ஒரு நாள் சாயங்கால வேளையில் வயதான பெண்மணி ஒருவர் கார் அருகில் வெகு நேரமாக நிற்பதை ஒருவர் கவணித்தார்.வாகணங்கள் செல்லும்போது அந்த பெண்மணி கை காட்டி நிறுத்தப்பார்த்தார் ,ஆனால் எந்த வாகனமும் நிற்கவில்லை.


அந்த நபர் அருகில் சென்று என்ன பிரச்சனை என்று அந்த பெண்மணியிடம் கேட்டார்.கார் டயர் பஞ்சர் ஆகி விட்டது என்று அந்த பெண்மணி கூறினார்.


என் பெயர் தயாளன் நீங்கள் காரில் உட்காருங்கள் நான் டயர் மாத்தி கொடுக்கிறேன் என்று டயரை கழட்ட ஆரம்பித்தார்.சிறிது நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு டயரை மாத்தினார் .


அந்த பெண்மணி உங்களுக்கு நான் எவ்வளவு பணம் தர வேண்டும் என்று கேட்டார்.நான் சிறியதாக ஒரு டீக்கடை நடத்தி வருகிறேன் ,அதில் இருந்து வரும் பணமே எனக்கு போதும்.நீங்கள் பணம் எதுவும் தரவேண்டாம் என்றார்.


நீங்கள் கஷ்டப்படும் நேரத்தில் என்னாலான உதவி செய்தேன் அவ்வளவே.நீங்கள் பண உதவி செய்ய வேண்டும் என்றால் வேறு யாராவது ஒரு நபர் கஷ்டத்தில் இருக்கும்போது என்னை நினைத்து பாருங்கள், அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்றார்.


உதவி செய்வது என்பது ஒரு சக்கரம் மாதிரி சுழன்று கொண்டே இருக்க வேண்டும்.நான் உங்களுக்கு உதவி செய்தேன் நீங்கள் வேறு யாருக்காவது கஷ்டத்தில் இருக்கும்போது உதவி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு தயாளன் நடக்க ஆரம்பித்தார்.


அந்த பெண்மணி தயாளனை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு காரை எடுத்து கொண்டு சென்றார்.வழியில் தலைவலி எடுப்பது போல் இருக்கவே அருகில் உள்ள டீக்கடை அருகே காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.


டீக்கடை பார்ப்பதற்க்கு ரொம்பவே பரிதாபமாக இருந்தது,உள்ளே இருந்து ஒரு பெண் வந்து என்ன வேண்டும் அம்மா என்று கேட்டார்.வயதான பெண்மணி டீ கடையில் வேலை செய்யும் பெண்ணை பார்த்தார், அந்த பெண் ஒன்பது மாத கர்ப்பிணி என்பதை அவரிடம் பேசி தெரிந்து கொண்டார்.


குடிக்க டீ கொண்டு வாம்மா என்றார்.தயாளன் சொன்னது அவருக்கு நினைவு வந்தது.அந்த அம்மா டீ குடித்துவிட்டு 5000 ரூபாய் பணத்தை டேபிள் மேல் வைத்து விட்டு சென்று விட்டார்.


டீ கடையில் வேலை செய்த பெண் காபி டம்பளரை கழுவி வைத்து விட்டு வந்தார். டேபிளில் கட்டாக பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.அதை எடுத்து கொண்டு அந்த வயதான பெண்மணியிடம் கொடுக்க ஓடினார்,அதற்குள் கார் கிளம்பி சென்று விட்டது.


கடையில் இருக்கும் வேலை எல்லாம் முடித்து விட்டு, கையில் அந்த வயதான பெண்மணி விட்டு சென்ற பணத்தையும் எடுத்து கொண்டு வீட்டுக்கு சென்றார்.


பிரசவ செலவுக்கு என்ன செய்ய போகிறோம் என்று புலம்பி கொண்டு இருந்த தன் கணவருக்கு இந்த பணத்தை காட்ட வேண்டும் என்று அருகில் சென்றார்.ஆனால் மிகுந்த அசதியால் தூங்கி கொண்டு இருந்தார் நம்ம தயாளன்.


”எதை நாம் செய்கிறோமோ, அதுவே நமக்கும் நடக்கும்”....

”எதை நாம் செய்கிறோமோ, அதுவே நமக்கும் நடக்கும்”....”உதவி சக்கரம்” ...?


*வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.

*அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.

*கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.

*தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.

*வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்.

*பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

*இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு சாப்பிடத் தோன்றும்.

*பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, முற்றியதாக இருந்தால் அகற்றி – தேவையான அளவு எலுமிச்சை ரசத்தில் கொட்டி வெளியில் வைத்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக ஊறிப் பக்குவப்படும். தினமும் நன்கு குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.

*தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது.

*எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.

*ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும்போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும்போது தனி மணமும், ருசியும் காணலாம்.

*இட்லியை குக்கரில் வேகவிடும்போது குக்கர் தண்ணீரில் கொத்துமல்லி தழை, எலுமிச்சம்பழத் தோல் இவற்றைப் போட்டால் இட்லி வாசனையாக இருக்கும்.

*பெருங்காயம் கல்போல் இருந்தால் உடைப்பது கஷ்டம். இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து தனித்தனியாகப் போட்டுவிட்டால் ஆறியவுடன் டப்பியில் போட்டுக் கொள்ளலாம்.

*இட்லிக்கு உளுந்தைக் குறைத்து, கெட்டியாக அரைத்து வார்க்கும்போது சிறிது நல்லெண்ணெய் விட்டுக் கொண்டால், இட்லி மிருதுவாக இருக்கும். இரண்டு தினங்களுக்குக் கெடாமல் இருக்கும். பிரயாணங்களுக்கு உகந்தது.
காய்கறிகளில் சில காய்கள் கசப்பு சுவையுள்ளவை. அவற்றை நறுக்கி அரிசி களைந்த நீரில் சற்று நேரம் போட்டு வைத்தால் கசப்பு நீங்கிவிடும்.

*காபி, தேனீர் போன்ற பானங்கள் சுவையும் மணமும் கொண்டதாக இருக்க, அவ்வப்போது புதிதாக இறக்கிய டிகாஷனையே பயன்படுத்த வேண்டும்.

*கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.

*காய்கறிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும்.

*மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காய்களையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.

*பால் வைக்கும் பாத்திரம் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான் பால் கெடாமல் இருக்கும். பாலுடன் இரண்டொரு நெல் மணிகளைப் போட்டு வைத்தால், காலையில் கறந்த பால் இரவு வரை கெடாமல் இருக்கும்.

*சமையலறையில் வைத்திருக்கும் உப்பில் குளிர் காலத்தில் ஈரக்கசிவு ஏற்படும். அப்படி ஆகாமல் இருக்க, சிறிது அரிசியைக் கலந்து வைக்கவும்.

*வாழைக்காய் நறுக்கும்போது கையில் ஏற்படும் பிசுக்கு நீங்க சிறிது தயிரால் கையைக் கழுவலாம்.

* காலிபிளவர், கீரை இவற்றை சமைப்பதற்கு முன்பு வெந்நீரில் சிறிது உப்பு சேர்த்து அதில் சிறிது நேரம் போட்டு வைத்தால் அவற்றில் உள்ள புழு, மண் அடியில் தங்கிவிடும்.

*குருமா, தேங்காய் சட்னி இவற்றிற்கு அரைக்கும்போது முந்திரி பருப்பு சில சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.

*அடைக்கு அரைத்த மாவில் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.

*ஜவ்வரிசியை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அடை, வடை, தோசை செய்யும்போது சிறிது ஜவ்வரிசி மாவு சேர்த்து செய்தால் மொறுமொறுவென்றிருக்கும்.

*அடை, பக்கோடா செய்யும்போது புதினா இலை சேர்த்து செய்தால் வாசனையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.

* தக்காளியின் தோல் நீக்க தக்காளியின் மேல்பக்கமும் கீழ்ப்பக்கமும் கத்தியால் சிறிது கீறிவிட்டு 10 நொடிகள் சுடுநீரில் போட்டு எடுத்தால் தோல் சுலபமாகக் கழன்று விடும்.

* சப்பாத்தி மாவுடன் சோயா மாவும் சேர்த்து சப்பாத்தி செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். புரோட்டின் சத்தும் கிடைக்கும்.

*சேமியா பாயசம் செய்யும்போது குழைந்து போய்விட்டால் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு அதில் சேர்த்தால் சேமியா தனித்தனியாகிவிடும்.

*குலோப்ஜாமூன் செய்யும்போது உருண்டை கல் போலாகிவிட்டால் ஜீராவுடன் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துவிட்டால் மென்மையாகிவிடும்.

*கட்லெட் செய்ய ‘பிரெட் கிரம்ப்ஸ்’ கிடைக்கவில்லையெனில் ரவையை மிக்சியில் அரைத்து பயன்படுத்தலாம்.

*கூடையில் வைத்திருக்கும் உருளைக்கிழங்கு முளை விடாமல் இருக்க, கூடவே, கூடையில் ஒரு ஆப்பிள் பழத்தையும் போட்டு வையுங்கள்.

*வீட்டில் டீ தயாரிக்க நீரைக் கொதிக்க விடும் போது ஒரே ஒரு புதினா இலையையும் போட்டுக் கொதிக்க விட்டுப் பாருங்கள். டீயின் மணமும், ருசியும் அபாரமாயிருக்கும்.

@ ரசம் தயாரிக்கும் போது சுண்டைக்காய் அளவு இஞ்சி சேருங்கள். சூப்பராக இருக்கும் ரசம்.

@ இட்லிக்கு மாவாட்டும்போது ஒரே ஒரு ஆமணக்கு விதையைத் தோல் நீக்கிப் போட்டுப் பாருங்கள். இட்லி விள்ளாமல் விரியாமல் மெத்மெத்தென்று இருக்கும்.

@ காட்டு நெல்லிக் காயைக் கழுவி, கொதிக்க வைத்த நீரில் போட்டு சிறிது உப்பு போட்டு மூடி வையுங்கள். வைட்டமின் குறையாத ஊறுகாய் ரெடி.தேவைப்பட்டால் மிளகாய்ப் பொடியும் போட்டுக் கொள்ளலாம்.

@ அடைக்கு அரைக்கும் போது மர வள்ளிக் கிழங்கை உரித்து சில துண்டுகள் நேர்த்து அரைக்கலாம். உருளைக் கிழங்கையும் துண்டுகளாக்கிப் போட்டு அரைக்கலாம். மொறுமொறுவென்று இருக்கும் அடை.

@ மிஞ்சி விட்ட பழைய சோற்றை உப்பு போட்டுப் பிசைந்து நாலைந்து மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடி செய்து போட்டுக் கலந்து சிறிய உருண்டைகளாய் உருட்டி வெயிலில் வைத்து விடுங்கள். சோற்று வடாம் ரெடி.

@ பச்சைக் கொத்துமல்லித் தழையைப் பச்சையாகவே துவையல் அரைக்கும் போது புளி போடுவதற்குப் பதிலாக ஒரு துண்டு மாங்காயைப் போட்டு அரைத்தால் சுவையும் மணமும் அதிகமாகும்.

@ மோர்க் குழம்பு வைக்கும் போது அரிநெல்லிக்காய் களை அரைத்துப் போட்டால் சுவை மிகுதியாக இருக்கும்.

மிகுந்த பயனுள்ள சமையல் குறிப்புகள்


புத்தகங்களை படித்துப் படித்து தன் அறிவை பெருக்கிக்கொண்ட ரூசோ வரலாற்று நாயகர் !!


உலகம் இதுவரை கண்டிருக்கும் புரட்சிகளையெல்லாம் கூர்ந்து கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். அந்த புரட்சிகளுக்கு வித்திட்டவர்கள் ஒன்று வீரத்தை முதலீடாக கொண்ட மாவீரர்களாக இருப்பார்கள். அல்லது எழுத்தை முதலீடாக கொண்ட மாமேதைகளாக இருப்பார்கள். மாவீரர்கள் நம்பியிருப்பது போர்வாள் முனையை. மாமேதைகள் நம்பியிருப்பது பேனா முனையை. பெரும்பாலான நேரங்களில் போர்வாள் முனையை விட பேனா முனையே கூர்மையாக செயல்பட்டிருக்கிறது.

வரலாற்றில் வலிமையான பேனா முனையால் எத்தனையோ சாம்ராஜ்யங்கள் வாழ்ந்திருக்கின்றன. எத்தனையோ சாம்ராஜ்யங்கள் வீழ்ந்திருக்கின்றன. அப்படி வீழ்ந்த ஒரு சாம்ராஜ்யம்தான் பதினேழாம் நூற்றாண்டில் பிரான்சில் மன்னன் லூயியின் ஆட்சி. வரலாற்றில் முதல் புரட்சி என்று வருணிக்கப்படும் ‘பிரெஞ்சு புரட்சி’யின் மூலம் அவரது ஆட்சி கவிழ்ந்தது. அந்த புரட்சிக்கு வித்திட்ட இருவரில் ஒருவரைத்தான் சந்திக்கவிருக்கிறோம். இந்த வரலாற்று நாயகருக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.

வாழும்போது வறுமையுடன் போராடிய அவர் மறைந்தபோது ஒரு சராசரி மனிதனாக கருதப்பட்டு சாதாரண இடுகாட்டில் புதைக்கப்பட்டார். ஆனால் பதினாறு ஆண்டுகள் கழித்து அவருக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கவே புதைக்கப்பட்ட அவரது சடலம் தோண்டியெடுக்கப்பட்டு மீண்டும் அலங்கரிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்து வர புகழ்பெற்ற Pantheon-அரங்கில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. உலக வரலாற்றில் இப்படிபட்ட மரியாதையை பெற்றவர் அவர் ஒருவர்தான் அவர் பெயர் ரூசோ. 1712-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 28-ஆம் நாள் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் (Geneva) ஐசக் ரூசோ, சுசேன் பெர்னார்ட் ரூசோ தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார் ரூசோ. பிறந்த ஒருவாரத்திற்குள் அவரது தாயார் காலமானார். எனவே தந்தையின் கண்காணிப்பில்தான் வளர்ந்தார் ரூசோ.

