டுப்போட இடமாறுதலுக்கு விண்ணப்பித்தேன். வாக்காளர் அட்டை கிடைக்காவிட்டாலும், நல்ல வேளையாக வாக்காளர் பட்டியலில் பெயர் வந்துவிட்டது. பூத் சிலிப்பும் தந்துவிட்டனர். நான் காலை,7:00 மணிக்கே ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டுப்போட உள்ளேன். ஓட்டுபோடுவது, நமது உரிமை, கடமை. யாரையும் குறைசொல்லிக் கொண்டு, நம் உரிமையை நிலைநாட்ட, கடமையை செய்யாமலிருக்க கூடாது. நம் ஓட்டு, நாட்டை ஆள பயன்படுகிறது என, நினையுங்கள்; தவறாமல் ஓட்டுப்போடுங்கள். இந்த ஆண்டு புதிய வாக்காளர்களாக பல லட்சம் இளைஞர்கள் சேர்ந்துள்ளனர். முதல் ஓட்டு இனிமையான அனுபவமாக இருக்கும்; நீங்களே உணர்வீர்கள்.

வேலையை ஒத்திவையுங்கள் - அதர்வா

எந்த வேலை இருந்தாலும், எல்லாவற்றையும் தள்ளி வைத்துவிட்டு ஓட்டளிக்க வேண்டும். நாம் நாட்டிற்கு நல்லது செய்யப்போகிறோம் என, நினைத்தால், எப்படியாவது ஓட்டு போட வேண்டும் என, மனதில், ஒருவித சந்தோஷம் ஏற்படும். ஓட்டுப்போட்டால் தான், நாம் உரிமையுடன் கேள்வி கேட்க முடியும். நாம் தேர்வு செய்பவர்கள் ஜெயித்து, ஆட்சியில் பங்கெடுக்கும் போது, நம்ம ஓட்டால் தான் ஜெயித்தார் என, மனசுக்கு திருப்தியாக இருக்கும்.

நம் ஓட்டு ஒரு உந்து சக்தி - அனிருத்

ஒவ்வொருவரும் ஓட்டளிப்பது ஜனநாயக கடமை. ஒவ்வொரு ஓட்டும், நாட்டுக்கு நல்லது செய்வதாகவும், நாட்டின் நற்பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு நம் ஓட்டும் ஒரு உந்து சக்தியாகவும் இருக்கும். தேர்தல் அன்று ஒரு நாள் விடுமுறை கிடைக்கிறது, வீட்டில் இருந்துவிடலாம் என, நினைக்கக்கூடாது. நமது உரிமையை, கடமையை எக்காரணம் கொண்டு தவிர்க்க கூடாது. தேர்தலில் ஓட்டுப்போடுவது மட்டுமல்ல, அன்று தமிழகத்தில் ஓட்டுப்பதிவு எப்படி நடக்கிறது என்பதை ஊடகங்களில் பார்க்க வேண்டும் என்பதற்காக, என் இசை பணிக்கு நாள் முழுவதும் லீவு போட்டுவிட்டேன்.

ஓட்டு நாட்டின் வளர்ச்சிக்கு படிக்கட்டு - சிவா

இந்த ஆண்டு காலையிலேயே சென்று ஓட்டுப்போடுவேன். கடந்த சட்டசபை தேர்தலில் ஓட்டுப்போட தாமதமாக சென்றபோது, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை; ஓட்டுப்போட முடியாது என, சொல்லிவிட்டனர். ஓட்டுப்போட வந்தவர்களை வேடிக்கை பார்த்து விட்டு திரும்பினேன். இந்த தேர்தலில், அப்படி நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என, வாக்காளர் பட்டியலை நேரில் சென்று பார்த்தேன்; பெயர் உள்ளது. சென்னை, சி.ஐ.டி., நகர் ஆல்பா பள்ளியில் ஓட்டுப்போட, பூத் சிலிப்பும் கொடுத்துள்ளனர். தேர்தலில் நிற்பவர்கள் சரியில்லை என, காரணம் கூறிக்கொண்டு சிலர் ஓட்டுப்போடாமல் தவிர்க்கின்றனர். உங்கள் ஓட்டு, நாட்டின் வளர்ச்சிக்கு படிக்கட்டாகும் என, நினைத்து ஓட்டுப்போடுங்கள்.

