இந்திய அரசின் தாமதத்தால் இலங்கையில் ஒவ்வொரு நிமிடமும் தமிழனின் பிணம் விழுகிறது: கருணாநிதி
December 27th, 2008 Posted in Uncategorizedஇந்திய மத்திய அரசாங்கத்தின் தாமதத்தால் இலங்கையில் ஒவ்வொரு நிமிடமும் தமிழனின் பிணம் விழுந்து கொண்டிருக்கின்றது என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் கலைஞர் மு.கருணாநிதி ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் செத்துக்கொண்டிருக்கும் தமிழர்களை காப்பாற்ற வேண்டிய மிக முக்கியமான கடமை நமக்குள்ளது. இலங்கை தமிழர்கள் பச்சைக் குழந்தைகளோடு பரிதாபமான நிலையில் நடுத்தெருவில் நின்று கொண்டிருக்கின்றனர்.
அதற்காக வன்முறை வழியில், பலாத்கார வழியில், நாட்டுக்கு விரோதமான வழியில், தேசத்துக்கு பகையான வழியில் செல்ல நாம் விரும்பவில்லை.
இந்த விடயத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவு நாம் ஏற்றுக்கொள்ளும் முடிவாக இருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு நாம் விரும்பும் அவசரத்துக்கு வேகமாக முடிவு செய்யாமல் இன்னும் இன்னும் இன்னும் தாமதம் செய்து வருவதால் அதன் ஒவ்வொரு நிமிடமும் அங்கே ஒரு தமிழனின் பிணம் விழுந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த பொதுக் குழுவின் சார்பிலே தெரிவித்துக் கொள்கின்றேன்.
See more DMK Governing Council Meeting photos
இது விடயமாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முறையிட்ட போது அவர் எங்களுக்கு தந்த வாக்குறுதி பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி போர் நிறுத்தத்துக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.
அந்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்றுவார் என்று நம்புகின்றோம். அந்த வாக்குறுதியை வலியுறுத்தியே இங்கு தீர்மானம் போடப்பட்டுள்ளது. எனவே, இந்த பொதுக்குழு தீர்மானத்துக்கு மதிப்பளித்து மத்திய அரசு அதனை நிறைவேற்றி தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம்.
மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு சாதனைகளை செய்திருக்கின்றது. அந்த வரிசையில் இலங்கைத் தமிழர்களின் இன்னல்களைக் களையும் சாதனையையும் செய்து முடிக்க வேண்டும்.
அங்கே தமிழர்கள் அன்றாடம் உயிர் விட்டுக் கொண்டிருக்கின்றனர். அதைத் தடுத்து நிறுத்த குறுக்கு வழியில் மத்திய அரசை மிரட்ட நாம் விரும்பவில்லை. எனது நிலையை, திமுகவின் நிலையை, தமிழக மக்களின் நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் விளக்கியிருக்கின்றேன்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் இளம் தலைவர் ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பிறகு, மறைவுக்கு முன்பு என்று இரண்டு பிரிவாக பார்க்க வேண்டும் என்று நான் கூறியிருக்கின்றேன். இன்று இலங்கையில் தமிழர்கள் போர் காரணமாக இன்னமும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். இதனால் தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான தமிழர்கள் மனதில் ரணம் ஏற்பட்டிருக்கின்றது.
அவர்களின் ரணத்தை ஆற்ற வேண்டிய பொறுப்பு, அவர்களின் புண்ணுக்கு மருந்து போட வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு என்று நான் உருக்கமான வேண்டுகோளை விடுக்கின்றேன்.
இந்தக் கோரிக்கையை ஏற்று இலங்கைத் தமிழர்களை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும். இதற்காக செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை மிக மிக பணிவாகவும், மிக மிக உரிமையோடும் கேட்டுக்கொள்கின்றேன்.
இதன் பிறகாவது மத்திய அரசு மனம் இறங்கி இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களில் இதனையே முக்கிய தீர்மானமாக கருதி மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.








full of lies .
***Kalaingar Vaalga***
Anbulla Kalaingar avargalea……
Neegal innam pallaayiram aandugal vaalga.
Pallayiram Aandugal vaalndhu Tamilargalukku ondrum seyyaamal Ungal kudumbaththai nangu valakka En Anbu Vaalthukkal.
Ippadikku: Tamilnadu Arasiyal Thollai thaanga mudiyaamal America vandha Indian…..
KARUNANIDHI is a gr8 actor and he has proved it here.
He has mentioned that he has sacrificed their Central position already. But when did that happen. All the DMK team fooled Tamil people as if they where ready to resign the MP post. I am sure this is the story that is going to continue until the next central election.
MY DEAR TAMIL PEOPLE, please dont believe DMK , That does not mean ADMK is great. That is again another JUNK.
In the next central election every body please VOTE to a party less contestent………..
karunanithy nadikirar..avarthan tamil nattu super star…hihiihiihih
meenuku valum pambuku thalayum katum vedathary…eaala tamilar ku uyirkodupen enru solreenga..ana unga pathavi kodukka romba kastam..enna….samy neenga enga eaala prachinaiya…unga arasiyal velaikku pali kodukatheenga plsssssssssssssss…nanga emanru vitom ..ini nangale enga prob solve panni kolkirom…thayvu seythu unga arasiyaluku engal p[oratathai kochai paduthatheenga…itha miga thalmaya kettu kolkirom
Really, this has become redundant. India doesn’t have the power to do anything. Just because there is a historical background that links the people, everyone assumes India must take charge. To stop the genocide in Srilanka, we must look to a bigger player in Asia, like China, to come to the aid. In my opinion, Tamils need to focus on getting the help of China and Western powers. Everyone should their little bit on that front.
There are so many people suffering in Tamil Nadu. TN has got so many problems (no water, no good infrastructure, power cuts etc). The chief minister should do something for the welfare and development of people of TN before he begins to care about SL tamils’ issue.
Greta decision. Let us see what this congress does.