தந்தை கடிகாரம் பழுது பார்க்கும் வேலையில் இருந்தார். குடும்பம் ஏழ்மையில் வாடியது. தந்தைக்கு தலைசிறந்த தத்துவ நூல்களைப் படிப்பதில் பெரும் ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வம் ரூசோவுக்கும் பரவியது. குடும்ப ஏழ்மை காரணமாக அவர் முறையாக பள்ளிக்கு சென்று கல்வி கற்க முடியவில்லை. ரூசோவுக்கு ஏழு வயது நிரம்பும் முன்னே எழுதவும், படிக்கவும் கற்றுக்கொடுத்தார் தந்தை. அந்த சிறிய வயதிலேயே கிரேக்க காவியங்களையும், ரோமின் வரலாற்றையும் மகனுக்கு படித்துக் காட்டுவார் தந்தை. அதனால் பலவித நூல்களை படிக்கும் ஆர்வம் ரூசோவுக்கு இளம்வயதிலேயே ஏற்பட்டது. பதினான்காம் வயதில் ஒரு வழக்கறிஞரிடம் வேலைக்கு சேர்ந்தார் ரூசோ. நீதிமன்ற தீர்ப்புகளை நகல் எடுப்பது அவரது பணி. அந்த வழக்கறிஞர் தன்னை நடத்திய விதம் பிடிக்காமல் போகவே வேலையை விட்டு வெளியேறினார்.

வறுமை காரணமாக ஏதாவது வேலை செய்தே ஆக வேண்டும் என்ற நிலை எனவே ஒரு சிற்பியிடம் வேலைக்கு சேர்ந்தார். அந்த சிற்பி ரூசோவை அடிமைபோல் நடத்தியதாலும், ஏதாவது சிறு தவறு செய்தாலும் காட்டுமிராண்டித்தனமாக தண்டித்ததாலும் அந்த வேலையை விட்டும் அவர் வெளியேறினார். ‘ஒருவனை சார்ந்து வாழ்வதைவிட சாவதே மேல்’ என்ற எண்ணம் அவரிடம் தோன்றியது. இருந்தாலும் வறுமை விரட்டியதால் அடுத்த சில ஆண்டுகளுக்கு பல்வேறு வேலைகளை செய்தார்.

என்னதான் பிரச்சினை வந்தாலும் அவர் நூல்கள் வாசிப்பதை கைவிட்டதில்லை. எப்போதும் ஏதாவது நூலை படித்துக்கொண்டே இருப்பார். அவர் மனிதர்களோடு பேசியதைவிட புத்தகங்களோடு பேசியதுதான் அதிகம். ஒருமுறை கடையில் ஒரு புதிய புத்தகத்தைப் பார்த்தார் ரூசோ. அதை எப்படியாவது வாங்கி வாசித்துவிட வேண்டும் என்ற ஆவல் ஆனால் கையில் பணம் இல்லை என்ன செய்தார் தெரியுமா? தனது உடைகளை விற்று அந்த புத்தகத்தை வாங்கினார். அடுத்த இரண்டு நாட்களுக்கு சாப்பாடு இல்லை இருந்தும் புத்தகத்தை படித்து முடிப்பத்திலேயே அவர் கவனம் செலுத்தினார்.

இப்படி புத்தகங்களை படித்துப் படித்து தன் அறிவை பெருக்கிக்கொண்ட ரூசோ தமது முப்பதாவது வயதில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். இத்தாலி, பாரிஸ் என்று இரண்டு இடங்களிலும் சில ஆண்டுகளை கழித்தார். அங்கும் எந்த வேலையிலும் அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை. சுயசிந்தனையும், தன்மான உணர்வும் கொண்ட ரூசோவினால் எவரிடமும் அடங்கிப் பணியாற்ற முடியவில்லை. இடையில் நாடகம் கவிதை என நிறைய எழுதினார்.

ஒருமுறை பிரெஞ்சு பத்திரிக்கை ஒன்று ‘அறிவியல் வளர்ச்சி மனிதனின் ஒழுக்கத்தை உயர்த்தியிருக்கிறதா’ என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. தமது எண்ணங்களை அழகாகவும், தெளிவாகவும் எழுதி அந்த போட்டிக்கு அனுப்பினார் ரூசோ. அந்த போட்டியில் அவருக்கு முதல் பரிசு கிடைத்தது. அதன்பிறகு அவரது எழுத்துக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. பாரிசிலேயே பல ஆண்டுகள் தங்கி பல நூல்களை எழுதி வெளியிட்டார்.
ரூசோ எழுதிய மிகச்சிறந்த தத்துவ நூல் ‘The Social Contract’ எனப்படும் சமுதாய ஒப்பந்தம். “மனிதன் சுதந்திரமாகத்தான் பிறக்கிறான் ஆனால் எங்கும் அடிமை சங்கிலியால் கட்டப்பட்டுள்ளான்” என்ற புகழ்பெற்ற வரிகளுடன் தொடங்கும் அந்த நூல் 1762-ஆம் ஆண்டு வெளியானது.

அரசன் என்பவன் மக்களின் நலனுக்காக மக்களோடு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் பயனாய் உருவானவன். மக்களின் உரிமைகளை காப்பாற்றுகிற வரையில்தான் அவன் அரசன். அவ்விதிகளை அரசன் மீறும்போது மக்களும் தம்மைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்த விதிகளை மீறலாம் என்பதுதான் அந்த நூலில் அவர் கூறியிருந்த கருத்து. அதன்பிறகு அவர் எழுதிய ‘Emile’ எனும் நூல் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. குழந்தைகளுக்கு கல்வி கற்கும் முறை பற்றி எடுத்துரைத்தது அந்த நூல்.

ரூசோவின் வெற்றிகளை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் அந்த இரண்டு நூல்களுமே சமயத்திற்கு எதிரானது என்ற பிரச்சாரத்தை தொடங்கினர். பிரான்சும், ஜெனிவாவும் அந்த நூல்களை தடை செய்தனர். பிரெஞ்சு அரசாங்கம் அவரது எதிர்ப்புப்போக்கை வெறுத்ததால் பாரிஸ் நீதிமன்றத்திற்கு முன் அவரது நூலை தீயிட்டுக் கொளுத்தியது. ரூசோ கிளர்ச்சியை ஏற்படுத்துவார் என்று அஞ்சி அவரை பிரான்சுக்குள் நுழையக்கூடாது என்றும் ஆணை பிறப்பித்தது. பின்னர் தாம் எழுதிய ‘Perpetual peace’ என்ற நூலில் ஐரோப்பிய நாடுகளுக்கென கூட்டுசங்கம் ஒன்று உருவாக வேண்டும். ஒவ்வொரு நாடும் போரை வெறுக்க வேண்டும். ஏதாவது ஒரு நாடு அவ்வாறு செய்யத்தவறினால் மற்ற நாடுகள் அதனை புறக்கணிக்க வேண்டும். அதோடு ஐரோப்பிய படைகள் அந்த நாட்டை நசுக்க வேண்டும். என்ற கருத்துகளை கூறியிருந்தார் ரூசோ. அந்த கருத்துதான் பல ஆண்டுகள் கழித்து ஐக்கியநாட்டு சபை உருவாக காரணமாக இருந்திருக்கும் என சில வரலாற்றறிஞர்கள் கூறுகின்றனர்.

ரூசோவின் சிந்தனைகள் படித்தவர்கள், இளையர்கள், தொழிலாளிகள் என எல்லாத்தரப்பினரிடமும் செல்வாக்கு பெற்றது. தன் எழுத்தாலும் சொல்லாலும் மக்களை சிந்திக்கத் தூண்டியவர் அவர். அப்போது பிரான்சின் சமூக பொருளாதார அரசியல் சூழ்நிலை மிக மோசமாக இருந்தது. எங்குப்பார்த்தாலும் ஊழலும், அதிருப்தியும், அதிகார துஷ்பிரயோகமும்தான் நிலவின. அரசன் மிகப்பெரிய சர்வாதிகாரி என்று கருதப்பட்ட அந்தக்காலக்கட்டத்தில் மக்களின் நலன் காப்பதை அரசன் மீறும்போது மக்களும் கட்டுப்பாட்டை மீறலாம் என்ற புரட்சிக்கருத்தை வெளியிட்டார் ரூசோ. அதனால்தான் 1789-ஆம் ஆண்டு மக்கள் ஒன்று கூடி அரசனுக்கு எதிராக ஒரு பெரும் புரட்சியை செய்தனர். அந்த பிரெஞ்சு புரட்சியில் மன்னன் லூயியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதற்கு பிறகு உலகில் ஏற்பட்ட ரஷ்ய புரட்சி, இந்திய விடுதலை போராட்டம் போன்றவற்றுக்கும் ரூசோவின் சிந்தனைகள் உதவியிருக்கின்றன.

அப்படிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரட்சிக்கு வித்திட்ட ரூசோ 1778-ஆம் ஆண்டு ஜுலை 2-ஆம் நாள் தமது 66-ஆவது வயதில் காலமானார். அவர் இறந்து பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகுதான் பிரெஞ்சு புரட்சி வெடித்தது. ரூசோ இல்லாதிருந்தால் பிரெஞ்சு புரட்சியே ஏற்பட்டிருக்காது என்று மாவீரன் நெப்போலியன் கூறியிருக்கிறார். தனது வாழ்க்கையின் பெரும்பாலான பகுதியை வறுமையில் கழித்தும் வளமான சிந்தனைகளை உலகுக்கு தந்தார் ரூசோ. முறையாக பள்ளிக்கு செல்லாவிட்டாலும் அவரால் உலகம் போற்றும் சிந்தனைகளை தர முடிந்தது.

ஒரு தேசத்தையே வீறுகொண்டு எழச்செய்ய முடிந்தது. அதற்கு காரணம் அவரிடம் இருந்த சிந்தனைத்தெளிவும் அடிமைத்தனம் என்பதே இல்லாமல் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்ற உயரிய எண்ணமும்தான். ரூசோவைப்போன்று நல்ல எண்ணங்களையும், தெளிவான சிந்தனைகளையும் வளர்த்துக்கொள்ளும் எவராலும் புரட்சிகளை உருவாக்க முடியும் அதன்மூலம் நாம் விரும்பும் வானத்தையும் வசப்படுத்த முடியும்.

ரூசோ வரலாற்று நாயகர் !!


வன் கர்மங்களை உருவாக்குவதில் சுதந்திரமாகச் செயல்படுகிறது. ஆனால், அந்தக் கர்மங்கள் செயல்பட வரும் போது ஜீவன் அந்தக் கர்மங்களுக்கு அடிமையாகி விடுகிறது. உதாரணமாக, ஒருவன் மரத்தில் ஏறும் போது பிறர் உதவியின்றி தானாக ஏறிவிடுகிறான். ஆனால், அவன் தவறிக் கீழே விழும் போது பிறர் உதவியை நாட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

கஷ்டம், கஷ்டம்! அறிவிலியான நான் நற்பாதையை அறியாத வரையில் கொடிய சம்சாரக் கட்டில் நெடுங்காலம் சுற்றி அலைந்தேன். இது என் அறியாமையாகும்.

பித்த ஜூரம் உள்ளவனுக்கு இனிப்பும் கசப்பாக இருப்பது போன்று, தீயகாட்சி உடையவனுக்கு அறம் பிடிப்பதில்லை. ஏனென்றால், தீயகாட்சி உடையவனுடைய நோக்கம் நேர்மைக்கு எதிராக இருப்பதால் அவன் அறத்தை ஏற்பதில்லை.

தீயகாட்சி உடையவனிடம் கோபம் முதலிய குற்றங்கள் மிகுதியாக நிறைந்திருக்கின்றன.ஆதலால், அவன் ஜீவன் - உடல் ஆகிய இரண்டையும் வேறுபாடின்றி ஒன்றாகக் கருதுகிறான். அவன் பேதைமை உள்ளவனாவான். (ஜீவன் அதாவது ஆத்மா வேறு;உடல் வேறு என்று உணர்வது விவேகியின் செயலாகும்)

விருப்பும் வெறுப்பும் கர்மத்திற்கு ஆணி வேர். கர்மம் மோகத்தால் (ஆசையால்) உண்டாகிறது. அது பிறப்புக்கும் இறப்புக்கும் மூல காரணமாகும். பிறப்பதும் இறப்பதும் துன்பத்திற்கு அடிப்படை காரணம் என்று பெரியோர்களால் சொல்லப்பட்டிருக்கிறது.

வலிமையுள்ள கொடிய எதிரி செய்யாததை விருப்பு - வெறுப்பாகிய குற்றம் செய்துவிடுகிறது.

இந்த உலகில் பிறப்பு, இறப்பு, முதுமை ஆகியவற்றால் துன்பப்படும் ஜீவனுக்கு சுகமே கிடையாது. எனவே, துன்பமில்லாத முக்தியே ஏற்றது.

பற்றின்மையை ஏற்படுத்தும் செயல்களைச் செய்ய வேண்டும். பற்றின்மை உலக துன்பத்திலிருந்து விடுதலை பெற்றுத் தருகிறது. பற்றோ எண்ணற்ற காலம் வரை துன்பக் கடலில் உழலச் செய்கிறது.

முக்தி பெறுவதற்குரிய வழியாக இருப்பது ஐம்புலனடக்கம். ஐம்புலன்களை அடக்குவதன் மூலம், மனதால் ஏற்படும் குற்றங்களை நாம் ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

அறம் சிறந்த மங்கலப் பொருளாகும். கொல்லாமை, ஒழுக்கம் ஆகியவை அறத்தின் இலட்சணம் ஆகும். எவருடைய மனம் எப்போதும் அறத்தில் ஈடுபாடு கொண்டிருக்கிறதோ, அந்தத் தூயவர்களைத் தேவர்களும் வணங்குகிறார்கள்.

பொருள்களில் இயற்கைப் பண்பே அறமாகும். அது பொறுமை முதலியவற்றின் அடிப்படையில் பத்து வகை பிரிவுகளைக் கொண்டது. நற்காட்சி, நல்ல ஞானம், நல்லொழுக்கம், ஜீவ தயை (கருணை) ஆகியவை சேர்ந்தது அறம் எனப்படும்.

முற்றிலும் பொறுமை, நேர்மை, உண்மை, தூய்மை, கருணை, மாசற்ற ஒழுக்கம், தூயதவம், பற்றின்மை, ஒரு சிறிதும் ஆசைப்படாமல் இருத்தல், இடைவிடாத ஆன்ம ஈடுபாடு ஆகிய இந்தப் பத்தும் ஒரு வகையில் அறம் எனப்படும்.

தேவர்கள், மனிதர்கள், விலங்குகள் ஆகியவர்களால் கொடிய துன்பங்கள் ஏற்படும் போது கோபம் கொள்ளாமல் அமைதியாகப் பொறுத்துக் கொள்வதுதான் உத்தம லட்சணம் என்ற குறைவற்ற முழுமையான பொறுமையாகும்.