இந்தியா வல்லரசாக என் முதல் ஓட்டு - தன்ஷிகா

சினிமாவுக்கு வந்து பல படங்களில் நடிச்சாச்சு. இப்பத்தான் முதல் முதலாக ஓட்டுப்போட போகிறேன். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியாமல் போனதால், கடந்த சட்டசபை தேர்தலில் ஓட்டுப்போட முடியவில்லை. இந்த தேர்தலில் ஓட்டு போட்டு விடவேண்டும் என, ஆர்வம் இருந்தது. வீட்டாரிடம் சொல்லி, விண்ணப்பித்து, ஓட்டுப்போடும் உரிமையை வாங்கிவிட்டேன். என்னோடு நிறைய பேர் முதல் ஓட்டுப்போட உள்ளனர். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். நம்மால் இந்தியா வல்லரசு ஆகட்டும்.

ஓட்டு போடாவிட்டால் தவறான ஆட்கள் வந்து விடுவார்கள் - மும்தாஜ்

வேட்பாளர்கள் சரியில்லை என, ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி ஓட்டுப்போடாமல் இருந்து விடாதீர்கள். நாம் அப்படி இருந்தால், தேவையில்லாத, தவறான ஆட்கள் ஆட்சிக்கு வந்து விட்டால், நாட்டின் வளர்ச்சி தேங்கிவிடும். நாம் போடும் ஓட்டால், நல்லவர்களை ஆட்சிக்கு கொண்டு வர முடியும்; அவர்கள் நல்லாட்சியும் தருவர் என்பதால், ஒவ்வொருவரும் தவறாமல் ஓட்டுப் போடுங்கள்.

புதிய வாக்காளர்களுக்கு வாழ்த்துக்கள் - விக்ரம்பிரபு

ஓட்டு போடுவது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை, உரிமை என, தாத்தா சிவாஜிகணேசன் சொல்வார். தேர்தல் நாளில் காலையிலேயே போய் எல்லாரும் ஓட்டு போட்டுங்கள். ஓட்டு உள்ளவர்கள், எக்காரணம் கொண்டும் ஓட்டுப்போடாமல் இருக்க கூடாது என, சொல்வார். வரிசையில் நின்று ஜனநாயக கடமை ஆற்றும் போது, நமது ஓட்டும் இந்தியாவை ஆள்வதற்கு உதவியாக இருக்கும் என, நினைக்கும் போது, சந்தோஷமாக இருக்கிறது. இந்த தேர்தலில், 30 லட்சம் புது வாக்காளர்கள் ஓட்டுப்போட உள்ளனர். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். முதல் ஓட்டு போடுவது, சந்தோஷமான அனுபவமாக இருக்கும். நாடு நன்றாக இருக்க உங்கள் தேர்வு, நல்லதாக இருக்க வேண்டும் என, ஆசைப்படுகிறேன்.

விரலில் மை பெருமிதமாக... - சசிகுமார்

ஓட்டு உரிமையை நிறைவேற்றுவது ஒவ்வொரு குடிமகனின் இன்றியமையாத கடமை. அடித்தட்டு ஏழை மக்களும், தொழிலாளர்களும், கிராமப்புற மக்களும் காத்திருந்து வாக்களிப்பது கவுரவமாக நினைக்கின்றனர். ஆனால், படித்த மக்கள் கியூவில் நிற்கவும், நேரம் ஒதுக்கவும் தயங்கி தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற யோசிக்கின்றனர். கருத்து பேசுவதால் மட்டுமே, எவ்வித மாற்றமும் ஏற்பட்டு விட போவதில்லை. தேசத்தையே தீர்மானிக்கும் தேர்தலில் கடமை மிகுந்த குடிமகன்களாக கலந்து கொள்வதை சிறப்பு. விரலில் மை பெருமிதமாக

இந்தியன் என்கிற அடையாளம் - இயக்குனர் அமீர்

பெயர் இல்லை என்றால் தனிமனிதனுக்கு அடையாளம் இல்லையோ அதுபோல, ஓட்டுப் போடாவிட்டால் அவனுக்கு இந்தியன் என்கிற அடையாளம் இல்லை. நடுத்தர மக்கள், படித்தவர்கள், தனியார் ஊழியர்கள் அனைவரும் அரசியல் ஒரு சாக்கடை என, தங்களது கையால் ஆகாத தனத்தால் ஒதுக்குகின்றனர். வீட்டில் இருக்கும் சாக்கடையை அப்படி ஒதுக்கி விட முடியுமா? கால் வைத்து இறங்க வேண்டும். தனிமனித ஒழுக்கமும், நேர்மையும், கடமையும் தான் நாட்டை சீர்படுத்தும். இந்தியர் என்றால் அனைவரும் கண்டிப்பாக ஓட்டுப் போட வேண்டும்

திருமணத்துக்குப் பிறகு அமலா பால் நடிக்கமாட்டார்?


