பாஸ்வேர்டு - ஒரு நிமிடக்கதை
July 23rd, 2008 Posted in Uncategorizedபாஸ்வேர்டு - ஒரு நிமிடக்கதை
அலுவலக வேலைகளை முடித்து விட்டு வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்த ரம்யா, கணவனின் அழைப்பு வர, கைத்தொலைபேசி எடுத்து
“ஹலோ, கார்த்தி சொல்லுங்க”
“ரம்யா, ஒரு ஹெல்ப் பண்றீயா!!! என்னோட ஜிமெயில் ஐடி ஓபன் பண்ணி அந்த,யுஎஸ் கன்சல்டன்சி மெயிலை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வந்துடுறியா, நான் ஆபிஸ்ல எடுக்க மறந்துட்டேன், ”
“சரி, கார்த்தி, பாஸ்வேர்ட்?”
“jeni22091980″
“சரி, நான் எடுத்துட்டு வந்துடுறேன்” அழைப்பைத் துண்டித்த பிறகு அந்த பாஸ்வேர்டு அவளை நெருடியது… பிரிண்ட் அவுட் எடுத்த பிறகு அவனது மெயிலை லாக் அவுட் செய்தாள்.
“ஜெனி, கார்த்தியின் கல்லூரித் தோழியல்லவா!!! .. ம்ம்ம் இருக்கலாம்..
எதுவாக இருப்பினும் இதைப் பற்றி கார்த்தியிடம் கேட்க கூடாது” என்று முடிவு செய்துவிட்டு, தனது மின்னஞ்சலை திறந்து “mohan143″ என்பதை “karthiramya” என மாற்றிவிட்டு வீட்டிற்கு கிளம்பினாள்.








Ennai Kadithuvidu . ( Bite me).
haha.. funny and nice