மகாவீரர் பொன்மொழிகள்


PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Sun Tv Show Amudha Mozhigal 14-09-14

1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை......
நேரம்
இறப்பு
வாடிக்கையளர்கள்

2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளை விரோதியாக்கும்.......
நகை
மனைவி
சொத்து

3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது.....
புத்தி
கல்வி
நற்பண்புகள்

4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்......
உண்மை
கடமை
இறப்பு

5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை....
வில்லிலிருந்து அம்பு
வாயிலிருந்து சொல்
உடலிலிருந்து உயிர்

6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்.......
தாய்
தந்தை
இளமை

7.மூன்று பொருள்கள் திரை மறைவுக்கு உகந்தது......
சொத்து
ஸ்திரி
உணவு

8.இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு.....
தாய்
தந்தை
குரு

அந்த மூன்று விஷயங்கள்.....


சோயாபீன்ஸ் மற்றும் வெள்ளைக் கடலையில் (கொண்டை கடலை அல்லது மூக்கு கடலை) உள்ள சத்துகள் ஸ்டிரோக் (Strokes) எனப்படும் பக்கவாதம் உள்ளிட்ட வாதம் தொடர்புடைய நரம்பியல் நோய்களைக் குணப்படுத்தக் கூடியவை என்று தெரிய வந்துள்ளது.

உணவில் அதிகளவில் சோயாபீன்ஸ், கொண்டைக் கடலை உள்ளிட்ட புரதச் சத்துகள் நிறைந்த பயறு வகைகளை எடுத்துக் கொள்வதால், அவற்றில் காணப்படும் இஸோஃப்ளேவோன் (isoflavone), பக்கவாத நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதாக லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

மேலும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு இந்த வகை பயறுகளை கொடுப்பதால், அவர்களுக்கு நல்ல குணம் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

மூளையின் நரம்பு மண்டலத்தில் இரத்தம் பயணிப்பதில் பாதிப்பு ஏற்படுவதாலேயே பக்கவாதம் ஏற்படுகிறது. மூளைக்கு இரத்தம் சென்று வருவதில் ஏற்படும் பாதிப்பினாலேயே இதுபோன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

எனவே உடல்நலத்தில் அதிக அக்கறை செலுத்துவோர், பயறு வகைகளுடன் கூடிய சமச்சீர் உணவு வகைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஆய்வுக்குத் தலைமை வகித்த ஹாங்காங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹங்-ஃபேட் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய இதய மருத்துவ இதழில் அவரது ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

****************************************

ஆரோக்கியம் தரும் கொண்டைக் கடலை ஹம்முஸ் (hummus)

அரபிகளின் உணவுகளில் இந்த குபூஸ் மற்றும் சிக்கன்,பிலாபிலுக்கு இந்த ஹமூஸ் இல்லாமல் இருக்காது.

இது பல சுவைகளில் தயாரிக்கலாம். அதில் சுலபமுறை இது.

தேவையானவை:

கொண்டை கடலை - 100 கிராம் (அரை டம்ளர்)
பூண்டு - இரண்டு பல்
லெமன் - ஒன்று
(தஹினா) வெள்ளை எள் - முன்று தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
வெள்ளை மிளகு தூள் - கால் தேக்கரண்டி
பப்பரிக்கா பவுடர் -சிறிது
ஆலிவ் ஆயில் - முன்று மேசை கரண்டி

செய்முறை:

1.கொண்டைக்கடலையை எட்டு மணி நேரம் ஊறவைத்து வேகவைத்து கொள்ளவும்.

2.வெந்த கொண்டைகடலையை ஆறியதும் பூண்டு, வெள்ளை எள் எலுமிச்சை சாறு உப்பு தேவையான அளவு தண்ணீர் ( கடலை வெந்த தண்ணீரே கூட பயன் படுத்தலாம்) சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

3.ரொம்ப கெட்டியாக இருந்தால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

4. கடைசியாக ஆலிவ் ஆயில் கலந்து பப்பரிக்கா பவுடர் கொண்டு அலங்கரிக்கவும்

5. சுவையான ஹமூஸ் ரெடி


குறிப்பு

1.இது நம் சுவைக்கேற்ப தயாரிக்கலாம், ஆனால் கலர் தான் சிறிது வித்தியாசப்படும்.

2. வெள்ளை மிளகு இல்லை என்றால் சிறிது மிளகாய் தூள், (அ) கருப்பு மிளகும் சேர்த்து கொள்ளலாம்.

3. இதையே சிறிது தயிர் வெங்காயம் சேர்த்து கொஞ்சம் நீர்க்க அரைத்தால் பிலாபில் சாண்ட்விச், சவர்மா சாண்ட்விச்சுக்கு பயன் படுத்தும் சாஸ் ஆகவும் பயன் படுத்தலாம்.

4. கைபடாமல் பிரிட்ஜில் வைத்து என்றால் நான்கு நாட்கள் பயன் படுத்தலாம்.

5. அடிக்கடி ஹமூஸ் சாப்பிடுபவர்கள் எள் பேஸ்ட் தனியாகவே விற்கிறது கடைகளில் அதை வாஙகி வைத்து சுலபமாக பூண்டு பொடி சேர்த்தும் தயாரிக்கலாம்.

6. வெளிநாடுகளில் கொண்டைகடலை கூட டின்னில் ரெடி மேட் கிடைக்கிறது. நான் இதில் எல்லாமே பிரெஷ் தான் பயன் படுத்தி உள்ளேன்.

7. புளிப்பு சுவை அதிகம் விரும்பதவர்கள் அரை பழம் பிழிந்து கொண்டால் போதுமானது.

8. இது குபூஸுக்கு என்றில்லை சப்பாத்தி ரொட்டி பூரிக்கும் தொட்டு சாப்பிட நல்ல இருக்கும்.

பக்கவாதத்தைக் குணமாக்கும் கொண்டைக் கடலை மற்றும் சோயாபீன்ஸ் (நரம்பு மண்டலம /இரத்த பாதிப்பு)

வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பிளேக்கை அகற்றவும் தினசரி பல் துலக்குவது அவசியம். வாயின் சுகாதாரத்தைப் பேணுவதற்கு டூத் பிரஷை சரியான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம். மேலும் 3-4 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது பிரிஸில்கள் தேய ஆரம்பித்தவுடன் டூத் பிரஷை மாற்றுவது அவசியம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி, உங்கள் டூத் பிரஷ், கிருமிகளின் பண்ணையாக இருக்கிறது என்று இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதிலும் மூடி வைக்கப்படாத ஒரு டூத் பிரஷில் 100 மில்லியன் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன. வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ஈ-கோலி பாக்டீரியாவும், தோல் தொற்று நோயை ஏற்படுத்தும் ஸ்டாபில்கோலி பாக்டீரியாவும் இதில் அடங்கும்.


உங்கள் டூத் பிரஷில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருப்பது என்ன தெரியுமா?

ஏராளமான கிருமிகளின் பண்ணையே அதற்குள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மூடி வைக்கப்படாத ஒரு டூத்பிரஷில் 100 மில்லியன் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன. வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ஈ-கோலி பாக்டீரியாவும், தோல் தொற்று நோயை ஏற்படுத்தும் ஸ்டாபில்கோலி பாக்டீரியாவும் இதில் அடக்கம்.

வாய் நிறைய பாக்டீரியா

ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நுண்ணுயிர்கள் நம் வாயில் உற்பத்தியாகி, வாடகை கொடுக்காமல் வசிக்கின்றன. இது ஒரு பெரிய விஷயமில்லை. பிரச்சனை எப்பொழுது தொடங்குகிறது என்றால், இந்த பாக்டீரியாக்களின் எண்ணிக்கை வழக்கத்துதிற்கு மாறாக அதிகரிக்கும் போது தான். பல்லைத் துலக்கும் போது நீங்கள் அகற்றுகிறீர்களே மஞ்சள் படிவுகள், அவை எல்லாமே பாக்டீரியாக்கள் தான். அவை உங்கள் வாய் என்ற வாடகை வீட்டிலிருந்து டூத் பிரஷ் என்ற அவுட் ஹவுஸுக்கு இடம் மாறுகின்றன.

பல் துலக்குவதால் எப்படி காயம் ஏற்படுத்துகிறது?

டூத் பிரஷ் மேலும் கீழும் இயங்கும் போது ஈறுகளைப் பின்னுக்கு அழுத்துவதால் காயம் ஏற்படுகிறது. இப்பொழுது டூத் பிரஷில் உள்ள கிருமிகள் மீண்டும் உங்கள் வாய்க்கு இடம் மாறுகிறது. உங்கள் வாய் பழக்கப்பட்ட இடம் தான் என்பதால், அவை பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் டூத் பிரஷை மற்றவர்கள் பயன்படுத்தினால் அவ்வளவு தான். கிருமிகள் ஜம்மென்று புது இடத்துக்குக் குடி போய்விடும். மேலும் குணமாகிவிட்ட வியாதிகள் கூட சந்தோஷமாகத் திரும்பி வந்துவிடும்.

டூத் பிரஷால் நீங்கள் நோயாளி ஆக வாய்ப்பிருக்கிறதா?

அநேகமாக இல்லை. என்ன தான் உங்கள் வாய் ஒரு கிருமிப் பண்ணையாக இருந்தாலும், உங்கள் வாய்க்கும் டூத் பிரஷுக்கும் இடையே கிருமிகள் தினசரி போக்குவரத்து நடத்தினாலும், உங்கள் உடலில் உள்ள இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி எப்போதும் செயல்பாட்டில் இருப்பதால், பல் துலக்குவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு குறைவு.

கழிவறை இருக்குமிடத்தில் பல்துலக்காதீர்கள்

பெரும்பாலான குளியலறைகள் மிகச் சிறியவை. நிறைய வீடுகளில், கழிப்பிடமும், குளியலறையும் ஒன்றாகவோ அல்லது மிக அருகிலோ இருக்கும். ஒவ்வொரு முறையும் கழிப்பறையைப் பயன்படுத்தும் போது, அதன் மூலம் காற்றில் ஏராளமான பாக்டீரியாக்கள் சுற்றுலா செல்கின்றன. அதனால் டூத் பிரஷ்கள் அருகில் இருக்கும் போது, அவற்றின் மேல் ஏற்கெனவே பாக்டீரியா நண்பர்கள் இருப்பதால், அங்கேயே தங்கிவிடுகின்றன. அதனால் டூத் பிரஷ்களை உங்கள் கழிப்பறையிலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி வைக்க முடியுமோ அவ்வளவு தூரம் தள்ளி வையுங்கள்.

டூத் பிரஷ் ஸ்டாண்டுகள் மற்றும் ஹோல்டர்கள்

பலரின் வாய்க்கிருமிகளும், கழிப்பறையிலிருந்து காற்றில் கலந்து வரும் கிருமிகளும் ஒன்றாய்ச் சங்கமிக்கும் இடமாக இது இருக்கிறது. வீட்டிலேயே மூன்றாவது அசுத்தமான இடம் இதற்குத் தான்.

டூத் பிரஷ் வைக்கும் குறிப்புகள்

* ஒவ்வொரு முறை பல் துலக்கியதும் குழாய்த் தண்ணீரில் நன்கு அலசிக் கழுவி உதறி வையுங்கள்.
* ஒரு முறை பிரஷ் செய்துவிட்டு, அடுத்த முறை பிரஷ் செய்வதற்கு இடைப்பட்ட நேரத்தில் அது நன்கு உலர்ந்திருக்க வேண்டும். ஏனெனில் ஈரப்பதமான டூத் பிரஷ், பாக்டீரியாக்களுக்கு ஜாலியான தங்குமிடம் ஆகும்.
* தலைப்பாகம் மேலே வரும்படி நிறுத்தி வையுங்கள். டூத் பிரஷ்களை தனித்தனியாக நிறுத்தி வைக்கும் ஸ்டாண்டுகளை உபயோகியுங்கள்.
* உங்கள் டூத் பிரஷ் உங்களுடையது மட்டுமே. உங்கள் சகோதரி, சகோதரன், கணவன், மனைவி, ரூம் மேட் ஆகியோரிடம் நீங்கள் எவ்வளவு அன்புடையவராக இருந்தாலும் சரி, டூத் பிரஷ் ஒரு பகிர்ந்து கொள்ளும் விஷயம் இல்லை. இல்லை. இல்லை.

எப்பொழுது உங்கள் டூத் பிரஷை மாற்ற வேண்டும்?

ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் டூத் பிரஷை மாற்றி விட வேண்டும். உங்கள் டூத் பிரஷ் தேய ஆரம்பிப்பது, நீங்கள் நோயுற்றிருப்பதற்கோ அல்லது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்திருப்பதற்கோ அது அறிகுறி. அப்பொழுது நீங்கள் அடிக்கடி உங்கள் டூத் பிரஷை மாற்ற வேண்டும்.

வாயை நல்ல படியாகப் பராமரியுங்கள்

ஈறு சம்பந்தமான நோய்கள், பற்சிதைவு, பல் சொத்தை மற்றும் வாய் துர்நாற்றம் ஆகியவை ஏற்படக் காரணம் பாக்டீரியாக்களே. எவ்வளவு முடியுமோ அவ்வளவு முறைகள் பல் துலக்குவதும், ஃப்ளாஸ், வாயில் எண்ணெய் கொப்பளிப்பதும் பெரும்பாலான பாக்டீரியாக்களை வெளியேற்றிவிடும். பல் துலக்கும் முன்பாக பாக்டீரியாவை எதிர்க்கக் கூடிய மௌத் வாஷ் பயன்படுத்தி வாய் கொப்பளிப்பதன் மூலம், வாயிலிருந்து பாக்டீரியா டூத் பிரஷுக்கு டிரான்ஸ்பர் ஆவதைத் தடுக்கலாம்.

தினமும் பல் துலக்க பயன்படுத்தும் டூத் பிரஷ்ஷின் அசிங்கமான ரகசியங்கள்!!!

இயற்கையின் வினோதப் படைப்புகள் அனைத்தும் வியப்பிற்குரியவை. அதில் மானிடப் படைப்பு அதனினும் வியப்புக்குரியது. இதையே சித்தர்கள் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்றனர்.

கண் கருவிழியின் நிறம் மனிதர்களை குறித்த பல்வேறு தகவல்களை கொடுக்க இயலும். பல மருந்துகளின் செயல்பாடுகளை மனிதர்களின் கண் நிறத்தை கொண்டு அறிய இயலும். மேலும் கண் நிற புலனுணர்வு(Perception) என்பது வெளிச்சத்தி அளவு, பார்க்கும் கோணம் போன்ற சூழ்நிலை வேறுபாடுகளால் நிர்ணயம் செய்யப்படுகிறது.

