மூன்றே காட்சிகளில் ஒரு காதல் கதை
July 23rd, 2008 Posted in Uncategorizedமூன்றே காட்சிகளில் ஒரு காதல் கதை
காட்சி 1 :
“ஏன் தங்கினால் என்ன?” இது தான் இன்றைக்கு காலை ஜெனி என்னிடம் பேசிய கடைசி வார்த்தை.
< < எவ்வளவு திமிர் இருந்தால், ஜெனி வெளியூர் போறப்ப மோகன் கூட ஒரே ரூமில் தங்கி இருப்பாள், அதை வெட்கமே இல்லாமல் என்னிடமே சொல்றாள், சே, எவ்வளவு கேவலமானவளா இருப்பாள் >> என் மனதுக்குள் ஜெனியின் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவள் மேல் இது நாள் வைத்திருந்த அன்பெல்லாம் வெறுப்பின் வடிவில் எரிமலையாய் சீறியது. மதியம் ஒரு லோக்கல் ரவுடியிடம் சொல்லி கள்ளத்துப்பாக்கி வாங்கினேன். நேராக ஜெனி ரம்யாவுடன் தங்கி இருந்த அபார்ட்மெண்ட்ஸை நோக்கி என் காரை ஓட்டினேன்.
காட்சி 2 :
“சாரி, ஜெனி, நான் தான் அவசரப்பட்டுட்டேன், மன்னிச்சுக்கோ”
“இல்லை கார்த்தி, ஐ சுட் நாட் ஹாவ் டன் தட், நான் அப்படி தங்கி இருக்கக்கூடாது, பட் மோகன் பர்பெக்ட் ஜெண்டில்மேன் தெரியுமா?”
“சாரி, நான் மோகனையும் தப்பா நினைச்சுட்டேன், எனி வே இப்போவாது நாம புரிஞ்சுக்கிட்டோமே!!”
“ஆமாண்டா கார்த்தி, நீ இப்படி பண்ணலேன்னா, நாம எப்போவுமே சேர்ந்து இருக்க முடியாது, மார்னிங் நீ பேசுன பேச்சுக்கு உன் முகத்திலேயே முழிக்கக் கூடாதுன்னு இருந்தேன்”
இருவரும் கைக்கோர்த்துக் கொண்டு நடந்தோம். மோகன் பரபரப்போடு படிகளில் ஏறி வந்து கொண்டிருந்தார்.
காட்சி 3:
படிகளில் மோகனைப் பார்த்த ரம்யா அழுதபடியே அவனிடம் ஓடி வந்தாள்.
“எல்லாம் கண்ணிமைக்கிற நேரத்துக்குள் நடந்துடுச்சு மோகன், கார்த்தி வந்தான், ரிவால்வரை எடுத்து ஜெனியை சுட்டுட்டு , தன்னையும் சுட்டுக்கிட்டான்”
ரத்த வெள்ளத்தில் எங்களது உருவங்களை பத்திரிக்கைகாரர்கள் போட்டோ பிளாஷ் தெரிக்க எடுத்துக் கொண்டிருக்க மெதுவாக வான் மேகங்களைத் தாண்டி வானில் நானும் ஜெனியும் பறக்கலானோம்.








Nalla vellai..mela poi sandai podamal irundangale…
But very true..People realize truth after causing all catastrophe (Inda dialogue a tamil la sonna romba over a irukum..adan English la sonnen..Tappa neenaichu nakkal start ahi vida pogudhu
dear tecsatish y dont you upload maanaada mayilaada?? pls try 2 upload. thanks
superb,thanx
adappaavi………… awesome story man…