you love it!

கடைசி தமிழன் உயிருடன் இருக்கும் வரை இலங்கை தமிழர்களை அநாதையாக விடமாட்டோம்: கவியரசு வைரமுத்து சூளுரை

October 20th, 2008 Posted in Uncategorized

கடைசி தமிழன் உயிருடன் இருக்கும் வரை இலங்கை தமிழர்களை அநாதையாக விடமாட்டோம் என்று பிரபல பாடலாசிரியர் கவியரசு வைரமுத்து சூளுரைத்துள்ளார்.

தமிழ்த் திரையுலகத்தினர் இராமேஸ்வரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய பிரமாண்ட பேரணியில் கவியரசு வைரமுத்து பேசியதாவது:

இலங்கை தமிழ் மன்னர்கள் ஆண்ட பூமி. அது தமிழர்களுக்கு சொந்தமான மண். இலங்கையிலும், மதுரையிலும் உள்ள படிகபாறைகளை ஆய்வு செய்தபோது அவை ஒரே மண்சார்ந்த நிலத்தில் உருவானதுதான் என்று தெரியவந்தது.

நிலவில் இருப்பது என்ன என்பதை அறிந்துகொள்ள 3 லட்சத்து 44 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலாவுக்கு வருகிற 22 ஆம் நாள் நாம் விண்கலத்தை ஏவுகிறோம். ஆனால் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலங்கையில் நடப்பது என்ன என்பதை அறிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.

சிவகாசி பட்டாசு போல தமிழ் மக்களை வெடிவைத்து கொல்கிறது சிங்கள இராணுவம். அங்கு சிறுவர்கள், சிறுமிகள் மீது கூட அடக்குமுறை கையாளப்படுகிறது.

கடைசி தமிழன் உயிருடன் இருக்கும் வரை இலங்கை தமிழர்களை அநாதையாக விடமாட்டோம். அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் வெற்றிபெற தமிழர்களை அழிப்பதை லட்சியமாக கொண்டுள்ளார் ராஜபக்ச. அதற்காக உங்கள் ஓட்டுப்பெட்டிகளில் எங்கள் தமிழர்களின் தலை, வாக்குகளாக விழவேண்டுமா?.

இந்திய அரசு சிறிலங்கா இராணுவத்துக்கு ராடர் கருவிகளை கொடுப்பதாக கூறுகிறார்கள். தொழில்நுட்பங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்க நமது இராணுவ அதிகாரிகளை அனுப்புவதாகவும் கூறுகிறார்கள். உண்மையில் இது நடந்தால் அதனை நிறுத்துங்கள். தமிழின படுகொலையை தடுத்து நிறுத்த ஐ.நா. சபை கொழும்பிலும், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியிலும் கிளைகளை தொடங்கவேண்டும்.

தனது ஒட்டுமொத்த பொதுவாழ்க்கையை பணயம் வைத்து இலங்கை தமிழர்களை பாதுகாக்க போராடும் தமிழக முதலமைச்சரின் கரத்தை இந்த கலைஞர்கள் குடும்பம் வலுப்படுத்தவேண்டும் என்றார் அவர்.

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் இராம.நாராயணன் பேசியதாவது:

இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்று சிறிலங்கா இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டினால் பாதிக்கப்படும் மீனவர்களை காப்பாற்றுவதற்காக அம்புலன்ஸ் வசதி கேட்டு பாம்பன் ஊராட்சி தலைவர் அனிபா மனு கொடுத்துள்ளார்.

அனைத்து சங்கங்களின் ஒப்புதலுடன் அதனை நிறைவேற்றுவோம். அகதிகளாக வந்தவர்களுக்கு 6 லட்சம் ரூபா செலவில் வேட்டி-சேலைகளை வழங்கினோம்.

தொடர்ந்து இதுபோலவே அவர்களுடன் இணைந்திருப்போம். அவர்களுக்கும் எங்களுக்கும் உள்ளது அண்ணன்-தம்பி உறவு. இது உணர்ச்சி உள்ளவர்களின் உரிமை காக்கும் போராட்டம். நல்லவன் போல் நடிக்கும் ராஜபக்சவின் நடவடிக்கைகளை பொறுக்கமாட்டோம், பொங்கி எழுவோம் என்றார் அவர்.

