இன்றைய கிசு கிசு 09-09-2012

Share this :

மூணுஷா ஹீரோயினும் ராண ஹீரோவுக்கும் இடையே லவ்னு ஊரே பேச¤னாலும் அப்படி எதுவும் இல்லன்னு அம்மணி சொல்றாராம்... சொல்றாராம்... ஆனாலும் ரெண்டுபேரும் டெய்லி செல்போன்ல பேசறாங்களாம். அடிக்கடி பார்ட்டிக்கும் சேந்து போறாங்களாம். தமிழ்ல 3 படங்கள்ல நடிக்க¤ற மூணுஷா புதுபடம் எதுவும் ஒத்துக்கலையாம். பிப்ரவரி 2013ல ரெண்டு பேரும் மேரேஜ் பண்றதா பிளான் பண்ணியிருக்காங்கனு கோலிவுட்ல நெருக்கமானவங்க சொல்றாங்களாம்... சொல்றாங்களாம்...

கன்னட மாஜி சியெமை மணந்துவிட்டு மீண்டும் சினிமாவுக்கு வந்த ‘நேச்சர் பட ஹீரோயின் குட்டி ராதியோட சமீபத்திய சான்டல்வுட் படம் கைகொடுத்திருக்காம்... இருக்காம்... இதயடுத்து மறுபடியும் அதே ஹீரோவோட நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்காராம். இதையடுத்து ஏற்கனவே நடிச்சி பாதில நின்னுபோன படங்கள மறுபடியும் தூசி தட்டி நடிக்கவும் முடிவு பண்ணிருக்காராம். டோலிவுட் கோடி ராம இயக்கத்தில் நின்னுபோன படத்துல அம்மணி நடிக்க ஒப்புக்கிட்டாராம்... ஒப்புக்கிட்டாராம்...

நயன நடிகை 2 வருஷத்துக்கப்பறம் மெரினா சிட்டில நடக்க¤ற ஷூட்டிங்ல நடிக்க¤றாராம்... நடிக்க¤றாராம்... தல நடிகரோட நடிச்சிட்டிருக்க¤ற நயனிடம் யாராவது பேச முற்பட்டா, ‘இது வேலை பாக்குற இடம். இந்த இடத்துல எந்த மேட்டரும் பேச விரும்பலனு சொல்லி சைலன்ட் ஆயிட்றாராம். நடிகைக்கு யாரை பார்த்தாலும் மீடியா ஆட்கள் மாதிரியே தெரியிறாங்களாம். அதனாலதான் இந்த மாதிரி நடிகை சொல்றாராம்... சொல்றாராம்...


சமீபத்துல ஹீரோயினுக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்து சர்ச்சைல சிக்குன கொலவெறி இசை, புதுபடங்களுக்கு இசை அமைக்க பெரிய தொகை கேக்குறாராம்... கேக்குறாராம்... ஒரு படத்துல இசை அமைச்சதுக்காக இப்படியா பேமென்ட் ஏத்துறதுன்னு தயாரிப்புங்க திக¤லாகுறாங்களாம். இதனாலேயே நிறைய இயக்குனருங்க இசையை புக் பண்ண தயங்குறாங்களாம்... தயங்குறாங்களாம்...

மதர் ஆயிட்ட மீன ஹீரோயின், குழந்தைய கவனிக்கறதுலேயே காலத்த கழிக்க¤றாராம்... கழிக்க¤றாராம்... மலையாளத்துலயிருந்து சில இயக்கங்க நடிகைய நடிக்க கூப்பிடுறாங்களாம். அவங்கள வெயிட்டிங்ல இருக்க சொல்றாராம். ஆனா, கால்ஷீட் தர மறுக்கிறாராம். இதனால மீன நடிக சினிமாவுக்கு முழுக்குபோட்டுட்டாருன்னு டாக் பரவுதாம். தகவல கேட்டு ஷாக் ஆன நடிகை, ‘யார் என்ன சொன்னாலும் இப்ப குழந்தைய கவனிக்கறதுதான் முதல் வேலைன்னு சொல்றாராம்... சொல்றாராம்...

இலி நடிகை பாலிவுட் படங்கள்ல மட்டும் நடிக்க முடிவு பண்ணிட¢டாரு. அதனால ஐதராபாத்துல தங்கி இருந்த பங்களாவை காலி பண்ணிட்டாராம். மூட்டை முடிச்சோடு இரவோட இரவா மும்பைக்கு ஷிப்ட் பண்ணிட்டாராம். டோலிவுட் இயக்கம் யாராவது கால்ஷீட் கேட்டா ஒரு வருஷம் கழிச்சி பாக்கலாம்னு சொல்லி கட் பண்ணிட்றாராம்... பண்ணிட்றாராம்...

விஜய்யின் அடுத்தப்படத்தில் சமந்தா நடிக்கிறார்! கோலிவூட் லேட்டஸ்ட் டாக்!
சமந்தா இப்போது புதிதாக இரு தெலுங்குப் படங்களை ஒப்புக் கொண்டுள்ளதால், அதற்கேற்ப தேதியை அட்ஜஸ்ட் செய்துவிட்டு சொல்வதாகக் கூறியுள்ளாராம்.
இதுகுறித்து சமீபத்தில் அவர் கூறுகையில், “பெரிய இயக்குநர்களின் வாய்ப்பை இழந்துவிட்டது வருத்தம்தான் என்றாலும், தவிர்க்க முடியாத சூழலில் அந்த முடிவு மேற்கொள்ள வேண்டியிருந்தது. இப்போது மீண்டும் அதற்கு இணையான வாய்ப்புகள் வந்துள்ளன,” என்றார்.