இயக்குநர் விஜய்யைத் திருமணம் செய்த பிறகு, படங்களில் தொடர்ந்து நடிக்கமாட்டார் அமலா பால் என்று கூறப்படுகிறது. விஜய் - அமலா பால் திருமண நிச்சயதார்த்தம் வரும் ஜூன் 7-ம் தேதி நடக்கிறது. ஜூன் 12-ம் தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது.

திருமணத்துக்கு முன் ஒப்புக் கொண்ட படங்களை முடித்து கொடுப்பதில் மும்முரமாக உள்ளார் அமலாபால். இவர் தற்போது தனுஷ் ஜோடியாக வேலை இல்லா பட்டதாரி படத்தில் நடிக்கிறார்.

பார்த்திபன் இயக்கும் கதை, திரைக்கதை, வசனம் இயக்கும் படத்தில் கவுரவ தோற்றத்தில் தோன்றுகிறார். மேலும் தெலுங்கு, மலையாளம் படங்கள் கைவசம் உள்ளன.

இந்தப் படங்களையும் அடுத்த மாதத்துக்குள் முடித்துக் கொடுத்துவிடப் போவதாகக் கூறியுள்ளார். திருமணத்துக்குப் பிறகு நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, அதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.

ஆனால் இயக்குநர் விஜய் குடும்பத்தினர், அமலா பால் தொடர்ந்து நடிப்பதை விரும்பவில்லையாம். எனவே நடிப்புக்கு குட்பை சொல்லிவிடுவார் என்றே கூறப்படுகிறது.


இசை கலைஞர்களை கௌரவித்த 'மேல்' படக்குழுவினர்!


புதுமுக இயக்குனர் அருள் இயக்கத்தில், புஷ்கர் ராஜ்குமார், நேகா என்ற புதுமுகங்களோடு, அப்புகுட்டி நடித்துள்ள படம் மேல். இப்படத்தின் இசை வெளியீடு இன்று காலை நடைபெற்றது. இசை அமைப்பாளர் உதயா, தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ் மற்றும் இயக்குனர் ஸ்டான்லி கலந்து கொண்டு வாழ்த்தினர். இவ்விழாவில் இசை வெளியீட்டை சதீஷ் வெளியிட, இசை கலைஞர்ர்கள் பெற்றுக் கொண்டனர். இளையராஜாவிடம் பணியாற்றி வரும் சேச்சா மற்றும் தெக்ஷ்ணா மூர்த்தி, தளபதி, லக்ஷ்மி நாராயணன், செபாஸ்டின், மோகன், லோகேஷ், இம்மானுவேல், குரு, கற்பகம் உள்ளிட்ட பலர் இசைதட்டை பெற்றுக்கொண்டனர்.

பின்னர் விழாவில் பேசிய இயக்குநர் அருள், மேல் என பெயர் வைத்ததற்கு விளக்கம் அளித்தார். இதுவரை வந்த சினிமாக்களில் காதல் இல்லாமல் நட்பு சொல்லப் படவில்லை, யதார்த்தமான வாழ்வியல் நட்பு வாழ்க்கை முறை தான் இந்த படம். இருபாலினத்தில் ஆண்கள் நட்பை இறுதி வரை வெல்ல முடிகிறது. திருமணத்திற்கு பிறகு பெண்கள் தொடர முடிவதில்லை. பெண்களின் உணர்வுகள் இது வரை சொல்லப்படாத கதை இந்த 'மேல்' படம். இந்த படம் சினிமாத்தனம் இல்லாத ஒன்று. கண்களை உறுத்தும் ஆடை ஆபரணங்கள், மேக்கப் என்று இல்லாமல் யதார்த்தத்தை, நாகர்கோயில் முழுக்க படமாக்கி உள்ளோம். நம்பிக்கையும், பொறுமையும் வெற்றியை எட்டி பிடிக்கும் இரு கரங்கள். அதை உணர்ந்தால் மற்றவரை விட நாம் மேல் என்ற கருத்து எல்லார் மனதிலும் நிற்கும் என்கிறார் இயக்குனர்.