கண்களின் நிறம் கறுப்பு நிறத்தில் இருந்து மிக மென்மையான நீல நிறம் வரை வேறு வெவ்வேறாக வேறுபடுகிறது. உண்மையில் மூன்றே மூன்று நிறங்களே உள்ளன அவை பழுப்பு,மஞ்சள் மற்றும் சாம்பல் நிறம் ஆகும். இந்த மூன்று நிறங்களின் வெவ்வேறு விகிதாச்சார வேறுபாடுகளே கண்களில் பலதரப்பட்ட நிற வேறுபாடுகளை உருவாக்குகிறது. உதாரண்மாக பச்சை நிற கண்கள் மஞ்சள் மற்றும் கொஞ்சம் சாம்பல் நிறத்தின் சேர்க்கையால் ஏற்படுகிறது


கண் நிறம் ஒரு பல ஜீன (Polygenic) கூறு ஆகும். கண்களின் நிறம் கண்களில் உள்ள கருவிழியில் உள்ள நிறப்பொருட்களில் (Pigments) அளவை வைத்து தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. மனிதர்களிடத்திலும் விலங்குகளிடத்திலும் இது கண் நிற வேறுபாடு காணப்படுகிறது.மனிதர்களில் கண்களின் நிறம் கருவிழியின் மெலனோசைட்டுகளால் உற்பத்தி செய்யப்படும் மெலனின் என்ற நிறப்பொருளின் வேறுபடும் விகிதாசாரத்தினால் நிற வேற்றுமைகள் ஏற்படுகின்றனர்.


மனிதர்களின் கண்ணில் ஒளி புகுந்து செல்லக்கூடிய விழிவெண்படலம் (cornea) முன்னாலும், அதற்குப் பின்னால் கருவிழிப் படலம் (iris) என்ற தசையாலான திரையும் உள்ளன. கருவிழிப் படலம், ஒளி உள்ளே செல்வதைக் கட்டுப்படுத்துவது; மெலனின் என்ற நிறமிப் பொருளுடன் கூடிய உயிரணுக்களால் அமைந்தது. கண்களின் நிறத்திற்குக் காரணமாக அமைவது இந்நிறமிப் பொருளே. கருவிழிப்படலத்தில் மெலனின் என்ற நிறமிப் பொருள் இல்லாமற் போகுமானால் கண் நீல நிறமாகத் தோன்றும். இதற்குக் காரணம் கண்ணின் விழிப்படலத்திற்கும் ஒளி வில்லைக்கும் இடையேயுள்ள கண்முன்நீர் (aqueous humour) என்ற திரவப் பகுதியில் ஒளிக்கதிர் ஊடுருவிச் சென்று நீல நிறத்தை உண்டாக்குதலேயாகும்.


வானம் நீல நிறமாகக் காட்சியளிப்பதற்கும் இவ்விளைவே காரணம் எனலாம். நிறமிப் பொருள் அடர்த்தியாக இருக்குமானால் கண் பழுப்பு நிறமாயும், மிகவும் அடர்த்தியுடன் இருப்பின் கருமை நிறமாகவும் இருக்கும். இந்நிறமிப் பொருள் கருவிழிப்படலத்தில் இல்லாமல் இருப்பதும் அல்லது குறைந்தோ, கூடவோ இருப்பதும் மரபுவழிப்பட்ட பரம்பரை இயல்பாகும். இன்னும் சிலருக்குக் குழந்தைப் பருவத்தில் நீல நிறக் கண்களும், வளர வளரக் கண்கள் பழுப்பு நிறமாக மாறுவதும் உண்டு; கருவிழிப் படலத்தில் நிறமிப் பொருள் வயது கூடக் கூட, அடர்த்தியாகச் சேருவதே இதற்குக் காரணம்.


கண் கருவிழியின் நிறம் மனிதர்களை குறித்த பல்வேறு தகவல்களை கொடுக்க இயலும். பல மருந்துகளின் செயல்பாடுகளை மனிதர்களின் கண் நிறத்தை கொண்டு அறிய இயலும். மேலும் கண் நிற புலனுணர்வு(Perception) என்பது வெளிச்சத்தி அளவு, பார்க்கும் கோணம் போன்ற சூழ்நிலை வேறுபாடுகளால் நிர்ணயம் செய்யப்படுகிறது.


கண்களின் நிறம் கறுப்பு நிறத்தில் இருந்து மிக மென்மையான நீல நிறம் வரை வேறு வெவ்வேறாக வேறுபடுகிறது. உண்மையில் மூன்றே மூன்று நிறங்களே உள்ளன அவை பழுப்பு,மஞ்சள் மற்றும் சாம்பல் நிறம் ஆகும். இந்த மூன்று நிறங்களின் வெவ்வேறு விகிதாச்சார வேறுபாடுகளே கண்களில் பலதரப்பட்ட நிற வேறுபாடுகளை உருவாக்குகிறது. உதாரண்மாக பச்சை நிற கண்கள் மஞ்சள் மற்றும் கொஞ்சம் சாம்பல் நிறத்தின் சேர்க்கையால் ஏற்படுகிறது.

கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது?

காரட்: தினமும் காரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் (பச்சையாக) இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

முட்டைக்கோசு: மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பினைக் குறைக்கிறது.

பீட்ரூட்: ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து பீட்ரூட்டில் உள்ளதால் தொடர்ந்து உண்போர்க்கு இரத்தசோகை நோய் வருவதில்லை. இரத்தக் குழாய்களில் படியும் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.

இஞ்சி: கணுக்கள் சிறிதாக உள்ள இஞ்சியைத் தேர்ந்தெடுங்கள். இஞ்சி இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவைத் தடுத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வாய்வுத் தொல்லையைப் போக்குகிறது. மூட்டு வலியைக் குறைக்கிறது.

வெங்காயம்: வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு இரத்தத்தின் உறை தன்மையும், ஒட்டும் தன்மையும் குறைவதால் மாரடைப்பு நோய் வரவே வராது.

மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு என்று பல ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.

இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்தவர்களும் கூட தினமும் 100 கிராம் வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் படிப்படியாக இருதய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் கரைந்து மறைந்துவிடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள்: இதில் உள்ள `பெக்டின்' என்ற நார்ச்சத்து இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தினம் இரண்டு ஆப்பிள் பழங்களைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் அளவு 10லிருந்து 15 சதவிகிதம் வரை குறைந்துவிடுகிறது. ஆப்பிள் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.

அன்னாசி: இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் அன்னாசி சிறந்து விளங்குகிறது. மேலும், அன்னாசிப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தில் உறையும் தன்மை குறைவதோடு, இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளும் நீங்கும்.

எலுமிச்சம்பழம்: உடம்பிலுள்ள சிறிய இரத்தக் குழாய்களின் சுவர்களை எலுமிச்சையில் உள்ள சத்துக்கள் உறுதிப்படுத்துவதோடு சிறுநீரகங்களில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. எலுமிச்சையில் `பெக்டின்' சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.

பூண்டு: இதில் `சாலிசிலிக்' என்ற இரசாயனப் பொருள் உள்ளது. நாம் சாப்பிடும் உணவின் மூலம் இரத்தக் குழாய்களில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்து அடைப்பை உண்டாக்கும் போது பூண்டிலுள்ள `சாலிசிலிக்' என்ற சத்து அந்த அடைப்பை உடைத்துவிடுகிறது.
சுரைக்காய்: இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்பை நீக்குவதில் சுரைக்காய் பலே கில்லாடி! சுரைக்காய் சாற்றை வெறும் வயிற்றில் 200 மிலி மூலம் தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் தவிடு பொடியாகிவிடும்.

வெள்ளரிக்காய்: இரத்தத்திலுள்ள யூரிக் ஆசிட்டைக் கணிசமாக குறைத்து, இதயத்தின் செயல்பாட்டைச் சுறுசுறுப்பாக இயக்க வல்லது. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் இதற்கும் பங்கு உண்டு.

தர்ப்பூசணி: இதயத்தைக் குளிரச் செய்து இரத்தக் குழாய்களின் அடைப்பைப் போக்கி இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகிறது.

முள்ளங்கி, வெண்டைக்காய்: இந்தக் காய்களைத் தினசரி காலையில் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் மூன்றே மாதங்களில் 80 சதவிகிதம் ஒழிக்கப்பட்டுவிடும். ஆனால் தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும்.

இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பது எப்படி?

உணவு வகைகளிலேயே சைவம், அசைவம் என்று உள்ளது போல் காய்கறிகளில் கூட அசைவம், சைவம் என்று முன்னோர்கள் பிரித்து வைத்துள்ளனர்.அந்த வகையில் தேன், ரத்தத்திற்கு இணையானது என அதர்வண வேதத்தில் கூறப்பட்டு உள்ளது. ரத்தத்தை வழங்க முடியாதவர்கள் தேனை வழங்கி அதற்குண்டான பலனைப் பெற முடியும். ஹோம குண்டங்களில் தேன் வார்ப்பது தற்போதும் நடைமுறையில் உள்ளது. அதேபோல் பேரிச்சம்பழம், மாமிசத்திற்கு சமம் என்றும் பழங்கால நூல்களில் கூறப்பட்டுள்ளது.

பச்சரிசி மிகவும் சக்தி வாய்ந்தது. திருமணத்தின் போது முனை முறையாத பச்சரிசியைத்தான் அட்சதைக்காக பயன்படுத்த வேண்டும். இதனைக் கைக்குத்தல் அரிசி என்றும் கூறுவர். எனவே கடைகளில் பச்சரிசி வாங்கி வந்து அட்சதை தயார் செய்வது கூடாது. மாறாக விவசாயிகளிடம் சென்று அறுவடையின் போது சேகரித்து வைத்த முனை முறியாத பச்சரிசியை வாங்கி வந்து அட்சதை தயாரிப்பதுதான் சரியான முறையாகும்.

கைக்குத்தல் அரிசியைத்தான் தானமாக வழங்கவும் பயன்படுத்த வேண்டும். ஞானத்தில், ஒழுக்கத்தில் உயர்ந்தவர்களுக்கு பச்சரிசியை தானமாக வழங்கினால் சிறந்த பலன் கிடைக்கும். இதற்கு காரணம் பச்சரிசிக்கு என்று தனி மகத்துவம் உள்ளது. புழுங்கல் அரிசி போல் அதை அவிப்பதில்லை.

எனவே, முனை முறியாத பச்சரிசியை உயர்ந்தவர்களுக்கு தானமாக வழங்கினால் அதைக் கொடுப்பவருடைய தோஷங்கள் அனைத்தும் கழிந்துவிடும் என்று பழங்கால நூல்களில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் பூஜைகளுக்கு வாழைப்பழம் (கதளி) பயன்படுத்த வேண்டும். கேரளாவில் பகவதி அம்மன் கோயில்களில் கதளி இல்லாமல் பூஜைகள் நடத்தப்படாது. பச்சை வாழை, கற்பூர வாழை என பல்வேறு வகையான வாழைகளை பூஜைகளுக்கு பயன்படுத்துகின்றனர். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி குணங்களும், பலன்களும் உள்ளது.

குறிப்பாக பச்சை வாழையை வன/காவல் தெய்வங்களுக்கும், பூவன் வாழையை வீட்டு தெய்வங்களுக்கும் பூஜை செய்ய பயன்படுத்தலாம்.

வாழைக்காய்/பழங்களை கைகளால் தொட்டு அந்தணர்களுக்கு வழங்கும் போது கொடுப்ப்வருக்கு உள்ள கர்ம வினைகள் பாதி தீர்ந்துவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னோர்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் போது கூட வேதம் ஓதும் அந்தணர்களுக்கு வாழைக்காய்/பழம் மற்றும் பச்சரிசி வைத்து வழங்குவர்.

இது சம்பந்தப்பட்ட வீடு (உயிரிழந்தவர்) மற்றும் அதில் வசிப்பவர்களுக்கு ஏற்படும் தோஷத்தைப் போக்கவே. அந்தணர்களும் அவற்றை பெற்றுக் கொள்வதன் மூலம் அவர்களுடைய தோஷத்தை ஏற்றுக் கொண்டு அதை கழிப்பதாகவே பழங்காலத்தில் கருதினர்.

பழங்காலத்தில் ஒரு ஊரில் வசிக்கும் மற்ற குடும்பங்களுக்கு ஏற்படும் தோஷத்தை கழிக்கவே அந்தணர்கள் வாழ்ந்து வந்தனர். அதற்காக மக்களிடம் இருந்து எதையும் அவர்கள் எதிர்பார்த்ததில்லை. மாறாக அந்நாட்டின் அரசன் அந்தணர்களுக்கு தேவையான அனைத்து வசதிகள், செல்வங்களையும் அளித்ததாக வரலாறுகள் எடுத்துரைக்கின்றன.

எனவே, முனை முறியாத பச்சரிசி, வாழைப்பழம் ஆகியவற்றிற்கு பல பூர்வீக குணங்கள் உண்டு. முக்கியமான சில பூஜைகளின் போது; கலச பூஜை உட்பட முனை முறியாத பச்சரிசியை பயன்படுத்தப்படுவதை தற்போதும் பார்க்கிறோம்.

கோயில்களில் நெய்வேத்தியம் செய்ய முழுக்க முழுக்க பச்சரிசியே பயன்படுத்தப்படுகிறது. வீடுகளில் மாக்கோலம் இடுவதற்கும் பச்சரிசியை பயன்படுத்தினால் தெய்வீகத்தன்மை கிடைக்கும்.

அட்சய திருதியை தினத்தன்று முனை முறியாத பச்சரிசியை வாங்குவதும், தானமாக வழங்குவதன் மூலமும் லட்சுமியின் அருளைப் பெற முடியும்.

தெரிந்து கொள்வோம் !

வீட்டிலேயே பூஜை அறை என்ற அமைப்பு முதலில் ஹிந்து மதத்தில் தான் வந்தது.

அந்த பூஜை அறையை சுத்தமா வச்சுக்கணும். போற இடத்திலே கண்ணுல படுற சாமி படங்களை எல்லாம் வாங்கி கொண்டு வந்து அடுக்க கூடாது. அப்பறம் பாரமரிக்க முடியாது. ஒட்டடை பிடிக்கும்.

சரி.. வீட்டிலே எந்த மாதிரியான சாமி படங்களை வச்சுக்கலாம்?

குடும்ப சகிதமா உள்ள சாமிகளைதான் வீட்டிலே வச்சுக்கணும். தனித்த முருகனை வீட்டிலே வைக்கிறது தப்பு. வள்ளி தெய்வானையோடு வையுங்க.

