you love it!

நான் புலிதான்;நான் செத்தாவது இந்தக் காங்கிரஸை விரட்டியடிப்பேன் பொங்கியெழுந்த சீமான்

May 5th, 2009 Posted in Uncategorized

seeman tamil eelam speech

திரைப்பட ஒளிப்பதிவாளர்  கவியரசு எழுதிய ‘மேலைக் கடலில் ஈழக்காற்று’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில்  நடந்தது.

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில், கேமரா கவிஞர் பாலுமகேந்திர முதல் பிரதியை வெளியிட, ஈழத்தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்த முத்துக் குமரனின் தந்தை குமரேசன் பெற்றுக் கொண்டார்.

தலைமை உரையாற்றி கவிஞர் காசி ஆனந்தன் பேசியதாவது:

ஊடகங்களும் அரசியல்வாதிகளும் இது தேர்தல் காலம் என கூறுகிறார்கள். இல்லை… அது பிழையானது. இது போராட்டக் காலம். தமிழகத்தின் ஒரே தொப்புள் கொடி உறவு ஈழத் தமிழர்களைக் காக்க ஒட்டுமொத்த தமிழகமே எழுச்சியுடன் நிற்கும் காலம்.

உலகில் எந்தப் போராட்டத்துக்கும் இல்லாத சிறப்பு ஈழப் போராட்டத்துக்கு உண்டு. வியட்நாம், தென் அமெரிக்கா, க்யூபா, சீனா, ரஷ்யா… என அனைத்து நாடுகளிலும் இன, நாடு விடுதலைக்கான போர் நடந்துள்ளது. ஆனால் அது அந்த மண்ணுக்குள்ளேயேதான் நிகழும்.

ஆனால் ஈழப்போர் மட்டும்தான், அந்த மண்ணிலும், மண்ணுக்கு வெளியேயும் பெரும் வீர்யத்துடன் நடக்கிறது. 32 ஆண்டுகள் களத்தில் தன் உயிரையும், உயிரான தோழர்களையும் பணயம் வைத்து போராடும் எங்கள் தலைவனை கொச்சைப்படுத்தாதீர்கள்.நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தோன்றும் ஒரு அற்புதத் தலைவர் பிரபாகரன்.

புலிகளை பயங்கரவாதிகள் என்கிறீர்களே… எப்போதாவது, ஒரு புலி அப்பாவி சிங்களவர்களை கொத்துக் கொத்தாகக் கொன்றதாகக் கூற முடியுமா?
எந்தப் புலி வீரனாவது ஒரு சிங்களப் பெண்ணை கெடுத்ததாக, குறைந்தபட்சம் கேவலமாக நடத்தியதாக நீங்கள் கேள்விப்பட்டதுண்டா… அல்லது இலங்கையின் எந்த ஆட்சியாளராலாவது அப்படி ஒரு புகாரைக் கூற முடியுமா? எந்த அடிப்படையில் இவர்கள் பயங்கரவாதிகள்? பிரச்சினைகளை பேசித் தீர்ப்போம். இந்தியாவை உண்மையாக நேசிக்கும் ஈழத் தமிழர்களில் ஒருவனாக இப்போதும் நாம் உடனடியாக வேண்டுவது: முழுமையான போர் நிறுத்தம், விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம், தமிழீழம் மலரச் செய்ய வேண்டும்” என்றார் காசி ஆனந்தன்.

பின்னர் பேசிய சீமான், ஒரு மணிநேரம் உணர்ச்சிமயமான உரை நிகழ்த்தினார்.

See Tamil Director Seeman Speech

”என்னைப் புலி என்கிறார்கள். நண்பர்களே… யார் புலி? இந்த சீமான் புலிதான். நான் மட்டுமல்ல… என் ஈழத்து அக்கா தங்கையை கற்பழித்து மானபங்கப்படுத்தியவர்களை எதிர்த்துக் குரல் கொடுக்கும் அனைவருமே போராளிகள்தான்… புலிகள்தான்!

பிரபாகரனை என் அண்ணன் என்று சொன்ன ஒரே காரணத்துக்காக என்னை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்ததாக எனக்கு விளக்கம் அனுப்பியுள்ளார்கள். இத்தாலி சோனியாவை பாரதத்தின் அன்னை என்று அழைக்கும்போது, என் சொந்த ரத்தம், என் தொப்புள் கொடி உறவு பிரபாகரனை அண்ணன் என்று சொல்லாமல் வேறு என்னவென்று அழைப்பேன்.

