ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து சின்னத்திரை கலைஞர்கள் உண்ணாநிலை போராட்டம்
November 9th, 2008 Posted in Uncategorizedஇலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் தமிழர் படுகொலையை கண்டித்தும் சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சார்பில் இன்று உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது.
சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரில் உண்ணாநிலை போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிக்கு தொடங்கியது.
இந்நிகழ்வுக்கு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு தலைவர் விடுதலை தலைமை தாங்கினார்.

உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கி வைத்து பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எஸ். திருநாவுக்கரசர் ஆற்றிய உரையின் போது தெரிவித்துள்ளதாவது:
கடந்த ஐம்பது ஆண்டுகளாக இலங்கையில் பிரச்சினை தொடர்கிறது. இலங்கை அண்டை நாடு. சட்ட ரீதியாக அண்டை நாட்டு பிரச்சினையில் தலையிடக்கூடாது என்றாலும் அங்கு வாழும் தமிழர்கள், நம் உறவினர்கள், சொந்தக்காரர்கள். அவர்கள் பாதிக்கப்படும்போது அகதிகளாக இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்துக்கு வருகின்றனர். அவர்களுக்கு வேண்டிய உணவு, இருப்பிடம் ஆகியவற்றை எமது அரசு வழங்க வேண்டியுள்ளது. இதுவரை ஒரு லட்சம் பேர் அகதிகளாக இங்கு வந்துள்ளனர்.
எனவே இது அண்டை நாட்டு பிரச்சினை எனக்கூறி ஒதுங்கிவிட முடியாது. இது எமது நாட்டு பிரச்சினையும்தான். ஒரு காலத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியாக இலங்கை இருந்தது. அதை மறந்து விடக்கூடாது.
TV artistes stage fast over Sri Lankan Tamils issue Photo Gallery
உலகில் பல நாடுகளிலும் போர் நடக்கிறது. ஆனால் எந்த நாட்டு இராணுவமும் சொந்த மக்களை கொல்லவில்லை. ஆனால் அத்தகைய அட்டூழியத்தை சிறிலங்கா அரசு செய்து வருகிறது. இதுவரை 2 லட்சம் தமிழர்கள் வீடு, உடமைகளை இழந்து இலங்கை காடுகளில் பதுங்கி வாழ்கின்றனர். அதில் 200 பேர் வரை பாம்பு கடித்து இறந்துள்ளனர். தமிழர்களுக்கு நாட்டிலும் பாதுகாப்பு இல்லை. காட்டிலும் பாதுகாப்பு இல்லை.
போர் நடத்தும்போது சில கட்டுப்பாடுகள் இராணுவத்துக்கு விதிக்கப்படும். ஆனால் அதை எதையுமே சிறிலங்கா இராணுவம் பின்பற்றவில்லை. குழந்தைகள், பெண்கள், முதியோர் தாக்கப்படுகிறார்கள். வழிபாட்டு தலங்கள் மீதும் தாக்குதல் நடத்துகின்றனர். இது கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசு உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும். அந்நாட்டுக்கு ஆயுத உதவியும் இராணுவத்தினருக்கு பயிற்சியும் வழங்குவதை நிறுத்த வேண்டும். அந்நாட்டு இராணுவம் புரியும் அட்டூழியங்களை இந்தியா வேடிக்கை பார்க்கக்கூடாது.
இலங்கை தமிழர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண உதவிகளை சிறிலங்கா அரசு மூலம் வழங்கக்கூடாது. செஞ்சிலுவைச் சங்கம் அல்லது ஐ.நா. சமூக அமைப்பு மூலம் வழங்க வேண்டும் என்றார் திருநாவுக்கரசர்.
சின்னத்திரை கலைஞர்கள், தங்களது ஒரு நாள் சம்பளத்தை இலங்கை தமிழர்கள் நிவாரணத்துக்கு வழங்குவதாக தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் நடிகர்களான அஜய் ரத்னம், ராஜ்காந்த், மோகன்ராம், கே.நடராஜன், வசந்த், மனோபாலா, தேவ் அஜய், சிவன் சீனிவாசன், ஜெயமணி, கமலேஷ், ரிஷி, நந்தகுமார், அழகு, நெல்லை சுப்பையா, ஜோக்கர் துளசி,
நடிகைகளான தேவயானி, தீபா வெங்கட், மஞ்சரி, பிருந்தாதாஸ், மருத்துவர் சர்மிளா, நித்யா, மவுனிகா, வந்தனா, மோனிகா, ராணி, லலிதா,
இயக்குநர்களான சி.ஜே. பாஸ்கர், திருச்செல்வம், பாலாஜி, ரகுநாதன், ராஜ்பிரபு, மூவேந்தர், இ.இராமதாஸ், தேவேந்திரன், இராஜேந்திரன், இராமலிங்கம், அசோகன், இராதாகிருஷ்ணன், ரஞ்சித்குமார், வியட்நாம் வீடு சுந்தரம்,
தயாரிப்பாளர்கள் பி.வி. சங்கர், சக்திவேல், விஜயகுமார்,
எழுத்தாளர்களான இதயசந்திரன், கென்னடி, எழுத்தாளர் கண்மணி சுப்பு, நெல்லை சுந்தர்ராஜன், மோகன் மற்றும் ஏராளமான தொலைக்காட்சி நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர்.








it is very nice of them to support tamils in sri lanka, in fact i am very happy that tamil nadu is showing great support for tamils in sri lanka but in my opinion india is neva gonna do much to help tamils in sri lanka…perhaps if indira gandhi or mgr was alive, they would have done something for the tamils … now days politicians turn every bit of issue to attack another party, their aim is clear that they don’t care about anything but mostly care about their benefit…with what rajapakse said recently, he is not gonna give up war…it is a good time for them as every country is giving them all the means for the war…i am sorry to say but i feel sri lanka would be a thing of the past for sl tamils…not much hoping in india
A huge thank you for all the people from India who are bringing to light and who are doing their bit to show the phlights of Tamils in Srilanka. To put aside ones own differences and unite together for the help of those suffering is something in itself.
Thank you.