நெஞ்சை திறந்து காட்டுற ஆஞ்சநேயரை வீட்டிலே வைக்கவே கூடாது.

சூலத்தால குத்துற காளியம்மன், ஆவேசமாக இருக்கிற துர்க்கை அம்மன், மண்டையோட்டை போட்டு இருக்கிற மயான காளி இப்படி துர்குணமா இருக்கிற எந்த சாமி படத்தையும் வீட்டிலே வைக்க வேண்டாம்.

ஹால்ல மார்டன் ஓவியத்தை மாட்டி வைக்கிற மாதிரி லக்ஷ்மி, குபேரன், வெங்காடாசலபதி படத்தை வைக்க வேண்டாம். இவங்க எல்லாம் செல்வம் தருகிற கடவுள். அதனால் பூஜை அறையில் தான் வைக்கணும்.

அப்படியே வச்சாலும் வாசலை பார்த்து வைக்க கூடாது. உள்பக்கம் பார்த்தபடிதான் வைக்கணும்.
வீட்டிலே சாமி படங்கள் அந்து பூச்சி அறிச்சி பழசா போச்சு. புது படம் பிரேம் போட்டு வாங்கி வந்து மாடாலாம்னு நினைக்கிறேன். பழைய படத்தை என்ன செய்றது? தூக்கி போட்டுடலாமா?

நல்ல கதை போங்க. நேத்து வரை சாமி. இன்னைக்கு அது வேஸ்ட் பேப்பரா. அந்த படத்தை புது படம் வாங்கி பிரேம் போடும் போது, பின்னால வச்சு பிரேம் பண்ணுங்க. அதுதான் நல்லது.

எங்க அப்பா எனக்கு தெய்வம் மாதிரி. அவர் இப்போ இல்லை. அவர் படத்தை பூஜை அறையில் சாமி படத்தோட மாட்டி வைக்கலாமா?

உங்க அன்பை பாராட்டுறேன். ஆனால் இது ஆகம ரீதியா தப்பு. இறந்தவங்க படத்தை தனியாதான் வைக்கணும். பூஜை அறையில் வைக்கவே கூடாது.

வீட்டிலே செல்வம் தங்க சில யோசனைகள்.

வெள்ளிகிழமை அன்று மாலை நேரத்தில் ஒரு பாக்கெட் உப்பு வாங்கி, உப்பு ஜாடியில் கொட்டுற பழக்கத்தை கொண்டு வாங்க. வீட்டுல காசு தங்கும்.

காலையில தூங்கி எழுந்ததும் கொல்லைபுற கதவை திறங்க. தூக்கம் என்பது முதேவியாம். இரவு வீட்டிலே இருக்கிற முதேவியை கொல்லை புற வழியா அனுப்பிட்டு, தெருவாசலை திறந்து மகாலக்ஷ்மியை அழைக்க வேண்டும்.

மாலையில் கொல்லைபுற வாசலை பூட்டிவிட்டு தெரு வாசலை திறந்து விளக்கு ஏற்ற வேண்டும்.

பொதுவா குடும்ப பொண்ணுங்க வீட்டில் விளக்கேத்தி வச்ச பிறகு வெளியே போக கூடாது.

பூஜை அறை ஆகம ரகசியம்...வீட்டிலே செல்வம் தங்க சில யோசனைகள்.


புத்த மதத்தில் பல வித தியானங்கள் அனுசரிக்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மதசார்பற்றவையே. அதில் மிகவும் பிரபலமானது விபாசனா தியானம். இந்த தியானம் புத்தரால் நேரடியாக சீடர்களுக்கு சொல்லித்தரப்பட்டது என்ற கருத்து நிலவுகிறது. புத்த மத நூல்களில் ‘பாலி’ மொழியில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட பழமை வாய்ந்த நூல்களில் இந்த தியான முறை காணப்படுகிறது. இந்த தியானம் தற்காலத்தில் உள்நோக்கு தியானம் (Insight Meditation) என்ற பெயராலும் அறியப்படுகிறது. இன்று பல நாடுகளிலும் தியான முகாம்களில் கற்றுத் தரும் இந்த தியானத்தை மிகவும் பிரபலப்படுத்தியவர்களில் முக்கியமானவர்கள் பர்மாவைச் சேர்ந்த எஸ்.என்.கோயன்கா என்றழைக்கப்பட்ட சத்யநாராயண கோயன்காவும், சன்ம்யாய் சயடாவும்.

எஸ்.என்.கோயன்கா இந்த தியானமுறைக்கு அறிமுகப்பட்ட நிகழ்ச்சி சுவாரசியமானது. பர்மாவில் பழங்காலத்தில் குடியேறிய இந்துக் குடும்பத்தைச் சேர்ந்தவர் எஸ்.என்.கோயன்கா. அவர் கிட்டத்தட்ட 25 பள்ளி, கல்லூரி, வணிக அமைப்பு, ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றின் நிர்வாக உறுப்பினர், காரியதரிசி, தலைவர் பதவிகளை வகித்து வந்தவர். பகவத்கீதை சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி வந்தவர். இப்படி சமூகத்தில் மிக முக்கிய நபராக இருந்து வந்த அவர் நீண்ட நாட்களாக மைக்ரைன் தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். நவீன மருத்துவ சிகிச்சைகளால் அதைக் குணப்படுத்த முடியாமல் அவர் தவித்தபோது ஊ பா கின் என்ற பர்மியர் கற்றுக் கொடுத்து வந்த விபாசனா தியானத்திற்கு செல்லுமாறு நண்பர் ஒருவரால் அறிவுறுத்தப்பட்டார். “அவர் சொல்லித் தரும் பத்து நாட்கள் தியான முகாமிற்குச் சென்று அந்த தியானத்தை தொடர்ந்து செய்தால் அந்த தலைவலியை நிரந்தரமாகப் போக்கிக் கொள்ளலாம்” என்று அவர் நண்பர் சொன்னார்.

ஊ பா கின் சன்னியாசியல்ல. குடும்பஸ்தர். அரசாங்கத்தில் சிறியதொரு வேலையில் இருந்தவர். ஆனால் அவரை சென்று பார்த்தவுடனேயே அவர் ஆன்மிகத்தில் உயர் நிலை எட்டியவர் என்பதை கோயன்காவால் உணர முடிந்தது. தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு “என்னுடைய மைக்ரைன் தலைவலியை நீக்க தங்கள் தியான முறையைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என்று கோயன்கா சொன்னார்.

கோயன்காவின் உயர்பதவிகளால் சிறிதும் பாதிக்கப்படாத் ஊ பா கின் “தங்களுக்கு தியானத்தைக் கற்றுத் தர இயலாது” என்று சொல்லி விட்டார்.

திகைப்புடன் கோயன்கா ஏன் என்று கேட்ட போது “இந்த தியானம் நோயை மட்டும் தீர்க்கும் மருந்தல்ல. மனிதனை வருத்தும் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்றுத் தரும் ஒரு வாழ்க்கை முறை. இந்தியாவில் இருந்து பெறப்பட்ட, புத்தர் பிரானால் பின்பற்றப்பட்ட இந்த சிறப்பு தியானத்தை வெறும் ஒரு குறிப்பிட்ட நோயை மட்டும் நீக்கும் நோக்கத்தோடு வருபவருக்குச் சொல்லிக் கொடுக்க நான் விரும்பவில்லை” என்று ஊ பா கின் கூறினார். விபாசனா வெறும் பயிற்சிகளை சொல்லித் தரும் தியானம் அல்ல ஒன்றும், சில ஒழுக்க விதிகள், நற்குணங்கள் ஆகியவற்றை உறுதியாகப் பின்பற்றி அத்துடன் இந்த தியானப் பயிற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே இந்த தியானம் முழுப் பலன் தரும் என்றும் விளக்கினார் ஊ பா கின். “சில பயிற்சிகளால் தியானத்தில் சமாதி நிலை என்னும் மிக உயர்ந்த நிலையைக் கூட அடையலாம். ... ஆனால் அடிமனதைத் தூய்மைப்படுத்தாமல் இந்த தியான உயர்நிலைகளை அடைவது உறங்கும் அரக்கன் மீது அமர்ந்து அந்த உயர்நிலைகளை அடைவது போலத் தான். மேலோட்டமாகப் பார்த்தால் மனதை முழுமையாக வெற்றி கொண்டது போல் தோன்றும். அந்த அரக்கன் விழித்தெழுந்தால் எரிமலை வெடிப்பது போலத் தான். உள்ளே அகற்றாமல் வைத்திருந்த சில குணங்கள் இது வரை சேர்த்து வைத்திருந்த எல்லா முன்னேற்றத்தையும் அழித்து சேதப்படுத்தி விடும்”

(ஆன்மீகத்தில் மிகுந்த முன்னேற்றமடைந்தவர்களாக ஒரு காலத்தில் நினைக்கப்பட்டவர்கள் பற்றி இன்னொரு காலத்தில் மிகக் கேவலமான செய்திகளைக் கேட்க நேர்வது ஏன் என்பதற்கு ஊ பா கின் அன்று சொன்னது தான் பதில். எத்தனையோ சித்திகள் அடைந்திருக்கலாம். ஆனால் அடிப்படையில் ஒழுக்கம் இல்லையானால், ஒழுக்க விதிகள் பின்பற்றப்படவில்லையானால் எல்லாமே வியர்த்தமாகி விடும். பதஞ்சலியின் யோக சூத்திரங்களிலும் ஆரம்பத்தில் யமா, நியமா என்ற ஒழுக்க விதிகள் பற்றி வலியுறுத்தியதை நாம் முன்பே பார்த்தோம். இவர் சொல்வதும் அப்படியே ஒத்து வருகிறது).

அவர் கருத்தில் இருந்த உண்மையை உணர்ந்த கோயன்கா அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டு முழுமையாக அந்தத் தியானத்தில் முறைப்படி ஈடுபட சம்மதித்தார். அந்த தியானம் கற்ற பிறகு அவர் தலைவலி குணமானது மட்டுமல்லாமல் அவர் வாழ்க்கை முறையிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டது. பின்னர் அவர் விபாசனா தியானத்தை பிரபலப்படுத்தி அனைவருக்கும் கற்றுத் தர ஆரம்பித்தார்.

விபாசனா தியானத்தில் ஐந்து தர்மவிதிகளைப் பின்பற்றும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கீழ்கண்ட உறுதிமொழிகளை விபாசனா தியானம் செய்வோர் எடுத்துக் கொள்கின்றனர்.

1. நான் எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்க மாட்டேன். கொல்ல மாட்டேன்.
2. நான் திருட மாட்டேன்.
3. நான் தவறான உடலுறவுகளில் ஈடுபட மாட்டேன். வாழ்க்கைத் துணையுடன் அல்லாத உடலுறவில் ஈடுபட மாட்டேன்.
4. நான் பொய் பேச மாட்டேன். தீங்கு விளைவிக்கும் பேச்சினையும் பேச மாட்டேன்.
5. நான் புத்தியை மழுங்கச்செய்யும் மது, போதை வஸ்துக்களை உட்கொள்ள மாட்டேன்.

தியானப் பயிற்சிமுகாம்களில் பங்கு பெறும் போது அந்த நாட்களில் பங்கு பெறுவோர் மேலும் மூன்று உறுதி மொழிகள் எடுத்துக் கொள்கின்றனர்.

6. நான் இருட்டிய பிறகு உணவு உட்கொள்ள மாட்டேன்.
7. நான் அலங்காரம், பகட்டு, கேளிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட மாட்டேன்.
8. நான் சொகுசான படுக்கை, இருக்கை ஆகியவற்றைப் பயன்படுத்த மாட்டேன்.

மொத்தத்தில் தூய்மை, எளிமை, நேர்மை ஆகியவையே இங்கு வலியுறுத்தப்படுகின்றன. விபாசனா தியான முறையாக மட்டுமல்லாமல் காலப்போக்கில் வாழ்க்கை முறையாக மாற வேண்டிய ஒரு உயர்நிலையாக கருதப்பட்டது. எனவே அந்த தியானமுகாமில் பங்கு பெறும் நாட்களில் இந்த உறுதிமொழிகள் எடுத்துக் கொண்டு பின் பற்றுவது அந்த நெறியான வாழ்க்கைக்கு அறிமுகமாகும் சந்தர்ப்பமாக அமைகிறது.


இனி விபாசனா தியானத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத்திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். சத்தங்களே இருக்கக்கூடாது என்பதல்ல நம்மை அதிகமாக அலைக்கழிப்பது போன்ற சத்தங்கள் இருக்கக் கூடாது என்பது முக்கியம்.

2) உங்களுக்கு வசதியானபடி சம்மணமிட்டோ, பத்மாசனத்திலோ, நாற்காலியிலோ அமருங்கள். நீண்ட நேரம் அமர்கையில் உங்களுக்கு சிரமமாக இருக்கும்படியாக மிக இறுக்கமாக அமராதீர்கள். அதே நேரம் கூன் போட்டோ, விறைப்பாகவோ இல்லாமல் முடிந்த அளவு நேராக நிமிர்ந்து இருங்கள். உதாரணத்திற்கு வயலின் தந்தி மாதிரி இருக்கச் சொல்கிறார்கள். ஒரேயடியாக இறுக்கமாகவோ, தளர்ச்சியாகவோ இல்லாமல் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

3) உங்கள் வலது உள்ளங்கை இடது உள்ளங்கையின் மீது இருக்கும்படியாக கைகளை திறந்த நிலையில் மடியில் வைத்துக் கொள்ளவும் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டாம். கண்களை மூடியோ, லேசாகத் திறந்தோ வைத்துக் கொள்ளலாம்.

4) உங்கள் கவனத்தை வயிற்றுப் பகுதியில் வையுங்கள். உங்கள் உள் வாங்கும் மூச்சினால் உங்கள் வயிறு விரிவடைவதையும், வெளி விடும் மூச்சினால் வயிறு குறுகுவதையும் கவனியுங்கள். உங்கள் கவனத்தை அதைத் தவிர வேறெதிலும் வைக்க வேண்டாம். ஆரம்ப நாட்களில் அதை “விரிவடைகிறது”, “குறுகுகிறது” என்று மனதில் பெயரிட்டு கவனத்தை பலப்படுத்தலாம். ஆனால் அதற்கு மேல் உங்கள் மூச்சை அலசப் போக வேண்டாம். ’உள் மூச்சு ஆழமாகிறது” “வெளிமூச்சு முழுமையாக இல்லை” போன்ற விமரிசனங்களுக்குப் போகாதீர்கள்.