நான் மட்டும் பையனாக பிறந்திருந்தால் 24 மணிநேரமும் லுங்கி தான் கட்டியிருப்பேன்: ஸ்ருதி ஹாஸன்


ஹைதராபாத்: நான் மட்டும் ஆணாக பிறந்திருந்தால் 24 மணிநேரமும் லுங்கி தான் கட்டியிருப்பேன் என்று நடிகை ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார். ஸ்ருதி ஹாஸன் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து நடித்த ரேஸ் குர்ரம் தெலுங்கு படம் கடந்த 11ம் தேதி ரிலீஸானது.

படம் ஆந்திரா, பிற மாநிலங்கள் தவிர வெளிநாடுகளிலும் நல்ல வசூலை அள்ளி வருகிறது. படம் நன்றாக ஓடுவதால் ஸ்ருதி மகிழ்ச்சியில் உள்ளார்.

லுங்கி டான்ஸ் ரேஸ் குர்ரம் படத்தில் ஸ்ருதி ஹாஸன் லுங்கி டான்ஸ் ஆடியுள்ளார். இந்த டான்ஸுக்கு ஆந்திராவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

ஸ்ருதி நான் மட்டும் ஆணாக பிறந்திருந்தால் 24 மணிநேரமும் லுங்கி தான் கட்டியிருந்திருப்பேன். ஆனால் பெண்ணாக பிறந்ததால் லுங்கி கட்ட முடியவில்லை. எனக்கு லுங்கி தான் மிகவும் பிடித்த உடை. லுங்கி கட்ட வேண்டும் என்ற என் ஆசை இந்த படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது என்றார் ஸ்ருதி.

போஸ்டர் ரேஸ் குர்ரம் போஸ்டர்கள் படு கவர்ச்சியாக உள்ளதாகக் கூறி ஆந்திராவில் பல இடங்களில் அவற்றை கிழித்து எறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓவர் கவர்ச்சி ரேஸ் குர்ரம் படத்தில் ஸ்ருதி ஹாஸன் ஓவர் கவர்ச்சியாக நடித்துள்ளார், குத்தாட்ட நடிகைகளை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடுவார் கவர்ச்சியில் என்று விமர்சனம் எழுந்தது.

ஷாருக்கான் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கான் தான் இந்த லுங்கி டான்ஸை அறிமுகப்படுத்தியது. அதையடுத்து ஆளாளுக்கு லுங்கி டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டனர்.


Polimer Tv Serial 23-04-2014 Madhubala Episode 302 23rd April 2014


எனக்கான படங்கள் எனக்கு கிடைக்கும்! அடித்து சொல்கிறார் அப்புக்குட்டி

 
'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் சூரி குளுவினரோடு அறிமுகமானவர் அப்புக்குட்டி, தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் அழகர்சாமியின் குதிரை படத்தின் மூலம் ஹீரோவாகவும் களமிறங்கினார். அப்படம் அவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது. தொடர்ந்து மன்னாரு படத்தில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அந்தப்படம் சரியாக போகவில்லை. இதனால் மீண்டும் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர், மேல், ஒன்பது புலி சம்பத், எங்க காட்டில் மழை தவிர இன்னும் சில பெயரிடப்படாத படங்களிலும் நடித்து கொண்டு பிஸியாக வலம் வருகிறார்.

மேல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அப்புக்குட்டியிடம் நாம் சந்தித்து பேட்டியெடுத்தோம். அப்போது, உங்களோடு அறிமுகமான சூரி எங்கேயோ போய்டாரே அப்பு, நீங்கள் எப்போது பெரிய படங்களில் இன்னும் ஜொலிக்க போறீங்க என்று கேட்டால்... என் ஒவ்வொரு படத்திலும் நகைச்சுவை எவ்வளோ முக்கியம் என்பதை உணர்ந்து நடிக்கிறேன். வெறும் காமெடி மட்டும் இல்லாமல் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக நான் நடிக்கிறேன். சூரி அணுகுமுறை வேறு, என் அணுகுமுறை வேறு. எனக்கென்று தனித்துவம், நடிப்பு, எல்லாமே இருக்கிறது. இப்போது நான் தனி டிராக் பண்ணி கொண்டிருக்கேன். ஒவ்வொரு படத்திற்கும் ஏதேனும் ஒரு விஷயம் புதுசா சொல்ல ஆசைபடுறேன். அதற்காக உழைக்கவும் செய்கிறேன். எனக்கான படங்கள் எனக்கு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன் என்று அடித்து சொல்கிறார் அப்புக்குட்டி.