சர்வாதிகாரி, சகோதரயுத்தம் செய்தவன், பிழைக்கப்போன இடத்தில் நாடு கேட்கிறான், தன் புகழை வளர்க்க சண்டை போடுகிறான்…. இப்படி அவரைப் பற்றி எத்தனை அவதூறுகள்… பொய் பழிகள். ஆனால் அத்தனையையும் பிரபாகரன் எனும் பெரு நெருப்பு சுட்டுப் பொசுக்கிவிடும் என்பதை இவர்களுக்கு காலம் புரியவைக்கும்.

தமிழன் சாவதை, தமிழ்ப் பெண்கள் மானம் சூறையாடப்படுவதை, தமிழ்ச் சகோதரன் வெட்டப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் கிட்பபதை நம்மால் வேடிக்கை பார்க்க முடியாது. இழவு வீட்டில் அழத்தானே செய்வார்கள். வாய் மூடி நடிக்க இங்கே என்ன படமா எடுக்கிறார்கள்…. சூடு சொரணை இல்லாத ஈனப்பயலா நாங்க…

அடிமையாக வாழ்வதைவிட சுதந்திரமாகச் சாவது மேல் என்பதை நம்புபவர்கள் நாங்கள். ‘மதுக்கடையிலும், திரையரங்க வாசல்களிலும் கூட்டம் கூட்டமாய் நின்று உணர்வை இழந்து கொண்டிருக்கும் என் சகோதரர்கள் இதைப் புரிந்து கொள்ளவில்லையே’ என என்னிடம் வருத்தப்பட்டுக் கூறினார் அண்ணன் பிரபாகரன்.

கடலுக்கு அப்பால் உள்ள தமிழனும் சாகிறான்… இந்தப் பக்கம் உள்ள தமிழனும் சாகிறான். நாதியத்துப் போன கூட்டமாகிவிட்டோமே என்ற ஆற்றாமை என்னை பாடாய்படுத்துகிறது…

இலங்கை என்ற ஒரு நாடு கிடையாது… ஈழம்தான் அதன் உண்மையான பெயர். சட்டம், போலீஸ், ராணுவம், வரி வசூல், கல்வி, போக்குவரத்து… என ஒரு பிரபாகரன் கட்டியெழுப்பிய ஒரு அற்புதமான நாட்டை அழிக்க முழு முதல் காரணம் இந்த காங்கிரஸ். அந்தக் காங்கிரஸ் இந்த மண்ணிலிருந்தே விரட்டப்பட வேண்டும்… நான் செத்தாவது இந்தக் காங்கிரஸை விரட்டியடிப்பேன்… என்றார் சீமான்.

இயக்குநர்கள் பாலு மகேந்திரா, கேஎஸ் அதியமான், வழக்கறிஞர் பால் கனகராஜ், ஓவியர் புகழேந்தி ஆகியோரும்  பேசினர். பத்திரிகையாளர் சுந்தர புத்தன் வரவேற்றுப் பேசினார். ‘மேலைக்கடலில் ஈழக்காற்று’ புத்தகத்தை எழுதிய கவியரசு நன்றி கூறினார்.

33 Responses to “நான் புலிதான்;நான் செத்தாவது இந்தக் காங்கிரஸை விரட்டியடிப்பேன் பொங்கியெழுந்த சீமான்”

More comments on this: [4] 3 2 1 »

  1. 33
    Santhiya:

    If each country should mind their own business and let alone a country that has been suffering for this many years I wonder why there is such a thing as globalization. EVERYONE NEEDS OTHER COUNTRIES PRODUCT AND SURVICE so each can benifit making money .. everytime a country has some resourse another country gets involved BUT ONLY WHEN HUMANITY ISSUE ARISES EVERYONE SHOULD LIVE WITHIN THEIR BOUNDS RIGHT???? shame on you people who learned in history massive killings take place in this earth and it is each of our resposibility to talk agaist injustice.. BUT ALL OF YOU HAVE BIG MOUTH TO TALK FOR NONSENSE NOT FOR LIVES THAT ARE BEING THROWN ON THE STREETS!!!!