5) போகப் போக அந்த பெயரிட்டு அழைப்பதையும் நிறுத்தி வயிர்றின் அசைவுகளை மட்டும் உணர ஆரம்பியுங்கள். இது படிக்க சுலபமாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில் அவ்வளவு சுலபமில்லை. வேண்டுமானால் உங்கள் கைகளை முன்பு சொன்ன நிலையிலேயே வயிற்றை ஒட்டினாற் போல் வைத்துக் கொள்ளலாம். கைகளாலும் அந்த அசைவுகளை உணர்வது தியானத்தை ஆழப்படுத்த உதவும்.

6) மூச்சை நீங்களாகக் கட்டுப்படுத்த முயலாதீர்கள். அது இயல்பாக இருக்கட்டும். மூச்சினால் ஏற்படும் வயிற்றசைவில் மட்டும் வைக்கையில் நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள். அப்போது அடுத்த அசைவைப் பற்றி சிந்திக்காதீர்கள். உதாரணமாக உள்மூச்சின் அசைவில் கவனம் வைக்கையில் வெளிமூச்சின் அசைவைப் பற்றி முன்பே நினைக்க ஆரம்பிக்காதீர்கள். உங்களைப் பொறுத்த வரை அந்த ஒரு கணம் மட்டுமே கவனமிருக்கட்டும். மனம் ஆரம்பத்தில் முரண்டு பிடிக்கும். கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் கவனத்தை பெரும்பாலும் சிதற வைக்கும் மனதிற்கு நிகழ்காலம், அதுவும் சுவாரசியம் இல்லாத இந்த மூச்சு ஏற்படுத்தும் அந்த ஒரே அசைவில் கவனம் வைப்பது இமாலயப் பிரயத்தனமாகவே இருக்கும். ஆனால் அவசரமில்லாமல், அலைபாயாமல் அந்த நிகழ்கால கணத்தின் அந்த அசைவில் மட்டுமே மனம் வையுங்கள்.

7) மனம் எத்தனை முறை அலைபாய்ந்தாலும் சலிக்காமல் அதைத் திரும்ப வயிற்றின் அசைவுக்குக் கொண்டு வாருங்கள். இதெல்லாம் நமக்கு சரிப்படாது என்று ஆரம்பத்தில் தோன்றலாம். அது இயற்கையே. ஆனால் எந்தப் புதிய வித்தையும் ஆரம்பத்திலேயே சுலபமாகக் கை கூடாது என்கிற போது அது கைகூடுகிற வரை பொறுமையுடன் பயிற்சி செய்யத் தான் வேண்டும் என்கிற போது இந்த தியானப் பயிற்சியில் ஆரம்பத்திலேயே வெற்றி கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண் அல்லவா?

8) சில நாட்கள் இப்படியே இந்த தியானத்தை சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் செய்யுங்கள். பின் அடுத்த கட்டமாக மனம் எப்போதெல்லாம் மூச்சின் அசைவை விட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்துகிறதோ அதன் செயலுக்கு ஒரு பொதுவான பெயரை வைத்து உணர்ந்து திரும்ப மூச்சின் அசைவுக்கே மனதைக் கொண்டு வாருங்கள். உதாரணத்திற்கு கவனம் வெளியே ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்பதிற்கு சென்றால், சுருக்கமாக “சத்தம்” என்று மட்டும் என்று பெயரிடுங்கள். அடுத்த கணம் மீண்டும் மூச்சின் அசைவுக்கு கவனத்தைக் கொண்டு வாருங்கள். மனம் வேறு எதையோ நினைக்கிறது என்று எடுத்துக் கொண்டால் “நினைப்பு” என்று பெயரிட்டு மறுபடியும் மூச்சின் அசைவுக்குக் கொண்டு வாருங்கள். கால்வலிக்கிறது என்று மனம் சொன்னால் “வலி” என்று பெயரிட்டு உடனடியாக கவனத்தை மீண்டும் திருப்புங்கள்.

9) நீங்கள் கவனச் சிதறல்களுக்கு வைக்கும் பெயர் எப்போதும் பொதுவாகவும் ஒரு சொல் அளவாகவே இருக்கும்படி சுருக்கமாகவும் இருக்கட்டும். வேறெதையும் நினைக்கவே கூடாது என்று தீர்மானமாக உட்கார்ந்தால் கண்டிப்பாக தோற்றுப் போவீர்கள். மனம் கட்டுப்பாடுகள் அதிகமாக அதிகமாக முரண்டும் அதிகமாகவே பிடிக்கும். மாறாக ஒவ்வொரு கவனச்சிதறலையும் நீங்கள் அறிந்திருந்து, அதற்கு ஒரு பெயர் வைத்து அங்கீகரித்து, சலிக்காமல் உங்கள் கவனத்தை உடனடியாக மீண்டும் திருப்புவதே பெரிய வெற்றி.

10) கவனம் சிதறுகிறது என்பதை உடனடியாக உணர்வதும், அது எது விஷயமாக என்று பொதுவாக அறிந்திருப்பதும், அது விஷயமாக மேற்கொண்டு சிந்தனையை நீட்டிக்காமல் எங்கு கவனம் வர வேண்டுமோ அங்கு உடனடியாக மனதைக் கொண்டு வர முடிவதுமே தியானத்தில் முதல் பெரிய வெற்றி. கவனச் சிதறல் எதிலோ ஆரம்பித்து அதிலேயே தொடர்ந்து சில நேரம் இருந்து அதை அறியாமலேயே இருப்பது தான் தியானத்தின் எதிர்மாறான நிலை.

11) உட்கார்ந்த நிலை சில நிமிடங்கள் கழித்து அசௌகரியத்தை ஏற்படுத்தினால் தாராளமாக மாறி உட்கார்ந்து கொள்ளுங்கள். ஆனால் அந்த எண்ணம் தோன்றியவுடனேயே “மாற்றம்” என்று பெயரிட்டு அந்த எண்ணத்தை அங்கீகரித்து முழுக் கவனத்துடன் மாறி உட்கார்ந்து மறுபடியும் வயிற்றின் அசைவிற்கு கவனத்தைக் கொண்டு வாருங்கள்.

12) இப்படி இந்த உள்நோக்கு தியானம் உங்கள் கவனம் செல்லுமிடங்களைக் கூர்மையாக அறியச் செய்வதுடன் கவனத்தின் மீது உங்கள் ஆளுமையை வளர்த்த உதவுகிறது.

13) நாளடைவில் தியானத்தில் இருக்காத நேரங்களிலும் உங்களுக்குள் ஏற்படும் உணர்வுகளை அறிந்திருக்க இந்த தியானப் பழக்கம் உதவுகிறது. கோபம் வருகிற போது “கோபம்” என்று பெயரிட்டு அறியும் அளவு விழிப்புணர்வு இருந்தால் கூட மனதிற்கு கவனத்தை அதிலிருந்து வேண்டும் இடத்திற்கு திருப்பவும் எளிதில் முடியும் என்பது அனுபவம்.

விபாசனா என்னும் இந்த உள்நோக்கு தியானம் வாழ்க்கை முறையாக பரிணமிக்கும் போது வாழ்க்கை ஆழப்படுகிறது. அதைப் பற்றி ஒரு புத்தகமே எழுதக் கூடிய அளவு மேலும் பல பயிற்சிகள் இருக்கின்றன என்றாலும் நம் தற்போதைய குறிக்கோளுக்குத் தேவையான அளவு அறிந்து விட்டோம்

விபாசனா தியான முறை

மேலே கூறபட்ட அனைத்தும் ஒரே வரியில் கூற வேண்டும் என்றால் """"""""""'' இந்துமதம் நாம் அணிந்து கொள் சட்டையை கொடுப்பதில்லை மாறாக ஒரு துணியை கொடுக்கிறது . அதை நாம் எவ்வாறு வேண்டும்மென்றாலும் தைத்து அணிந்து கொள்ளலாம் """"""""""""'''''

இந்து மதம்...

Dr Kader Ibrahim Speech (What is Thaipusam)

பல கேள்விக்கான ஒரே பதில் சுவாமி விவேகானந்தரிடம் இருந்து ..............

பௌதீகவியல் என்பது விஞ்ஞானத்தின் அத்திவார என்று கூட கூறலாம்..இன்னும் லட்சக்கணக்கான விடயங்களுக்கு விடைதெரியாத பகுதியே பௌதீகவியல்..அதிலும் ஒளி,மற்றும் போட்டோன்கள் என்பது தொடர்பான ஆராய்வுகள் மிகவும் முக்கியமானவை.

அந்த வகையில் இன்றைய வேதம் கண்ட விஞ்ஞானம் பௌதீகவியல் தொடர்பாக ஆராய உள்ளது..


ஒளியின் வேகம் தொடர்பாக 20ம் நூற்றாண்டில் மேலை நாட்டு விஞ்ஞானிகள் ஒளியின் வேகத்தை கண்டறிந்தனர்..ஆனால் இற்றைக்கு 3395 வருடங்களுக்கு முன்பே மகாரிஷி சயனக்கார்ய என்பவர் இதை துல்லியமாக கணித்துக்கூறியுள்ளார்..

வேதங்களுக்கான விளக்கவுரையை எழுதும் போது குறித்தசுலோகத்திற்கான விளக்கத்தில் இதைகூறி உள்ளார்..


தரணிர் விஸ்வதர்சடோ ஜோதிஸ்க்ர்தாஸி
சூரியா விஸ்வாம பாசி ரோகணம்
ரிக் வேதம் 1504

மேற்சொன்ன வேத வசனத்திற்கு விளக்கவுரை கூரும் போதே மகாரிஷி சயனகார இந்த ஒளியின் வேகத்தை கணித்து கூறியுள்ளார்..

"யோஜனானாம் சகஸ்ரம் தேவ் சதே தேவ் யோஜனே
ஏக்னா நிமிஷார்தேனா கிரமமனா நமோஸ் துதி"

என்னும் சுலோகம் மூலம் ஒளியின் வேகம் குறித்துகாட்டப்பட்டது...அதன் படி கணக்கிட்ட வேகமும் நவீன விஞ்ஞானம் கூறிய வேகமும் சரியாக காணப்பட்டது என்பதே ஆச்சரியத்தின் உச்சம்..

மேற்கொண்ட உண்மையை 1890 மார்க் முல்லர் என்பவரால் தொகுக்கப்பட்ட ரிக் வேதத்திலும் காணக்கூடியதாக உள்ளது....வேதங்களை மொழிபெயர்க்கும் பணிக்கு இவர் சாய்னா பாஷ்யத்தை ஆதாரமாக கொண்டார்..சாய்னா கர்யா என்பவரின் விளக்கவுரை கை எழுத்துப்பிரதி(கி.மு 1395) பற்றி .முல்லர் குறிப்பிட்டு உள்ளார்

குறிப்பு-அர்த்த சாஸ்திரத்தின் படி யோஜனா என்பது 9.11 மைல்களுக்கு சமன்..அது 8000 தனுசுகளுக்கு சமன்.ஒரு தனுசு என்பது சராசரிமனித உயரத்துக்கு சமன்.அதாவது 6 அடிக்கு சமன்.

வரலாறு என்ற ஒன்று உண்டு.அதில் நிஜங்கள் மட்டுமே நிலைத்திருக்கும். டாக்டர் டேவிட் எட்வின் பின்கிரீ என்ற அமெரிக்க கணிதப்பேராசிரியர் 1952 ஆம் வருடம் தற்செயலாக ரோம் நகரில் உள்ள நூலகத்தில் ஒரு புத்தகத்தைப்பார்த்தார்.அதில் ஒரு ஹிந்து வான சாஸ்திர அறிஞரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.அந்த புத்தகத்தில் கூறப்பட்டிருந்த வானியல் உண்மைகளைப்பார்த்து வியந்துபோனார். அதனால் அவர் அன்று முதல் தனது ஆராய்ச்சியை ஹிந்து கணிதம்,வான சாஸ்திரம் நோக்கித் திருப்பினார்.
கி.பி.1965 ஆம் ஆண்டு நமது பாரதத்திற்கு வந்தார்.இத்துறையில் ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட 20,000 கிரந்தங்கள்(பாடல்கள்)உள்ளன என்று கணக்கிட்டு அவற்றின் விவரத்தைத் தொகுக்கத்தொடங்கினார்.கி.பி.1995 வரை ஐந்து பெரிய தொகுப்புகளாக அவற்றை வெளியிட்டார்.அவற்றிற்கு Census of Exact Science எனப் பெயரிட்டார்.

அடுத்ததாக இந்தியர்களின் கால அளவீடுகளின் விஞ்ஞானம் பிரமிப்பின் உச்சம்.....பூமி தன்னைத்தானே 1600 கிலோமீற்றர் வேகத்தில் சுற்றுகின்றது..இந்த வேகத்தில் தன்னைத்தானே 24 மணிநேரம் சுற்றுகின்றது..இப்படி சுற்றுவதால் 12 மணி நேரம் பகலாகவும் 12 மணிநேரம் இரவாகவும் கருதப்படுகின்றது..

இந்தியகால அளவுப்படி ஒரு நாள் என்பது 24 ஓரைகளை கொண்டது.ஓரை என்ற சமஸ்கிருத நாளடைவில் மருவி ஆங்கிலத்தில் ஹவர் (hour) என்றும் புருத்விடிவாஸ் என்றும் ஓரோ என்ரும் அழைக்கப்படுகின்றது..

இது போக வெள்ளொளி என்னும் கருத்தை குறித்தும் வேதங்கள் அழகான முறையில் விவரணம் செய்கின்றது...வெள்ளொளி என்பதில் 7 நிறங்கள் உண்டு என்கிறது நவீன விஞ்ஞானம்,அதையே நம் வேதங்களும் கூறுகின்றது...சூரியன் 7 தேர் பூட்டி தன் ரதத்தை செலுத்துகின்றார் என்பதுவும் இதன் காரணமாகவே என்கிறது சூரிய புராணம்


சூரியனின் 7 நிறங்கள் தொடர்பாக நியூற்றன் சொல்லும் முன்பே நம் வேதங்கள் கூறுவிட்டன.

"சப்த த்வ ஹெரிதோ ரதே வஷந்தி தேவ
சூர்ய சோசிக்கிகம் விக்கசன"
(ரிக்வேதம் 1509)

அவ திவஸ்த சப்த சூரியாச ரஸ்மயா (அதர்வண வேதம் 17:10:171)

சூரியனின் 7 வண்ணங்களே ஒரு பகலை உருவாக்குவதாக இந்த வசனம்கூறுகின்றது. அப்படியனால் சூரியனுக்கு 7 கிரகணங்கள் தானா?இல்லை சூரியனுக்கு கோடிக்கணக்கான ஒளிக்கிரகணங்கள் உண்டு..அனால் ஒவ்வொரு ஒளிக்கிரகணத்துள்ளும் 7 நிறங்கள் உண்டு...