Paasa Malar Sun Tv Serial 22-04-14 | Paasa Malar 22.04.14 | Paasa Malar 22/04/14 | Paasa Malar Serial Online | Sun Tv Paasa Malar Serial | Watch Paasa Malar Paasa Malar 22nd April 2014 | Latest Episode Of Paasa Malar 22nd April 2014 | Sun TV Serial Online Paasa Malar 22nd April 2014 | Paasa Malar today Episode:164


PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

சினிமாவில் பெருகும் பவுன்சர்கள் கலாச்சாரம்!


அரசியல்வாதிகள் தங்களைச் சுற்றி தொண்டர்படை, குண்டர் படை, பூனைப் படை, புலிப்படை என்றெல்லாம் வைத்துக் கொள்வார்கள். இதே பாணியை இப்போது சினிமா நட்சத்திரங்களும் பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதை ஆரம்பித்து வைத்தவர் சிவகார்த்திகேயன், மான் கராத்தேவின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு குண்டு குண்டான பவுன்சர்களின் பாதுகாப்போடு வந்தார் சிவகார்த்திகேயன். அதே பவுன்சர்கள் பாதுகாப்பு என்ற பெயரில் விழாவுக்கு வந்திருந்த வி.ஐ.பிக்களையும், மீடியாக்களையும் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கினார்கள். இந்த விஷயம் பெரிதாகவே இதற்காக மீடியாவிடம் மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன் பவுன்சர்களை நான் ஏற்பாடு செய்ய வில்லை என்று நழுவிக் கொண்டார்.

அதன் பிறகு விக்ரம் பிரபு பவுன்சர்கள் பாதுகாப்போடு அரிமா நம்பி பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்தார். அதே பிரச்னைகள்தான் அன்றும் நடந்தது. அதேப்போல் சந்தானம் ஷோலா ஹீரோவாக களம் இறங்கும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் இதே நிலை தான். இந்தவிழாவின் அந்த தியேட்டரின் கதவுகள் எல்லாம் உடைக்கப்பட்டது. இப்போது பவுன்சர்கள் பாதுகாப்போடு வளைய வருவதுதான் ஹீரோக்கள் தங்கள் இமேஜாக நினைக்கிறார்கள். முன்பு விலை உயர்ந்த கார்கள் ஹீரோக்களின் இமேஜ் அடையாளமாக இருந்தது. இப்போது பவுன்சர்கள் இமேஜ் அடையாளமாக மாறியிருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன், சிம்பு, விக்ரம் பிரபு, சூர்யா, கார்த்திக், சந்தானம் உள்ளிட்ட பலர் பவுன்சர்களோடுதான் படப்பிடிப்பிற்கே வருகிறார்களாம். நடிகைகளில் நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா பவுன்சர்கள் பாதுகாப்பு வைத்திருக்கிறார்கள். இந்த செய்தியை சொல்லும் அதே நேரத்தில் இன்னொரு செய்தியையும் சொல்வது பொருத்தமாக இருக்கும்.

சில நாட்களுக்கு முன்பு... தனியார் டிவி ஒன்றின் இரும்பு கேட்டுக்கு முன் ஒரு கார் வந்து நிற்கிறது. வாட்ச்மேன், "வெளி வாகனத்துக்கு உள்ளே அனுமதியில்லை ரோட்டின் ஓரத்திலேயே நிறுத்துங்கள்" என்கிறார். வாட்ச் மேனை காருக்குள் இருந்த ஒரு கை அழைத்தது. அருகில் சென்றார் வாட்ச் மேன். "கண்ணா... நான் ரஜினிகாந்த் வந்திருக்கேன். ஒரு இண்டர்வியூவிற்கு வரச் சொன்னாங்க. கார் உள்ளே போறதுக்கு பர்மிஷன் தர்றீங்களா?" என்றது அந்தக் குரல். உடல் வியர்த்துப்போன வாட்ச்மேன் கேட் கதவை திறந்து விட்டு இண்டர்காமில் விஷயத்தை சொல்ல ஓடிவந்திருக்கிறார்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள். தனி ஆளாக காரிலிருந்து இறங்கிய சூப்பர் ஸ்டார். பேட்டி கொடுத்து விட்டு தனி ஆளாக அதே காரில் திரும்பினார்.

Mundhanai Mudichu Sun Tv Serial 22-04-14 | Mundhanai Mudichu 22nd April 2014 | Sun Tv Serial 22nd April 2014 | Sun Tv Mundhanai Mudichu 22nd April 2014 | Sun Tv Serial Mundhanai Mudichu 22-04-14 | Mundhanai Mudichu 22.04.14 | Watch Mundhanai Mudichu Serial 22nd April 2014

PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

வதந்திகளை தடுக்கவே டுவிட்டர் கணக்கு தொடங்கிய சந்தானம்!