இயக்குநர் விஜய டி.ராஜேந்தர் பேசியதாவது:

இன உணர்வு என்ற ஆயுதத்தை கையில் எடுத்து தமிழர்களை அழிக்கும் ராஜபக்சவை நாம் வீழ்த்த வேண்டும். நான் சொல்வதற்காக இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் யாரும் வருத்தப்படக்கூடாது. இராமேஸ்வரத்துக்கு இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வரவேண்டும் என்று சொன்னார்கள். அதனால் நான் நடிகனாக வரவில்லை. ஒரு தமிழனாக வந்தேன்.

சிலர் வரவில்லை என்று எனக்கு ஒருபுறம் ஆதங்கம். மறுபுறம் ஆனந்தம். இது தமிழர் படை. சிலரின் கேள்விக்கு இதுதான் விடை. தமிழினமே இராமேஸ்வரம் கடல் அலையாய் எழும்பினால் தாங்காது உங்கள் பூமி. அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு சிலர் போகவில்லை என்று கூறினார்கள். ஆனால் அங்கு சென்று ஆதங்கப்பட்டு தலைமை எதிர்ப்பாளர் என்று முதலமைச்சர் சொல்லும் வகையில் நான் பேசினேன்.

சில நடிகர்கள் இங்கு வரவில்லை. பாதுகாப்பு இருக்காது என்று கூறுகிறார்கள். அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். உன் மக்களிடமே பாதுகாப்பு கேட்டால் நீ ஹீரோவா? இல்லை ஜீரோவா?

மராட்டியர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள், குஜராத்தியர் உள்பட யாரை அடித்தாலும் அந்த மாநில மக்கள் பொங்கி எழுகிறார்கள். ஆனால் தமிழர்களை அடித்தால் இங்குள்ளவர்கள் பேசாமல் இருக்கிறார்கள். மனித சங்கிலி போதாது. ஆட்சியை இழந்தாலும் பரவாயில்லை. உங்கள் காலத்தில் தமிழீழம் பிறக்க வேண்டும்.

இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவோம் என்று கூறியதும், பிரணாப் முகர்ஜி சிறிலங்கா செல்கிறார். நாங்கள் மீனுக்கு போடுவோம் வலை. உத்தரவு கொடுத்தால் எதிரிகளை செய்வோம் கொலை. தமிழன் தன்நிலை உணரவேண்டும் என்றார் அவர்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசியதாவது:

இலங்கையில் நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்கவும், நியாயம் கேட்கவும் நாம் இங்கு வந்துள்ளோம். மேலும் பாதிக்கப்படும் நம் தமிழ் மக்களுக்கு உணர்வுபூர்வமாக ஆறுதல் கூறவும் கூடி உள்ளோம்.

தமிழர்களான உங்களுக்கு காயம் ஏற்படுத்தும் அரசு நீடிக்காது. உங்கள் காயங்களை ஆற்றும் பணிகள் விரைவாக நடக்கிறது. எதிரிகளே உங்களுக்கு ஓர் எச்சரிக்கை தமிழர்களுக்கு தொடர்ந்து விபரீதம் நடந்தால் தமிழகம் இராமேஸ்வரத்தின் கரையை நிச்சயம் தாண்டும் என்றார் அவர்.

இயக்குநர் சேரன் பேசியதாவது:

ஈழத்தில் 30 வருடமாக தமிழர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இதனை நமது வீட்டில் நடக்கும் பிரச்சினையாக, சகோதரத்துடன் பார்த்திருந்தால் இந்த பிரச்சினை எப்போதோ முடிந்து இருக்கும். ஆனால் அப்படி யாரும் பார்க்கவில்லை.

ஒரு தீவில் 44 இந்தியர்களை தீவிரவாதிகள் பிடித்து வைத்துக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களை விடுவிக்க இந்திய அரசு இராணுவத்தையே அனுப்பி வைக்கிறது.

ஆனால் நமது பக்கத்தில் இருக்கும் இலங்கையில் நடக்கும் பிரச்சினையில் எந்தவித நடவடிக்கையையும் எடுக்க அரசு மறுக்கிறது. தமிழீழத்தை பற்றி இயக்குநர்களாகிய நாங்களோ, அரசியல்வாதிகளோ பேசுவதால் எந்த முடிவும் ஏற்பட்டு விடப்போவதில்லை. நம்முடைய குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். ஒவ்வொரு நடிகனும் தங்களது இரசிகர்கள் மன்றம் மூலம் ஈழத்தில் தமிழர்கள் படும் துன்பங்களை ஐ.நா. சபைக்கு தந்தியாக அனுப்ப வேண்டும் என்றார் அவர்.

