MH 370: விமானி இறுதியாக சொன்னது "All right, good night" இல்லை

Share this :


காணாமல் போன MH 370 மலேஷிய விமானத்தின் பிளாக் பாக்ஸின் சிக்னல்கள் விரைவில் தீர்ந்து விடும் என்பதால், அதனை உடனடியாக கண்டுப்பிடிக்கும் பணியில் 10 விமானங்கள் மற்றும் 9 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மாயமான விமானம் குறித்த தெளிவான தகவல்களை கண்டறிய அந்த விமானத்தில் இருந்த பிளாக் பாக்ஸை தீவிரமாக தேடும் பணியில், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில், பிளாக் பாக்ஸை கண்டுபிடிக்க "towed pinger locator" என்னும் பிளாக் பாக்ஸ் கண்டறியும் கருவியோடு ஆஸ்திரேலியாவின் ஓஷன் ஷீல்ட் கப்பல் விரைந்துள்ளது. ஆனால், இப்போது வரை விமானத்தை தேட குறிப்பிட்ட பகுதி நிர்ணயிக்கப்படாததால், தேடுதல் பணயில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விமானத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் தலைமை வகிக்கும் அமெரிக்க கப்பற்படை அதிகாரி கேப்டன் மார்க் மேத்யூஸ் இப்போது இருக்கும் சூழ்நிலையை வைத்துப் பார்க்கும்போது பிளாக் பாக்ஸை கண்டுபிடிப்பது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது எனத் தெரிவித்தார்

பொதுவாக பிளாக் பாக்ஸின் பேட்டரி சக்தி சுமார் 30 நாட்கள் வரை செயல்படுமென தெரிகிறது. மார்ச் மாதம் 8 ஆம் தேதி மாயமான இந்த விமானத்தில் பேட்டரி இன்னும் சில நாட்களே செயல்படும் எனவும், தற்போது விமானத்தை தேடும் பகுதி இந்திய பெருங்கடல் அளவுக்கு உள்ளது இதில் பிளாக் பாக்ஸை பேட்டரி பவர் போவதற்குள் கண்டுபிடிப்பது கடினம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செயற்கைக்கோளில் பதிவான மிதக்கும் பொருட்களின் புகைப்படங்கள் மாயமான விமானத்தின் பாகங்கள் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமும் இந்த விமானத்தை குறித்து வெளியாகும் வெவ்வேறு விதமான செய்திகளால் மனமுடைந்துள்ள விமான பயணிகளின் உறவினர்கள் தங்களுக்கு உண்மை நிலையை தெரிவிக்க வேண்டுமென மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

மாயமாகும் முன் விமானத்தில் இருந்த விமானி ஒருவர் "All right, good night" என கூறியதாக பதிவு செய்யப்பட்டிருந்தது, ஆனால், அது தவறென்றும், இறுதியாக விமானி கூறியது, "Good night Malaysian three seven zero" என்பது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.