ரிக் மற்றும் அதர்வண வேதங்களில் அடிக்கடி "சப்த அஸவ ருதா" என்ற வேதச்சொல்குறிப்பிடப்படுகின்றது...ஏழு வண்ணங்கள் அடங்கிய ஒரு கிரகணம் என்பதே இதன் பொருள்.அஸ்வ என்ற சொல்லுக்கு சூரியக்கிரகணம் என்று பொருள்...

"ஈகோ அஸ்வ வஹாதி சப்த நமஹ" என்று ரிக்வேதத்தின் 11642 கூறுகின்றது..
இதன் பொருள் மிகவும் ஆழ்ந்த விஞ்ஞானக்கருத்துக்களை கொண்டுள்ளது

அதாவது சூரிய ஒளி ஒன்றுதான்(வெள்ளொளி ) ஆனால் ஏழு வண்ணங்கள் உண்டு என்று கூறுகின்றது.இதை சூரியன் 7 வண்ணம் கொண்ட குதிரைகளை பூட்டி செல்கின்றான் என்னும் உருவகத்துடன் சொல்கின்றது வேதம்.


சாந்தோகிய உபநிஷதத்தில் கூட ஒரு சுலோகம்(861) சூரிய ஒளிக்கு மூன்று நிறங்கள் இருப்பதாக கூருகின்றது ,,ஆனால் இதுகும் சரியான கருத்துதான் ...காரணம் விஞ்ஞானத்தின் படி வர்ணங்கள்மூன்று மட்டுமே....அதை விஞ்ஞானம்மூல வரம் என்று கூறும்.அதாவது மூல வர்ணங்கள் கலப்பதன் மூலமே மற்றைய எல்லா வர்ணங்களையும் பெறமுடியும்.ஆக இதுகூட சரியான வசனமே...

இதை விட நம் முன்னோர்கள் நவக்கிரக வழிபாட்டின்மூலம் சூரியனை மையமாக வைத்தே பிற கோள்கள் யாவும் சுற்றுகின்றன என்பதை கூறிவிட்டனர்..கோவில்களில் நவக்கிர்க சிலைகளை நோக்கும் போது சூரியனை சுற்றியே பிற கோள்கள் இருக்கும்...அதையே விஞ்ஞானமும் கூருகின்றது,..சூரியக்குடும்பத்தில் இருக்கும்கோள்கள் யாவும்சூரியனை மையமாக வைத்தே சுற்றுகின்றன..

அது போக ராசிகளிளின் படியே 12 மாதங்களும் உருவாகின...ஒரு மாதத்தின் இரவு முழுதும் தெரியும் நட்சத்திரத்தின் பெயர் அம்மாதத்திற்கான பெயராக வைக்கப்பட்டது...


மாதம் நட்சத்திரம்

1.சித்ரம் சித்ரா
2.வைசாக விசாகம்
3.ஜேஸ்தம் ஜெஸ்தா
4.அசாதம் அசாதா
5.சரவணம் சரவணய
6.பத்ர பாதா பூர்வபத்ரா
7.அஸ்வயுகாலா அஸ்வினி
8.கார்த்திகா கார்த்திகா
9.மார்க்கசீரா மிருகசீ
10புஸ்யா புஷ்ய
11.மகா மகா
12பால்குணா பால்குனி


இதை விடவும் ஒரு நாள் என்பது பூமி தன்னத்தானே சுற்றுவது என்றும் அதற்கான நேர அளவீட்டையும் ஒரு வருடம் என்பது பூமி சூரியனை சுற்றுவது என்றும் அதற்கான காரணத்தையும் ஆர்ய பட்டா தனது நூலில் குறிப்பிட்டு உள்ளார்..அதை விட சந்திர கிரகணம் மற்றும் சூரியகிரகணம் மற்றும் அமாவாசை பௌர்ணமி பற்றிய கால அளவீடுகளும் பஞ்சாங்கம் என்னும் நூலின் மூலம் மிகமிகமிக சரியான முறையின் கணிக்கப்படுகின்றது என்பது ஆச்சரியமான விடயமே


இத்தைகைய விஞ்ஞான மற்றும் மனோவியல் மற்றும் கலாச்சாரரீதியில் பாரத நாடும் சனாதன தர்மமும் முன்னோக்கிய சிந்தனையை உடையதாக இருந்துள்ளது...அத்தகைய வழியிலும் பரம்பரையிலும் வந்த நம் தர்மம் மதமாற்றம் மற்றும் பகுத்தறிவு என்னும் பெயர்களினால் நம் தர்மத்தை இழிவு படுத்த நினைக்கும் செயல் வருந்ததக்கது..ஆனால் எது எப்படி எனினும் சனாதன தர்மம் வெற்றி பெறும்..கலியுகம் அதர்மம் வெல்வது போன்ற தோற்றம் காணப்பட்டாலும் தர்மமே வெற்றி பெறும்...

தர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவும்
தர்மம் மீண்டும் வெல்லும்

ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

வேதம் கண்ட விஞ்ஞானம் பாகம் 5

என்னென்ன தேவை?

சுண்டைக்காய் வற்றல் 1 பிடி (சுமார் 10 கிராம்), சாம்பார் பொடி 4 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, புளி எலுமிச்சை அளவு, அரிசி மாவு 1 டீஸ்பூன். தாளிக்க: நல்லெண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் 1/2 டீஸ்பூன், கடுகு 2 டீஸ்பூன், வெந்தயம் 1/2 டீஸ்பூன், கடலைப்பருப்பு அல்லது துவரம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் 4, கறிவேப்பிலை தேவைக்கு.

எப்படிச் செய்வது?

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை அதே வரிசையில் ஒவ்வொன்றாகப் போட்டு தாளிக்கவும். பின் சாம்பார் பொடியையும் போட்டு, அதே எண்ணெயில் வறுத்தபின் புளிக்கரைசலை விடவும். உப்பு, சுண்டைக்காய் வற்றல் சேர்க்கவும். நன்கு கொதித்தபின் அரிசிமாவை சிறிது தண்ணீரில் கரைத்து சேர்த்துக் கொதிக்க விடவும். கெட்டியான பின் இறக்கி வைத்து சூடான சாதம் மற்றும் சுட்ட அப்பளத்துடன் பரிமாறவும்.

சுண்டைக்காய் வத்தக் குழம்பு

'ஒரு விஷயம் தெரியுமா ? பாம்பு கடித்த ஒருவர் அதன் விஷத்தால் பாதிக்கப்படுவதைக் காட்டிலும் 'பாம்பு கடித்துவிட்டதே’ என்ற அதிர்ச்சி காரணமாகப் பாதிப்படைகின்ற நிகழ்வுகளே இங்கு அதிகம்.

ஆம், எல்லாப் பாம்புகளுமே விஷத்தன்மை கொண்டவை அல்ல. இந்தியாவில் காணப்படும் சுமார் 200 வகைப் பாம்புகளில் நச்சுத்தன்மை கொண்டவை வெறும் 52 வகை மட்டுமே. தமிழ்நாட்டில் உள்ள பாம்புகளில் கட்டு விரியன், கண்ணாடி விரியன், ரம்பச் செதில் கொண்ட விரியன், நாகப் பாம்பு, பவழப் பாம்பு, ராஜநாகம் போன்றவைதான் கொடிய விஷம் கொண்டவை.

கடித்த பாம்பைப் பொருத்து பாதிப்பு ஏற்படும். உரிய தருணத்தில் சரியான முதல் உதவி அளிக்கப்படாததால் இறந்தவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருக்கின்றன. பாம்பு கடித்தவர்களுக்கு உடனடியாகச் செய்ய வேண்டிய முதல் உதவிகள்பற்றி பொது மருத்துவர் டாக்டர் ஸ்ரீனிவாசனிடம் கேட்டோம்.

''ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டால் என்னென்ன அறிகுறிகள் தென்படும் டாக்டர்?''

''கடிபட்ட இடத்தில் கடுமையான வலி மற்றும் வீக்கம், ரத்தம் வடிதல், எரிச்சல், பேதியாகுதல், அதிக அளவில் வியர்ப்பது, கண் பார்வை மங்குவது, கை - கால்கள் மரத்துப்போவது, தாகம், வாந்தி, காய்ச்சல், தசைகள் கட்டுப்பாட்டை இழப்பது, வலிப்பு, நாடித் துடிப்பு தாறுமாறாக எகிறுவது, சோர்வு, மயக்கம் போன்ற அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட அறிகுறிகள் ஏற்படலாம்.''

''ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டது என்று தெரிந்தவுடன் அவருக்குச் செய்ய வேண்டிய முதல் உதவிகளைப் பற்றிச் சொல்லுங்களேன்?'

''கடிபட்டவரைச் சுற்றிக் கூட்டம் போட்டுக் காற்றோட்டத்தைத் தடுக்கக் கூடாது. கடிபட்டவர் சுய நினைவோடு இருக்கும்பட்சத்தில், அவருக்கு ஆறுதல் மற்றும் தைரியம் அளிக்கும் வகையில் பேச்சு கொடுக்கலாம்.

பாம்பு கடித்த இடத்தில் அதனுடைய பற்கள் பதிந்த அடையாளம் இருக்கும். அந்தப் பகுதியைச் சுத்தமான தண்ணீரினால் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். கடிபட்ட இடத்தைச் சற்றுத் தூக்கி உயரமாக வைத்திருக்க வேண்டும். காயத்துக்கு இரண்டு முதல் நான்கு அங்குலம் மேலாக உள்ள பகுதியில், ஈரமானத் துணியைக்கொண்டு அழுத்திக் கட்டு போட வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் காயத்தின் மீது மஞ்சள் போன்ற பொருட்களைப் பூசக் கூடாது. கடிபட்ட இடத்தை அசையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இதைவிடுத்து, சினிமாக்களில் காட்டப்படுவதைப் போலக் கடிவாயில் வாயை வைத்து விஷத்தை உறியக்கூடாது. கூரிய ஆயுதங்கள் மூலம் கடிபட்ட இடத்தைக் கீறவும் கூடாது. ஏனென்றால், காயத்தை வைத்துதான் எந்த வகை பாம்பு கடித்துள்ளது, கடி ஆழமாக இருக்கிறதா, கீறலா என்பதை எல்லாம் அறிந்துகொள்ள வேண்டும்'' என்று விவரித்தார் டாக்டர் ஸ்ரீனிவாசன்.

''பொதுவாக காடுகளை ஒட்டிய பகுதிகளில் வசிப்பவர்களும் ட்ரெக்கிங் செல்பவர்களும் பாம்புக் கடிக்கு அதிகமாக ஆளாகிறார்கள். பாம்புக் கடியைத் தவிர்க்க எச்சரிக்கையாக இருப்பது எப்படி?' என்று தமிழ்நாடு வனப் பயிற்சிக் கழகத்தின் முன்னாள் இயக்குனர் பெருமாளிடம் கேட்டோம்.

''ட்ரெக்கிங் போகும் சமயத்தில், குழிகளுக்குள்ளோ மரப் பொந்துகளுக்குள்ளோ கை கால்களை விடக் கூடாது. உயரமான புற்களுக்கிடையில் நடப்பதைத் தவிர்க்கலாம். பாறைகளுக்கிடையிலும் பாம்புகள் இருக்கும் என்பதை மறக்கக் கூடாது. இரவில் நடமாடும்போது கையில் டார்ச் விளக்குடன் செல்வது நல்லது' என்றார்.

நாட்டு வைத்தியர்கள், பாம்புக்கடிக்கு முதல் உதவியாகச் 'சர்ப்ப கந்தி’ என்னும் மூலிகையின் வேரைப் பொடி செய்து உட்கொள்ளக் கொடுப்பார்கள். ''பொள்ளாச்சிக்குப் பக்கத்தில் இருக்கும் ஆழியாறு வன மரபியல் பூங்காவில், இந்தச் செடிகள் விலைக்குக் கிடைக்கின்றன. விலை 3 ரூபாயில் இருந்து 10 ரூபாய்க்குள்தான். வீட்டுத் தோட்டத்திலேயே வளர்க்கலாம். சர்ப்ப கந்திச் செடியின் வேரை வால்மிளகுடன் சேர்த்துப் பொடி செய்து கடிவாயின் மேல் தடவுவதோடு, உட்கொள்ளவும் கொடுக்கலாம்'' என்கிறார் மூலிகை வளர்ப்பில் அனுபவம் மிக்கவரான ஷாஜஹான்.

வீடு மற்றும் தோட்டங்களில் இருக்கும் பல விதமான பாம்புகளையும் பிடித்து வனப் பகுதியில் விடுவதில், ஊட்டியைச் சேர்ந்த சாதிக் வல்லுநர். 'ஸ்னேக் சாதிக்’ என்றால், ஊட்டியில் எல்லோருக்கும் தெரியும். அவருடைய அனுபவம் இது:

''நான் பாம்புகளைப் பிடிக்கப் போகும்போது ஹோமியோபதி மருந்து ஒன்றையும் கையில் வைத்திருப்பேன். யாரையாவது பாம்பு கடித்திருந்தால், கடித்த இடத்தில் இந்த மருந்தின் சில துளிகளை வைப்பதோடு, அரை டம்ளர் தண்ணீரில் பத்து சொட்டுக்கள் இந்த மருந்தைவிட்டு மணிக்கு ஒரு முறை குடிக்கவும் கொடுப்பேன். விஷத்தின் பாதிப்புக்குச் செய்யப்படும் இந்த முதலுதவி மிகவும் பலன் தரும். அனுபவம் இல்லாமல் பாம்பு பிடிக்கப் போகாதீர்கள். பாம்பிடம் இருந்து குறைந்தது 15 அடி தூரத்தில் இருங்கள். சாக்குப் பைக்குள் இருந்தபடியேகூடச் சில பாம்புகள் கடிக்கும் என்பதை மறக்காதீர்கள்'' என எச்சரிக்கிறார் சாதிக்.

நன்றி: விகடன்

பயமே விஷம் ஆகலாமா ?