இயக்குநர் சீமான் பேசியதாவது:

இந்த கூட்டத்தை இராமேஸ்வரத்தில் ஏன் நடத்துகிறோம் என்றால், இங்கிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலங்கைக்கு நாம் சென்றுவிடுவோம் என்பதை ராஜபக்சவுக்கு தெரியப்படுத்துவதற்காகத்தான். இங்குள்ள 6 கோடி தமிழர்களும் கடல்தாண்டி வருவார்கள். பர்மாவில் தமிழனை அடித்தார்கள். பம்பாயில் தமிழனை அடித்தார்கள். மலேசியாவில் தமிழனை அடித்தார்கள். கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் தமிழர்களை அடித்தார்கள். ஆனால் நம்மை அடித்தவர்களை திருப்பி அடித்த ஒரே இடம் தமிழீழ மண்தான். அதை எப்படி நாம் வன்முறை என்று சொல்ல முடியும்?

இந்தியாவில் தமிழர்களோ, கன்னடர்களோ பிரதமராகலாம் என அரசியல் சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் இலங்கையில் ஈழத்தமிழர் ஒருபோதும் அதிபர் ஆக முடியாது. ஏனெனில் ஈழத்தமிழர் அதிபராவதற்கு அந்த நாட்டு சட்டத்தில் இடம் இல்லை. உலகத்தில் உள்ள அனைத்து நாட்டிலும் தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இல்லை.

ஈழத்தமிழனை வேரோடு அழித்து விடலாம் என்று சிறிலங்கா அரசு நினைத்துக்கொண்டு இருக்கிறது. ஆனால் அது ஒருபோதும் அது நடக்காது.

தனி ஈழம் நமக்கு ஏற்கனவே கிடைத்து விட்டது. அங்கு போக்குவரத்து துறை, தொழில்துறை, மருத்துவத்துறை என அனைத்து துறையும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அங்கு எல்லை விரிவாக்கமும், அனைத்துலக அங்கீகாரம்தான் கிடைக்க வேண்டும். அனைத்துலக அங்கீகாரம் கிடைக்க உலகில் பரந்து விரிந்துள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். புரட்சி வெல்லும். தமிழீழம் வெல்லும் என்றார் அவர்.

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது:

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய தூக்கு தண்டனை கைதி சரப்ஜித்சிங்குக்காக நமது நாடாளுமன்றத்தில் பேசுகிறார்கள். ஆனால் தமிழக மீனவர்களை சிங்கள இராணுவம் கொன்று குவிப்பதை பற்றி இந்திய அரசு கேட்க மறுக்கிறது.

நமக்கு துரோகம் செய்பவர்கள் வெளியில் இல்லை. நம்முடன் இருந்து கொண்டே நமக்கு துரோகம் செய்து விட்டார்கள் என்றார் அவர்.

இயக்குநர் அமீர் பேசியதாவது:

இந்த மேடையில் ஒலிக்கும் குரல் சிறிலங்கா அதிபர் ராஜபக்சவுக்கு மரண ஓலமாக கேட்கட்டும். அங்குள்ள தமிழர்களுக்கு நிம்மதி அளிக்கட்டும். 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் தொடர்ந்து வெடிசத்தம் கேட்கிறது. அங்கிருந்து பல வெளிநாடுகளுக்கு தமிழர்கள் அகதிகளாக செல்கிறார்கள்.

இலங்கை தமிழர்களின் பிரச்சினை இந்துக்களின் பிரச்சினை, முஸ்லிம்களின் பிரச்சினை, கிறிஸ்தவர்களின் பிரச்சினை என்று பேதம் பிரித்து பார்க்காமல் அனைவரும் இதற்கு ஆதரவாக வரவேண்டும். நமது எதிரி நாடான பாகிஸ்தான் கூட நமது மீனவர்களை சுட்டுக்கொல்வது இல்லை. ஆனால் சிறிலங்கா இராணுவம் அங்கு வாழ்ந்த ஒரு லட்சம் தமிழர்களையும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களையும் கொன்று உள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் மத்திய அரசுக்கு அவர்கள் வேண்டும். ஆனால் தமிழர்கள் வேண்டாமா? நம்மிடம் குரல் கொடுத்து பேசும் தலைவர்களே இல்லை. வாருங்கள் என்றால் யாரும் வருவதும் இல்லை. ஒரு பிரச்சினை தொடர்பாக கூட்டப்படும் கூட்டத்தில்கூட சிலர் அழைத்தாலும் வருவதில்லை. ஒரு மாநில முதலமைச்சர் அழைத்தாலும் கூட அவர்கள் அதனை ஏற்பது இல்லை. எவ்வளவு காலம் இப்படி ஏமாற்ற முடியும்? அவர்களை திட்டி பிரயோசனம் இல்லை. எங்களை ஆளும் நீங்கள் அதனை சரி செய்யுங்கள். உங்களால்தான் கேட்க முடியும். இலங்கையை இந்தியாவுடன் சேர்ப்பதாக அரசு அறிவித்தால் உலகம் இந்த பிரச்சினையில் தலையிடும். அதன்பின் உரிய தீர்வு கிடைக்கும்.

