பேய் வீடு
July 23rd, 2008 Posted in Uncategorizedபேய் வீடு
” இந்த பேய் வீட்டை வாங்குற நீங்க பெரிய தைரியசாலிதான் சார், இருந்தும் உங்களுக்கு லாபம் தான், இந்த ஏரியாவில 50 லட்சம் விலை போற கிரவுண்ட் உங்களுக்கு வீட்டோட 15க்கு வந்துடுச்சு, ” என தன் கமிஷன் தொகை குறைந்துவிட்டதை தலையை சொறிந்தபடி சுட்டிக்காட்டிய வீட்டு புரோக்கருக்கு 5000 ரூபாய் எக்ஸ்ட்ராவாகக் கொடுத்துவிட்டு , நான் வாங்கிய வீட்டிற்கு அடுத்த வீட்டைத் தட்டினேன். கதவைத் திறந்த நடுத்தர வயது ஆசாமியிடம் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன்.
“கேள்விப்பட்டேன் சார், நீங்க அந்த வீட்டை வாங்கிட்டிங்கன்னு, கிட்டத்தட்ட 4 வருஷமா பூட்டிக்கிடக்கு, அந்த பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்ட பின்ன குடி வந்தவங்களும் தினமும் நைட் 11 மணிக்கு மேல புல்லாங்குழல் சத்தம் வீட்டில கேக்குதுன்னு பயந்து காலி பண்ணிட்டு போயிட்டாங்க, “
“ம்ம்ம்” அவர் சொன்னதற்கு தலையாட்டினேன்.
“உங்களுக்கு பேய் பிசாசு மேல எல்லாம் நம்பிக்கை உண்டா?”
“இல்லை சார்
“ மனசு தான் பேய், எதுக்கும் நீங்க ஃபேமிலியோட குடிவர முன்னாடி ஒரு பூஜை பண்ணிடுங்க, பேய் வீடுங்கிற நெருடல் உள்ளுக்குள் இருந்தாலும் உங்களுக்கு போயிடும்… நீங்க குடும்பஸ்தரா?, ”
“இல்லை சார், எனக்கு இன்னும் கல்யாணமாகல” அவர் வீட்டில் கொடுத்த காபியை நாசுக்காக மறுத்துவிட்டு நான் புதிதாய் வாங்கிய வீட்டிற்கு ஒரு சில தட்டுமுட்டு சாமான்களுடன் வேலையாட்கள் சுத்தம் செய்து முடித்தவுடன் உள்ளே நுழைந்தேன்.
“சார், இந்த புல்லாங்குழல் கொல்லப் பக்கம் கிடந்தது” என்று சுத்தம் செய்ய வந்திருந்த ஆட்களில் ஒருவன் என்னிடம் கொண்டு வந்து கொடுத்தான்.
அதை சிரித்துக் கொண்டே வாங்கி அலமாரியில் வைத்து, வேலையாட்களை அனுப்பிவிட்டு கட்டிலில் கண்ணயர்ந்தேன். மனது நிறைந்திருந்தது . ஆம் இது என் கல்லூரிக் காதலி ஜெனி வாழ்ந்த வீடு இது… ம்ஹூம் … இன்னும் வாழ்கிறாள் இங்குதான்.. எனக்காக… மற்றவர்களுக்கு அவள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். எனக்கு அவள் இன்னும் ஜீவனுள்ள அதே பழைய ஜெனிதான்… கல்லூரியில் அவள் வழக்கமாக வாசிக்கும் புல்லாங்குழல் இசை மெலிதாக என் காதுகளில் ஒலிக்க ஆரம்பித்தது.








romba super nu solla mudiyaadhu.. ok..