பிரெஞ்சுத் தமிழ் மக்களால் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப்போராட்டம்
March 14th, 2009 Posted in Uncategorizedஉலகளாவியரீதியில் தமிழக மாணவர் கூட்டமைப்பால் முன்னெடுக்கப்பட்ட அடையாள உண்ணாவிரதப்போராட்டத்திற்கு, பிரான்ஸ் தமிழ் மக்களும் ஆதரவு வழங்கி உண்ணாவிரதத்தை உணர்வுடன் முன்னெடுத்திருந்தனர். வெள்ளிக்கிழமை காலை 09 மணிமுதல் மாலை06 மணிவரை இப்போராட்டம் நடைபெற்றுள்ளது.

பிரான்சில் தமிழர் வர்த்தகமையப்பகுதியான லாச்சப்பல் பகுதிக்கு அருகாமையிலுள்ள யூறஸ் பகுதியில் பிரான்ஸ் தமிழ்வர்த்தகர் சங்கத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்ட இப்போராட்டத்தில் பெருமளவிலான தமிழர்கள் உணர்வுடன் பங்கேற்றிருந்தனர்.
அமைதிஅடையாள உண்ணாவிரதப்போராட்டத்தின் இறுதியில் பிரான்ஸ் தமிழர் பிரதிநிதிகள் வர்த்தகசங்க உறுப்பினர்கள் உரையாற்றியிருந்தனர்.

இறுதியாக உரையாற்றிய வர்த்தக சங்க பிரதிநிதிகள் தமிழீழம் மலரும் நாள்வரை அனைவரும் சிறிலங்காவின் வர்த்தகப் பொருட்களைப்புறக்கணிப்போம். தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை சோர்வின்றி நாம் அனைவரும் உழைப்போம் என்ற உறுதிப்பாட்டுடன் போராட்டத்தை நிறைவிற்கு கொண்டு வந்தனர்.








இன்று புலம் பெயர் நாடுகளில் பிரபாகரனை தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடுவதற்கு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, பிரபாகரன் தொடக்கிய சண்டையால் தான், நாட்டை விட்டோடி புலம்பெயர் நாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ முடிகிறது. அதைவிட பிரதானமானது, யாழ் மேட்டுக்குடியினரின் பரம சத்துருக்களான “மோட்டுச் சிங்களவனுக்கும்’, ‘தொப்பி பிரட்டிச் சோனகனுக்கும்’. ‘இந்தியாக்கார வடக்கத்தையானுக்கும்’ எதிரான மனோபாவத்துக்கு, பிரபாகரன் தான் செயல்வடிவம் கொடுத்து வருகின்றார்!