அமெரிக்காவில் உள்ள 31 வயது பெண் ஒருவர் பக்கத்து வீட்டில் சுவர் ஏறி குதித்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த 26 வயது இளைஞர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள Seattle என்ற பகுதியில் நான்கு குழந்தைகளின் தாயான 31 வயது Chantae Gilman என்ற பெண் சமீபத்தில் தன்னுடைய வீட்டின் பக்கத்து வீட்டின் சுவர் மீது ஏறி குதித்து உள்ளே சென்று அங்கு கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த 26 வயது இளைஞர் ஒருவரை கற்பழித்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதுகுறித்து இளைஞர் போலீஸாரிடம் கூறிய வாக்குமூலத்தில் தான் அன்றைய இரவு பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு அசதியாக தூங்கிகொண்டிருக்கும்போது, திடீரென தன்மீது யாரோ படுத்திருப்பது போன்று இருந்ததாகவும், கண் விழித்து பார்த்தால் பக்கத்துவீட்டு பெண் என்னுடன் உறவு கொண்டிருந்ததாகவும், கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீஸார் Chantae Gilman என்ற பெண்ணிடம் விசாரணை செய்தபோது தனக்கு சில மாதங்களாக bipolar disorder என்ற நோய் இருப்பதால் தனக்கு அன்றைய தினம் என்னநடந்தது என்றே ஞாபகமில்லை என்று கூறியுள்ளார். இருவருக்கும் டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து பார்த்ததில் அந்த பெண் இளைஞருடன் செக்ஸ் உறவு புரிந்துள்ளார் என்பது உறுதியானது. எனவே Chantae Gilman மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

தூங்கிக்கொண்டிருந்த 26 வயது இளைஞரை கற்பழித்த 31 வயது பெண். அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்.


இந்த வருடம் மேமாதம் 26ம் திகதி பிரதமர் பதவியில் உத்தியோகபூர்வமாக நரேந்திர மோடி ஏறி உட்கார்ந்தார். நீண்டகாலத்துக்கு பிறகு அதிகூடிய பெரும்பான்மை ஆசனங்களுடன் ஒரு கட்சி ஆட்சியேறிய விந்தையை நிகழ்த்திக் காட்டியவர் அவர்.

பாரதீய ஜனதா கட்சியின் கொள்கைகளுக்காகவோ, தேர்தல் விஞ்ஞாபனத்துக்காகவோ அந்த வெற்றி அல்ல. மாறாக நரேந்திர மோடி என்ற பிரதமர் வேட்பாளருக்காகவே என்ற பெயருடன் பிரதமராக அமர்ந்து இந்த மாதம் 2ம் திகதியுடன் தனது நூறாவது நாளை தொட்டு தாண்டியுள்ளார்.

(சுப்ரமணிய (ஆ)சாமி போன்றவர்களை அணைத்து வைத்துள்ள ஒரு கட்சி நூறாவது நாளை தாண்டுவது சாதனைதான்)

மோடியின் நூறு நாள் ஆட்சியை ஒரு கண்ணோட்டம் பார்ப்பது நல்லது. நூறு நாள் என்பது ஒருவிதமான உரைகல் என்று மோடியே முடிவு செய்ததால் தான் தான் பதவி ஏற்றதும் தனது அமைச்சர்களை உடனடியாக நூறு நாட்களுக்கான திட்ட ப்ளுபிரிண்டை தயார் பண்ணி தமக்கு சமர்ப்பிக்கும்படி வேண்டினார்.

மோடியின் நூறு நாள் ஆட்சி என்பது எல்லாவிதமான திட்டங்களுக்கும் வெளிநாடுகளுடன் ஒப்பந்தம் போடுவதிலேயே ஆர்வம் காட்டி வருவதை பார்க்கலாம்.

உட்கட்டமைப்பு திட்டங்களுக்காக பிரதமர் மோடி ஜப்பான் சென்று அந்த நாட்டுடன் 35 பில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தங்களை கையெழுத்திட்டதும் இந்திய உட்கட்டமைப்புக்கு இதனைவிட சிறப்பாக திட்டங்களை தம்மால்தர முடியும் என்று செஞ்(?)சீனா கூறியதும் இந்தியாவின் அனைத்து துறைகளும் வெளிநாட்டு முதலீடுகளுக்காக திறந்து விடப்பட்டுள்ளதையே மோடி அரசு உறுதிபடுத்தி உள்ளது.

பாதுகாப்பு துறையினுள் கூட 49 வீதமான அந்நிய முதலீடுகளை அனுமதித்துள்ளது. அத்துடன் உலகின் மிகப்பெரும் தொடரூந்து (ரயில்) வலையமைப்பை கொண்ட இந்தியா தொடரூந்து வலையமைப்பில் 100 வீதமான அந்நிய முதலீட்டை அனுமதித்துள்ளது.

இவற்றால் இந்தியாவின் பங்குசந்தை புள்ளிகள் இந்திய தேசிய பங்குச்சந்தை ‘நிப்டி’ 8 வீதமும்,மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 9 வீதமும் அதிகரித்துள்ளது..

இரண்டு முறை பெற்றோல டீசல் விலைகளை குறைத்துள்ளதும் குண்டு துளைக்காத மேடையில் நின்றபடி சுதந்திரதின நிகழ்வில் பேசியதும் கொஞ்சம் வித்தியாசமானதாக பார்ப்பவர்களுக்கு இருந்தாலும் இன்னும் பல விடயங்களில் பழைய சோனியா காங்கிரஸ் நிலைப்பாடே நீடிக்கிறது.

ஊழல்,கறுப்புபணத்தை மீட்டு இந்தியா கொண்டு வருவது, உணவு பாதுகாப்பு சட்டம், நிலக்கரி ஊழல் என்பனவற்றில் இதே நீர்த்துப் போன காங்கிரஸ் நிலைப்பாடுதான் இன்னமும் நீடிக்கிறது. அதனைப்போலவே
எமது பிரச்சனையிலும் இன்னமும் அதே காங்கிரஸின் கண்களுக்கூடாகவே பார்க்கும் பார்வையே தொடர்கிறது மோடி ஆட்சியிலும்…

எட்விகே அன்ரோனியோ அல்பினா மைனோ என்ற சோனியா ராஜீவுக்கு இருந்த அதே அணுகுமுறைதான், இம்மியும் மாற்றமடையாமல் நரேந்திர தாமோதர மோடியின் காலத்திலும் தொடர்கிறது.

இதன் உள்அர்த்தம் ஒன்றேதான். இலங்கையுடன் நட்புறவு மிக முக்கியம் என்பதே சோனியாவினதும் நரேந்திர மோடியினதும் முக்கியமான நோக்கம்.

சிங்களத்துடன் நட்புறவாக இருந்து கொண்டு தமிழர்களின் உரிமைகளுக்காக ஒருபோதும் மத்திய அரசால் குரல் கொடுக்கவே முடியாது என்பதை எப்போது புரிய போகிறார்களோ..? ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் இந்தியக் கடலில் கொல்லப்படும் தமிழக மக்களுக்கும்கூட இந்தியா குரல் கொடுக்கவே முடியாது..

காலகலமாகவே இலங்கை,அல்லது சிறீலங்கா என்பது இந்தியாவுடனான தொடர்புகளை அறுத்தெறிந்து இன்னொரு சக்தியுடன் தொடர்புகளை வலுப்படுத்துவதை தடுப்பதற்கான முயற்சிக்கின்றோம் என்று சொல்லி சொல்லியே சிங்களத்தின் அத்தனை இனஅழிப்புகளுக்கும் இந்தியா துணைபோகின்றது..

இது இன்று நேற்றல்ல 1954ல் சேர் ஜோன் கொத்லாவலா என்ற சிங்கள அதிபருடன் நேரு மலையகத் தமிழர்களின் குடியுரிமைக்கு கொள்ளி சொருகிய ஒப்பந்தத்தை செய்தபோது அப்போதைய நேருவின் நண்பரும், கம்யூனிஸ்ட் தோழரும்(?), பாதுகாப்பு அமைச்சருமான கிருஸ்ணமேனன் கூறினார் ‘இந்த விசயத்தால் தமிழர்கள் பாதிப்படைவார்கள் என்பது நேருவுக்கு தெரியும். ஆனால் அதனை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை’ என்று நேருவுக்காக வக்காலத்து வாங்கினார்.

மேற்குலகின் எதிர்ப்பாளராக தன்னை காட்டிய நேரு அவுஸ்திரேலியாவுடன் இலங்கை அப்போது நெருங்குவதை தடுப்பதற்காகவே இதனை செய்ததாக காரணமும் கூறப்பட்டது.

இப்போதும் பாருங்கள் இதே நிலைதானே..சீனா வருகிறது..இதோ சீனா நுழைகிறது என்று சொல்லி சொல்லியே ஒரு இனத்தின் வாழும் உரிமை மறுக்கப்படுகிறது.

சீனாவையும், தமிழர்களின் உரிமையையும் ஒரே தராசில் வைத்து பார்ப்பதே இந்திய இராஜதந்திர கோணங்கித்தனம்..அதுவே மோடியின் காலத்திலும், இந்த 100 நாள் ஆட்சியிலும் தொடர்கிறது.

இதன் உச்சமாகவே சுப்ரமணிய (ஆ)சாமி ஒரு உத்தியோகபூர்வமற்ற இடைத்தரகர் போல சிங்களத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறார்.

சிறீலங்காவின் பாதுகாப்பு மாநாட்டில் தான் கலந்து கொள்வேன் என்று பகிரங்கமாக அறிவிப்பதில் தொடங்கி சிங்கள தேசம் பிடித்து வைத்திருக்கும் தமிழ்நாட்டு படகுகளை விடவேண்டாம் என்று தான்தான் மகிந்த ராஜபக்சவுக்கு சொன்னதாக சொல்வது வரை வந்துள்ளார்.

சுப்ரமணிய (ஆ)சாமி என்ற தனிநபர் சிங்களத்தின் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டால் என்ன சிங்கள அதிபரின் பாதங்களை புனித நீரால் கழுவினால் என்ன எமக்கென்ன? இந்தியாவின் பிரதிநிதி போல,பிரதிநிதியாக இவர் இதனை சொல்வதுதான் மோடி அரசு மீதும் சிறீலங்கா சம்பந்தமான வெளியுறவுக்கொள்கை மீதும் பலத்த சந்தேகங்களை எழுப்புகின்றது..

இந்தியாவின் குடிமக்கள் மீதான வெறியாட்டத்துக்கு இந்திய அரச கட்சியின் பிரதிநிதி ஒருவர் அந்நிய நாட்டுடன் ஒத்துழைப்பதை தேசம், தேசபக்தி என்று வரிக்கு வரி ஓதும் மோடி அரசும் பாஜக ம் எப்படி அனுமதிக்கிறார்கள் என்பதே இன்றைய தமிழக மக்களின் கோபமும் கேள்வியும்.

இதனை பற்றி கேள்வி கேட்கப்பட்ட போது தமிழ்நாட்டில் இருந்து மத்திய அமைச்சராக இருக்கும் ராதாகிருஸ்ணண் அப்படியே நழுவி பதில் சொல்வதை பார்த்தால் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜா இல்லை சுப்ரமணிய (ஆ)சாமியா என்ற சந்தேகமே எழுகிறது..

மேலும் சர்வதேச அழுத்தங்கங்களில் இருந்து சிங்கள தேசத்தை காப்பாற்றும் முயற்சிகளை இந்தியா முன்னரைவிட வேகமாகவே இப்போதும் தொடர்கிறது. ஐநா விசாரணைக் குழுவுக்கான அனுமதி மறுப்பு என்பது அதனையே காட்டுகிறது..

மோடிக்கு பிடித்தமான முறையில் அளுத்கமவில் முஸ்லீம்கள்மீது மகிந்தஅரசும் சிங்களபேரினவாதமும் தாக்குதல் நடாத்தியதன்மூலம் பாஜகவின் அதிஉயர்அதிகாரபீடமான ராஸ்ரியசங்கமசேவயாவின்(ஆர்எஸ்எஸ்) பேரருளை மகிந்தஅரசு பெற்றுவிட்டதோ என்றும் எண்ண தோன்றுகின்றது..ஏனெனில் தமது நிலைத்தல்,தப்பித்தலுக்காக சிங்களம் எதுவும் செய்யும் என்பதுதான் கடந்த ஆயிரமாயிர ஆண்டு வரலாறு-

மீண்டும் முதலாவது பத்திக்கே வருவோம்.இப்போதைய பாஜகவின் வெற்றி என்பது தனித்து நரேந்தர் மோடி என்ற மனிதனின் மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி..அந்த நரேந்தர்மோடி 2009 மே 10ம்திகதி பஞ்சாபின் லூதியானா மாநிலத்தில் நடந்த கூட்டத்தில்

‘ஆனால் எனது கேள்வி வேறு. குவாத்ரோச்சிக்காக இவ்வளவு தவித்துப் போகிறீர்களே.. பிரதமரிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்.

அங்கே ஸ்ரீலங்காவில் எந்தக் குற்றமும் செய்யாத நிரபராதிகளான எனது தமிழ் சகோதரர்கள் இத்தனை பேர் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், எவ்வளவு விதமான இன்னல்களை, கொடுமைகளை அவர்கள் சகிக்க வேண்டியள்ளது..

ஆனால் இன்று வரை இந்த டில்லி அரசாங்கம் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறது. 6 மாதங்களாக தமிழ் சகோதரர்கள் மீது தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த அரசு ஒன்றுமே செய்யவில்லை. தமிழ் நாட்டிலே அழுத்தம் அதிகரித்தவுடன், பிரணாப் முகர்ஜியை அனுப்பி வைக்கிறது.. அவர் அங்கு போய் ஏதோ பேசி விட்டு எந்த முடிவும் இல்லாமல் திரும்பி வருகிறார்.

ஒரு “நிரபராதி” குவாத்ரோச்சிக்காக படாதபாடு படுகிறீர்கள்.. அங்கே ஆயிரக் கணக்கில் நிரபராதிகளான தமிழ் சகோதரர்கள் பெரும் துயரத்தில் இருக்கிறார்கள் – ஆனால் அது உங்களை ஒன்றுமே செய்வதில்லை, இதை இந்த உலகமும் மக்களும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்..

..” -( மே-10, 2009 அன்று லுதியானா பொதுக் கூட்டத்தில் நரேந்திர மோதி) என்று உரையாற்றியதை இப்போது செயற்படுத்தக்கூடிய இடத்தில், அதிகாரத்தில் இருந்தும் அதனை தடுக்கும் சக்திகள் யார் யார் என்பதை கண்டுகொள்வதே நாளைய தமிழர்கள் நலனுக்கு மிக முக்கியமானதாக இருக்கும்.

நரேந்தர் மோடியின் நூறு நாள் ஆட்சியும், சுப்ரமணிய (ஆ) சாமியும்!- ச.ச.முத்து