  2. 32
    thamizhan:

    well said raj,maya .And my sincere thanks to katheeja for sharing ur views truely.i too heard from u r people who r my friends saying that ltte has ceased their vans bikes ceasing is even better they have stolen their bikes it seems.Is tht a real freedom struggle.I dont think so if u r fighting for ur rights all the people will be united no one will join ltte with compulsion. most of d people have been forced to join in their troops by threating .I advise u innocent people to realise ur faults and atleast try to wake up.This is not a fake story i hv friends who r from jaffna who still striving for .

  3. 31
    Maya:

    Oh i am not surprized katheeja!

    We’ve not been affected by that organization but we realized that…

    thanks for sharing….

    My prayers for you!

    Take care

  4. 30
    Raj:

    Well said abi…i just want to say one point.
    Indian govt helping tigers is like pakistan govt helping terrorist in kashmir…terrorism in any form is terrorism…be it from tamil…be it from muslims…naama yepadi kashmir a vitukoduka maatengaromoo ade maadri i dont see a point for srilanka to do the same….TIGERS DESERVES THIS….appavi makkal urirukaaga naama kadavul prathana panikalaam….thts it…

  5. 29
    katheeja:

    oru puli endha singhala wannnai konrathaka unra??
    they killed villages of sinhala & muslim commiunities.They chased the muslim people from north.they gave them 12 hours to leave their homeland.LTTE killed so many tamil people if they turn against them. They’ll shoot them and hang them on electric post slo that it’ll be a lesson for otherr people not to turn against them.
    Even now how many innocent tamil child solders are taken from their families without their parents consent. They are not poralikal. They are Theeviravaathikal.
    i agree srilankan army killed tamil civillians but that doesn’t mean LTTE are surviors.they are using tamil people as human sheilds & keeping tamil people in their captive against those peoples will.
    i was affected by LTTE>
    They took our 2 houses in mannar by forcly. If you live in the affected areas you’ll will know the true colours of LTTE.

  6. 28
    thamizhan:

    yaaraa kanna indha tamil.thamizhaaaaaaaaa ucharikka theriyadha tamilan.how d fuxk u say abi loosu.nee tamil a ?yenga tamilnadu.illa naangalum tamil tamil nu solra jadhi ya .dei nethu penja malai molacha kaalam periyavanga decent pesikitiromla inna chinna pulla thanama fuxk mukkunu.raja yengalukkum english theriyum thamizh nallave theriyum,kekanumna vaada kanna vandhu vaangi kattiko.poi unga othakku help pannu mathavangalukku apparam pannalaaaaaaaaaaaam

  7. 27
    RS:

    To Tamil

    Execuse me….Abi never spoke a single word bad…mind ur words

    Also Abi never said others not to help and she did not say she herself won’t help either….

    better mind ur own business if u have one…

    Lets see what happens to that country…if u keep saying other Indians loosu….while the date of u becoming a loser is very near…

  8. 26
    Tamil:

    hei abi,unaku enna paithiyama? loosu maathiri onnu pesuthu athuku matha loosellaam senthu jalra thattuthu…… if u dont wanna help others just shut ur f**k up n do ur bussiness n let the others help.

  9. 25
    RS:

    Wow Abi

    That was the best comment i’ve ever read. Prabhakaran where r u? u’ve ran away? Reply Abi…

    She/He…A true Indian…I pray god that every Indian in India and all over the world have similar thots like Abi.

    As she said other state ppl do care but it is having a huge impact only on Tamil Nadu…to be specific only on Tamil Nadu politicians…ppl are not much involved in this

    there is lot more to be done in India…we shall pray god for those innocent ppl…and get back to Indian issues….

    Keeping in mind that ppl are being killed in someother country…just keep praying…and also keenly concentrate on what has to be done in our Country…

    Never segregate India atleast not in words…..itsa shame to say like that in internet where many ppl from other country might read this…

    Anyone daring to put down India will face a lot no matter where they live….

    BHARATH MATHA KI JAI!!!

    ABI KI JAI!!!!

  10. 24
    truth:

    See this.
    It is easy to comment
    You are safe,when there is a threat to your life tell this.
    http://www.kuraltvinfo.com/video-cine-state-kasper.html

More comments on this: [4] 3 2 1 »

Leave a Reply


Add a photo to your comments! SIGN UP NOW!
Question:What is gravatar?
Answer :A gravatar is quite simply an photo that follows you by appearing beside your name when you comments.

You can use these HTML tags in your comments: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Copyright © 2008 techsatish |Trademarks|Terms Of Service | Privacy Policy | Liability Disclaimer | Contact Us