 
சமீபகாலமாக நடிகர், நடிகைகளைப்பற்றிய வதந்திகள் சொடக் போடும் நேரத்தில் சமூக வலைதளங்களில் பரவி விடுகிறது. அதனால் அவர்கள் ஏகப்பட்ட இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். அதனால்தான் சில நடிகர்கள், டுவிட்டர் கணக்கு தொடங்கி, அதில் தங்களைப்பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிவித்து வருகிறார்கள். சிலசமயங்களில் தவறான செய்திகள் வெளியானாலும் அதற்கு உடனே பதில் கொடுத்து ரசிகர்களை தெளிவுபடுத்திக் கொள்கிறார்கள்.

அந்த வகையில், தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை சிம்பு, தனுஷ், ஹன்சிகா, சிவகார்த்திகேயன், வடிவேலு, கெளதம்மேனன் உள்பட பலர் பேஸ்புக், டுவிட்டர் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களைத் தொடர்ந்து நேற்று முதல் சந்தானமும் டுவிட்டர் கணக்கு தொடங்கி அதை அறிவித்துள்ளார். இப்படி திடுதிப்பென்று அவர் டுவிட்டர் கணக்கு தொடங்க காரணமே, சமீபத்தில் மனைவியை விட்டு அவர் பிரிந்து விட்டதாக வெளியான செய்திதானாம். இந்த செய்தியால் ரொம்பவே மனசுடைந்து விட்டாராம் சந்தானம். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறான செய்திகள் பரவுவதை தடுக்க வேண்டும் என்று யோசித்த பின்னரே அவருக்கு இந்த டுவிட்டர் தொடங்கும் எண்ணம் ஏற்பட்டதாம்.

இனிமேல், தன்னைப்பற்றிய செய்திகளை இந்த டுவிட்டரில் உடனுக்குடன் தெரிவிக்க திட்டமிட்டுள்ள சந்தானம், ரசிகர்கள் கேட்கும் அனைத்துவிதமான கேள்விகளுக்கும் பதில் கொடுக்கப்போகிறாராம்.

Pudhu Kavidhai Vijay Tv Serial -23-04-14 | Pudhu Kavidhai 23rd April 2014 | Vijay Tv Serial 23rd April 2014 | Vijay Tv Pudhu Kavidhai 23rd April 2014 | Vijay Tv Serial Pudhu Kavidhai 23-04-14 | Pudhu Kavidhai 23.04.14 | Episode 88


An Pudhu Kavithai in its full steam of operations, with its nitty-gritties in business operations, relationship between various departments and people; the story of work place dynamics and politics, it would be one with which every Pudhu Kavithai goer of the present and past would relate to. As much as a story of work place, it is also an intense love story between two characters employed in the same organization. A story that every one would want their love story to be like.

Watch Online Puthu Kavithai. Puthu Kavithai. Vijay Tv Serial. Free Watch Online. Puthu Kavithai tamil serial. Puthu Kavithai. Puthu Kavithai Vijay tv Serials. Puthu Kavithai Serials. Vijay Tv Puthu Kavithai. Puthu Kavithai Live. Puthu Kavithai online. Puthu Kavithai 2014.

Andhra Mess On LocationSindhu Bhairavi Raj Tv Serial 23-04-14 | Sindhu Bhairavi 23rd April 2014 | Raj Tv Sindhu Bairavi Serial 23.04.14 | Raj Tv Serial Online | Raj Tv Tamil Serials Watch Online | Sindhu Bhairavi : Episode 965 23-04-14

PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Enamo Yedho Movie Press MeetUngal Kitchen Engal Chef (Gobi manchurian)


BURMA Movie 1st Look


Election 2014Manam Thirumbuthe With Director Arivazhagan- Puthuyugam Tv


Thirumoolar Ashtanga Yoga & its Health Benefits by Dr Asana Andiappan 23 04 2014Pengal Dot com | Pudhusu Pudhusu Thaan | 22nd April 2014Pengal Dot Com | Tips Special | 22nd April 2014KELVIKKENNA BATHIL - Exclusive Interview With Narendra ModiPadma Bhushan Award for Kamal Hasan... Kamal's Emotional TalkCaptain Tv News 05 pm 23-04-2014 

Receive techsatish updates via Facebook.Just Like Us!