நகைச்சுவை நடிகர் வடிவேலு கண்ணீர் மல்க உருக்கத்துடன் பேசியதாவது:

நமது கோபம் எல்லாம் நமது நடிகர்களை நோக்கி போய்விடுமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது. நமது கோபத்தை அவர்கள் மீது காட்ட வேண்டியதே இல்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழீழத்தினர் படும் துயரங்களை இன்டர்நெட் மூலம் வீடியோவில் பார்த்தேன். அதில் பெண்களின் மார்பகத்தை அறுத்து கொலை செய்கிறார்கள். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் எலும்புக்கூடுகளாக ஆக்கப்படுகிறார்கள். தயவு செய்து இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டுங்கள்.

கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் போய் வேறு மாநிலத்தவர்கள் ஆட்சி செய்ய முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் அவர்கள் வந்து ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். வீட்டுக்குள் வேறு மொழியை பேசும் அவர்கள் இந்த தமிழனின் வீட்டு மேலேயே கல்லைக்கொண்டு அடிக்கிறார்கள். அந்த விடயம் வேறு. ஈழத்தில் மடிந்துள்ள தமிழர்கள் சாகவில்லை. விதைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் புழுவாகி, பூச்சியாகி, புலியாக உருவாகுவார்கள் என்றார் அவர்.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியதாவது:

உண்மையான உணர்வோடு புறப்பட்டு வந்துள்ளோம். உடன்பிறப்பு தாக்கப்பட்டால் அவனை காப்பாற்ற துடிப்பது நமது இரத்தத்தோடு கலந்தது. அதை தடுக்க யாராலும் முடியாது. இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது. ஒன்று இலங்கை தமிழர்கள் விடுதலை பெற வேண்டும். இல்லையேல் அதற்காக நாம் சாக வேண்டும் என்றார் அவர்.

நகைச்சுவை நடிகர் ரமேஷ் கண்ணா பேசியதாவது:

தமிழீழம் வேண்டும் என்று நம் தமிழர்கள் போராடுகின்றனர். விரைவில் சிங்களர்கள் தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கேட்கும் நிலை ஏற்படும் என்றார் அவர்.

நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது:

தமிழனின் இரத்தத்தை குடிக்கவா புத்த மதம் சொல்லிக் கொடுத்துள்ளது. இராமாயணம் உண்மையாக இருந்தால் இலங்கையை ஆண்டவன் இராவணன் என்பதற்கு அதைவிட வேறு சான்று தேவையில்லை.

இந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் இலங்கையில் நடக்கும் இனபடுகொலையை தட்டிக் கேட்க வேண்டும். போரை நிறுத்தாவிட்டால் இலங்கையை இந்தியாவோடு இணைக்க வேண்டும் என்றார் அவர்.

நகைச்சுவை நடிகர் கருணாஸ் பேசியதாவது:

ஈழத் தமிழன் என்று என்னை சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். தமிழ் உணர்வு உள்ளவர்கள் ஒன்று கூடி இனப்பிரச்சினையை தட்டிக்கேட்க துணிந்துள்ளீர்கள். இத்துடன் இதை நிறுத்திக் கொள்ளாமல் இறுதி தீர்வு கிடைக்கும் வரை போராட வேண்டும் என்றார் அவர்.

