புலிகளை கடலினுள் தள்ளிவிடும் நன்னாளில் உங்கள் வீடுகளில் சிங்கக் கொடிகளை ஏற்றுங்கள்: சிங்கள மக்களிடம் மகிந்த வேண்டுகோள்
January 20th, 2009 Posted in Uncategorized
Sri Lanka President Mahinda Rajapakse and Former LTTE Eastern Commander Colonel Karuna
தமிழீழ விடுதலைப் புலிகளை கடலினுள் தள்ளிவிடும் நன்னாளில் உங்கள் வீடுகளில் சிங்கக் கொடிகளை ஏற்றுமாறு சிங்கள மக்களிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாவுலவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மத்திய மாகாண சபை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மகிந்த உரையாற்றிய போது மேலும் தெரிவித்ததாவது:
பொறுமை இழந்த நிலையில் நாம் அன்று மாவிலாறில் தொடங்கிய படை நடவடிக்கைப் பயணத்தை இடை நிறுத்தாமலும் பின்வாங்கிச் செல்லாமலும் முன்னெடுத்துச் செல்கின்றோம். அதன் விளைவாக இன்று புலிகளும் அவர்களின் தலைவரும் ஒரு சிறிய நிலப்பரப்பிற்குள் சிக்குண்டுள்ளனர். மிகச்சிறிய எண்ணிக்கையைக் கொண்ட இக்குழுவினரை எமது படையினர் கடலினுள் தள்ளிவிடும் நாள் தூரத்தில் இல்லை.
அந்த நன்னாளில் உங்கள் வீடுகளில் சிங்கக் கொடிகளை பறக்கவிட்டு நாம் இழந்து போய் இருந்த சுதந்திரத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு எமக்கு உதவிய பாதுகாப்பு படையினரை வரவேற்பதற்கும் வாழ்த்துக் கூறுவதற்கும் ஆயத்தமாகுங்கள் என்ற செய்தியை உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
See Srilanka Tamil Tiger Photos
வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், புலிகளின் வாய்களில் இருந்து நாட்டை மீட்டெடுத்து பிரிவினையற்ற ஐக்கிய மிகுந்த நாடாக இந்நாட்டை பிரகடனப்படுத்தவிருக்கும் தருணத்தில்தான் மத்திய மாகாண சபை தேர்தலில் வாக்களிப்பதற்கு எதிர்பார்த்திருக்கின்றீர்கள்.
நீங்கள் அளிக்கும் வாக்குகள் நாம் செல்லும் இப்பயணத்துக்கு மக்களின் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்பதை முழு உலகிற்கும் பறைசாற்றும் ஓர் மாகாண சபைத் தேர்தலாக அமைப் போகின்றது. நாட்டுக்காக நீங்கள் நிறைவேற்றக்கூடிய கடமை என உணர்ந்து செயற்படுவீர்கள் என்பது எனது நம்பிக்கையாகும் என்றார் அவர்.
சிங்கள அரசுக்கு துணை போகும் இந்திய அரசினைக் கண்டித்து தமிழகத்தில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

| Sri lanka Presidential Advisor Basil Rajapaksa and India’s Foreign Secretary Shivshankar Menon |
| சிங்கள அரசாங்கத்தின் தமிழினப் படுகொலைக்கு துணைப் போகும் இந்திய அரசாங்கத்தினை கண்டித்து வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. |
| இது தொடர்பாக அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழகமெங்கும் உள்ள அனைத்து கல்லூரிகளின் மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று திங்கட்கிழமை சென்னையில் நடைபெற்றது. See Srilanka Tamil Tiger Photos இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: 1. தமிழகமெங்கும் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. இதன் ஒருங்கிணைப்பாளராக சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் கே.வெங்கடாசலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2. சிங்கள அரசின் தமிழினப் படுகொலைக்கு துணைபோகும் இந்திய அரசைக் கண்டித்து கூட்டமைப்பின் சார்பில் நாளை மறுநாள் புதன்கிழமை (21.01.09) முதல் தமிழகம் எங்கும் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. |








srilankan bastards is going to repay
We bless Mr. Ettappan KARUNA….
But One day Srilankan Government answer to Tamil History…
Welcome………
Its really sad to read this news that LTTE has gobe down who is the saviour of Thamizh Eeazham… From now on, God even cannot save Tamils from SLA and Sinhaleese. Shame on Srilankan people and budhist monks who never follow any principles of Siddhartha but say themselves as true Buddhists. Better they can say themselves canibals or dead eating vultures…
Congratulations to Mr.Rajapakshe on your successful invasion on Eezham. History will remember for this invasion, not only you, but also few other people like Karuna, MK Narayanan, Shivsankar Menon, Karunanidhi, Jayalalitha, Manmohan Singh and Sonia.
Karuna has joined the ranks of Brutus. He is the person who gave a detailed picture of Eezham.
Karunanidhi and Jayalalitha will think only about their kin and kith. For them, Tamils are born only to praise them. But remember, history forgets any good deeds, if you have done any big deceipt. You will be remembered only for your passive support to SriLanka (thereby alienating the Eezham land and People). Both of you are heirs of Ettappan.
But it is history that any suppressed group will outburst magnanimously.