you love it!

நாணயம் - ஒரு நிமிடக்கதை

July 23rd, 2008 Posted in Uncategorized

நாணயம் - ஒரு நிமிடக்கதை

“கார்த்தி சார் ” யாரோக்கூப்பிட திரும்பிப் பார்த்தேன்.

“சார் எவ்வளவு நாள் ஆச்சு, எப்படி இருக்கீங்க” நான் முன்பு வேலை பார்த்த அலுவலகத்தின் கடைநிலை ஊழியர் முத்து நின்று கொண்டிருந்தார்.

“நல்லா இருக்கேன் முத்து”

“சார், உங்க கிட்ட கடைசியா வாங்கின 500 ரூபாய் தரவேயில்லல, நீங்க ரிசைன் பண்ண அந்த ஒரு மாசம் லீவ்ல இருந்தேன்” என்று சொல்லிவிட்டு பாக்கெட்டிலிருந்து 500 யை எடுத்துக் கொடுத்தார்.

‘இல்ல வேண்டாம்” என்று மறுத்தும் வலுக்கட்டாயமாக என் கையில் திணித்துவிட்டு சென்றார்.

அந்தக் கடைசி மாதம் என் வீட்டை சுத்தம் செய்து , துணித்து துவைத்துக் கொடுத்த பாட்டிக்கு அந்த மாதப் பணம் 200 ரூபாய் கொடுக்காமலேயே மறந்து வீட்டைக்காலி செய்து வந்தது நினனவுக்கு வந்தது. அந்த வேலைக்காரி பாட்டிக்கு அந்த பணத்தை கொடுத்துவிட வளசரவாக்கம் நோக்கி வண்டியை செலுத்தினேன்.

Leave a Reply


Add a photo to your comments! SIGN UP NOW!
Question:What is gravatar?
Answer :A gravatar is quite simply an photo that follows you by appearing beside your name when you comments.

You can use these HTML tags in your comments: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Copyright © 2008 techsatish |Trademarks|Terms Of Service | Privacy Policy | Liability Disclaimer | Contact Us