இயக்குநர் பார்த்தீபன்:

கடலே இடம்பெயர்ந்து வந்தது போல் உள்ளது. அரசியல்வாதிகள் மக்களின் பிரச்னைகளை தீர்ப்பாக கூறி ஆட்சிக்கு வருவார்கள். ஆனால் சினிமா கலைஞர்கள் எந்த வாக்குறுதியும் அளிப்பதில்லை. இருந்தும் எங்களை அங்கீகரித்த, ஏற்றுக்கொண்ட தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறோம். நாங்கள் நடத்தும் போராட்டம் எதுவும் இதுவரை தோற்றதில்லை என்றார் அவர்.

அழுதபடி பிரார்த்தனை செய்த நடிகர் லிவிங்ஸ்டன்:

இலங்கையில் நடக்கும் இனபடுகொலையை இறைவா தடுத்து நிறுத்து என்று கண்ணீர் விட்டு அழுதவாறு சிறிது நேரம் பிரார்த்தனை செய்தார்.

நிகழ்வின் நிறைவில் இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது:

நாங்கள் ஏன் இராமேஸ்வரத்தில் வந்து போராட்டம் நடத்துகிறோம்? இது ஈழத்தமிழர்கள் அகதிகளாக வந்து கால்பதித்த இடம். கண்ணீர் விட்ட இடம். எனவேதான் இங்கு வந்தோம்.

சென்னையில் உட்கார்ந்து கொண்டு முதுகையா சொறிய முடியும். சாவு வீடு என்றால் நாம்தான் அந்த வீட்டுக்கு போக வேண்டும். அதைவிட்டு விட்டு, ‘பிணத்தை தூக்கிக்கொண்டு என் வீட்டுக்கு வா’ என்று கூறுவது சரியாக இருக்காது. உங்களுக்கு அக்கறை வந்து இருக்க வேண்டும். உங்களுக்கு மதிக்க தெரிந்து இருக்க வேண்டும்.

உங்களை இப்படி கெடுத்ததே நாங்கள்தானே? உங்களுக்கு ஒப்பனை செய்து நாங்கள் கெடுத்து விட்டோம். நல்ல வேளை, நடிகர்கள் வரவில்லை. அதனால் இந்த சபை தப்பித்தது. இங்கு வந்த வடிவேலு ஒரு நடிகராக வரவில்லை. தமிழீழ உணர்வோடு வந்தார்.

நமக்கு தமிழீழம் ஏற்கனவே வந்துவிட்டது. அதை நான் கண்கூடாக பார்த்துள்ளேன். ஈழத்தில் தமிழ் பலகைகள் மட்டுமே இருக்கும். ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை கூட இருக்காது. அங்கு நடு இரவில் ஒரு பெண் தங்க நகைகளை அணிந்து செல்ல முடியும். அங்கு மதுக்கடைகள் கிடையாது. நிர்வாகத்தை ஒழுக்கத்தோடு செய்து வருகிறார்கள் என்றார் அவர்.

Veteran film director Bharathirajaa, who led the protest while addressing the artists said while the entire world was set to listen to the voice of the cine artistes of South India, he fervently hoped that their voice would be heard in New Delhi.

Popular poet and lyricist Vairamuthu who addressed the gathering in Rameswaram, pointing at the direction of Mannaar, said Tamils in Sri Lanka were “indigenous people with all the rights to the island.” He referred to ancient Tamil literature which spoke of pre-historic and historic Tsunamis.

“On the 22nd of this month, you [India] are going to launch a rocket to the Moon located 3,85,000 km from the Earth. But, why can’t you care for Eezham Tamils who are just 16 km away,” Mr.Vyramuthu questioned the Indian establishment in New Delhi.

The protest demanded that the Sri Lankan military should be pressurised by New Delhi to halt their military offensives.

Arrangements were hurriedly made Saturday for staging the rally and the Tamil film industry personnel travelled to the pilgrim town of Rameswaram by a special train from Chennai.

Tamil Film Producer’s Council, Tamil Film Director’s Association, Film Employees Federation of South India and South India Film Artistes Association had backed the campaign.

The move is regarded as a significant step in the public awakening in Tamil Nadu, the most urbanised state with 66 million Tamils after 25 years when cinema industry in Tamil Nadu last converged in support of Eezham Tamils, after the Black July anti-Tamil pogrom in Sri Lanka.

Actor Mansoor Ali Khan referring to the reports of a possible visit by Indian Foreign Minister Pranab Mukherjee to Sri Lanka in the near future said that Mr. Mukherjee need not to travel to Sri Lanka to pass a stern warning to Rajapaksa regime and urged New Delhi to send a Tamil speaking envoy instead.

“All Tamils throughout the globe must unite for the creation of Tamil Eelam,” he said.

