இப்படியும் கூட புற்றுநோய் வருமா

Share this :

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏராளம். பெரும்பாலானோருக்கு அத்தகைய புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது என்று தெரியும். அதில் புகைப்பிடித்தல், ஆரோக்கியமற்ற டயட் மற்றும் அதிகப்படியான கதிர்வீச்சுக்கள் சருமத்தில் பாய்வது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

புற்றுநோயானது ஆரோக்கியமற்ற சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறையுடன் தொடர்புடையது. ஆகவே புற்றுநோயைப் பற்றிய முழு விழிப்புணர்வானது அனைவருக்கும் இருப்பது என்பது மிகவும் அவசியம்.

ஏனெனில் புற்றுநோயை உண்டாக்கும் பல பொருட்கள் மற்றும் செயல்களை தினந்தோறும் மேற்கொள்கிறோம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் அவற்றால் கூட புற்றுநோய் ஏற்படும் என்ற அறிவு பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஏனெனில் அவற்றைப் பற்றி தெரிந்தால், எந்த ஒரு செயலையும் நிம்மதியாக மேற்கொள்ள முடியாது.

இருப்பினும், அவற்றை தெரிந்து கொண்டால், புற்றுநோய் ஏற்படுவதில் இருந்து தம்மை தற்காத்துக் கொள்ளலாம் என்பதற்காக தமிழ் போல்டு ஸ்கை, புற்றுநோயை ஏற்படுத்தும் சில விசித்திரமான காரணங்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

கருத்தடை மாத்திரைகள் கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டால், வாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று ஆய்வு ஒன்று சொல்கிறது. ஏனெனில் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவதால், உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதால், அவை வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

வேண்டுமெனில், மாத்திரைகளுக்கு பதிலாக வேறு கருத்தடைப் பொருட்களை பயன்படுத்தினால், புற்றுநோய வருவதற்கான வாய்ப்பை தவிர்க்கலாம்.

நைட் ஷிப்ட் வீட்டில் இருக்கும் பெண்களை விட, நைட் ஷிப்ட் செல்லும் பெண்களுக்கு புற்றுநோய் அதிகம் வரும் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே பெண்கள் நைட் ஷிப்ட் செல்வதை தவிர்ப்பது நல்லது.

பிரா பிரா அணிவதாலும் புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளதாக, ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகிறார். அதிலும் நாள் முழுவதும் பிரா அணிபவர்களுக்கு தான், மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்.

ஆகவே தினமும் இரவில் படுக்கும் போது, பிராக்களை அணியாமல் இருந்தால், மார்பக புற்றுநோயிலிருந்து விடுபடலாம்.

ஒயின் ஆராய்ச்சி ஒன்றில், சிறிய டம்ளர் ஒயினைக் குடித்தால், இருமடங்கு அதிகமாக புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதிலும் 125 மிலி டம்ளர் ஒயின் குடித்தால், வாய் மற்றும் தொண்டை புற்றுநோய் 168 சதவீதம் வரும் என்றும் சொல்கிறது.

சிப்ஸ் பெற்றோர்கள் தினந்தோஷம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக சிப்ஸ் கொடுத்தனுப்புவார்கள். ஆனால் அவ்வாறு வாரத்திற்கு 5 சிப்ஸ்களுக்கு மேல் சாப்பிட்டால், 27 சதவீதம் மார்க புற்றுநோய் வருவதாக, அதிர்ச்சியூட்டக்கூடிய விதமாக ஆராய்ச்சி ஒன்றில் தெரிய வந்துள்ளது.

சூப் தினமும் அதிக உப்பு போட்டு சூப் குடித்தால், வயிற்று புற்றுநோய் வருவதாக, நிபுணர் ஒருவர் சொல்கிறார்.

பவுடர் தினமும் முகத்திற்கு போடும் பவுடர் முகத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொண்டாலும், 40 சதவீதம் கருப்பை புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வு ஒன்று சொல்கிறது.

மொபைல் போன் தொடர்ந்து 10 நிமிடம் மொபைல் போன்களை காதுகளில் வைத்து பேசினால், மூளையில் மாற்றங்கள் ஏற்பட்டு, புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.

அதுவும் மொபைல் போன்களில் இருந்து வெளிவரும் கதிர்கள், மூளைச் செல்களை பிரித்துவிடுவதாகவும் கூறுகின்றனர்.