Director K.S. Ravikumar warned that if the war against Tamils is not brought to an end immediately, it would be the deciding factor of the next parliamentary elections.

Cine actor Livingston staged an emotional prayer service. Prominent personalities including Directors Balachandar, Seran , Parthibhan, Rama Nararayanan, K.S.Ravikumar, President of Tamil Film Producers Union, S.A.Chandrasekar, Amir, T.Rajenthar, President of All India Ilatchiya Diravida Munetra Kazhagam, actors Pandiyarajan, Livingston and presidents of various unions of Tamil Nadu film industry participated in the protest rally and spoke.

Tamil Nadu film actors and actresses will participate in a fasting protest to be held in Chennai on November 1st, the organisors said.

281 Responses to “கடைசி தமிழன் உயிருடன் இருக்கும் வரை இலங்கை தமிழர்களை அநாதையாக விடமாட்டோம்: கவியரசு வைரமுத்து சூளுரை”

More comments on this: [29] 28 27 26 25 24 23 22 21 20 19 … 1 »

  1. 281
    kalki:

    HAY CHEAP SON OF THE BITCH IYER “SWAMINATHA IYER”. YOU IRRITATING OTHERS.SHUT UP…GO AWAY.. YOU DESERVED FOR THE “FUCK OFF”

  2. 280
    kalki:

    HAY CHEAP SON OF THE BITCH IYER “SWAMINATHA IYER”. YOU IRRITATING OTHERS. YOU DESRRVE FOR THE “FUCK OFF”

  3. 279
    Anbu:

    Saminatha. you are such a wind up man. As a matter of fact you doesnt seem to be from Brahim Community…I think you should ask you mum to confirm this…

  4. 278
    sreeja:

    stop fighting

  5. 277
    were20s:

    will do something for tamil elam people

  6. 276
    aretyu:

    you are correct sss the person with swaminathan name wrote his comment and left this blog some one playing fool using his name and every body are fighting for his comment.now atleast people please stop fighting and do something usefull.

  7. 275
    muthamil:

    Thaliva swaminatha

    nan tamilan thanu othukiteal

    soap vyabaram ellam nannava iruku……

    Tamilan endru solli thalai nimirinthu nillum ooi….

    Tamil eelam atharitha swaminathar valzha…

  8. 274
    muthamil:

    mr yaro

    Think in this way if muralidaran wasnt sucessful, bythis time even his footprints wont be there in SLC….of all these years only one tamil guy surviving coz of his personal talent and his presence is inevitable to SLC. ITs a fact even u know. hE WON so many Matches so many times single handedly to SL.

    Just name another tamil guy in SL team.

    1:3 Tamils live in SL and out of SL (native tamils of SL)

    Hope now u understood who supress who…

    U will soon hear muralis retairment since
    now they found a young bud mendis
    and compared head to head …….now they dont need murali anymore will surly throw him away soon

    u will see it……..

    Even, there are so many examples how srilankan sinhala catholics and muslim cricketers were suffering to find a position in the team. Only sinhala buddist are allowed to enjoy…. If they give such a treatment to their own community ppl, how they treat others…

  9. 273
    yaro:

    Muralidaran holds the maximum of wickets in Cricket History. He is Tamil.

    More than that he plays for Srilanka.

    But people say Tamils are suppressed in Srilanka.

    It may be true, they are suppressed by LTTE.

  10. 272
    thee:

    hi all! what happend in srilanka . mR. piranab promised that in future srilanka air force will not make bombartment but what happend still they do samethink and they killed innocent ppl. thatswhy kalusari kothapaya rajapaksa said he will take action against LTTE, i think he belived whole tamil ppl as LTTE. they are (Rajapkas family) are cowardy ppl because when LTTE airforce reached kalaniya, they move to special protected bunkor, it is funny. but anyway our CM, MUkarji, sonia and Rowcy Rajapakas played well planed drama. i asked onethink from tamilnadu ppl please consider all these think and standup against our government

More comments on this: [29] 28 27 26 25 24 23 22 21 20 19 … 1 »

Leave a Reply


Add a photo to your comments! SIGN UP NOW!
Question:What is gravatar?
Answer :A gravatar is quite simply an photo that follows you by appearing beside your name when you comments.

You can use these HTML tags in your comments: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Copyright © 2008 techsatish |Trademarks|Terms Of Service | Privacy Policy | Liability Disclaimer | Contact Us