you love it!

இவன் அவனில்லை - ஒரு நிமிடக்கதை

July 23rd, 2008 Posted in Uncategorized

இவன் அவனில்லை - ஒரு நிமிடக்கதை

ஜெனிக்கு இரண்டு நாட்களாக குழப்பமாய் இருந்தது. அலுவலகத்தில் தன்னிடம் சகஜமாகப் பேசும் கார்த்தி, காலையில் கடற்கரையில் தூரத்தில் இருந்து வைத்தக் கண் வாங்காமல் பார்த்துவிட்டு ஒரு சின்னப் புன்னகைக் கூட செய்யாமல் போய்விட்டான்.இன்று மட்டுமல்ல அதற்கு முந்தைய நாள் கூட ராகத் பிளஸாவில் பார்த்தும் இதேபோல் போய்விட்டான்.

கார்த்தி அந்த அலுவலகத்திற்குப் புதிதாய் வந்து சேர்ந்திருந்தாலும், வந்த சில நாட்களிலேயே தனது கலகலப்பான குணாதியசத்தால் அனைவரையும் வெகுவாக கவர்ந்து விட்டான். போன வாரம் மோகன் சாரின் வழியனுப்பு விழாவை அருமையாக ஒருங்கிணைத்து அலுவலக மேலிடத்திலும் நல்ல பெயர் வாங்கிக் கொண்டான்.

எப்படி இவனால் இரண்டு விதமாக நடந்து கொள்ள முடிகிறது ,ஒரு வேளை பொதுவிடம் என்பதால் தெரிந்தவள் என்றுக் காட்டிக்கொள்ளாமல் போய்விட்டானோ!!! என்ற நினைப்பைக் கலைக்கும் வகையில் அங்கே கார்த்தி வர,

“ஹல்லோ கார்த்தி,”

“ஜெனி, உங்க கிட்ட ஒரு விசயம் பேசனும் ..” என அவளைக்கூட்டிக் கொண்டு அலுவலகத் தோட்டத்திற்கு வந்து அவனே பேச ஆரம்பித்தான்.

“ஜெனி, எனக்கு ரொம்ப தெரிஞ்ச பையன் உங்களை நேசிக்கிறானாம்… கிட்டத்தட்ட அவனை 27 வருஷமா தெரியும், “

“…..”

“இன்னும் சொல்லப்போனால் நாங்க பிறக்கிறதுக்கு முன்னமே எங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் தெரியும்…”

ஜெனி மேலும் குழப்பமானாள்.

“நேத்து மோகன் சார் பங்சன் போட்டொக்களை அவன்கிட்ட காட்டினப்போ , அதுல உங்களைப் பார்த்துட்டு தன் விருப்பத்தை சொன்னான், அவன் என்னை மாதிரி இல்லை, நேர் ஆப்போசிட் ..ரொம்ப ரிசர்வ்ட், இங்க கூட்டிட்டு வந்து இருக்கேன் அங்கே பாருங்க, உட்கார்ந்திருக்கான் ”

அங்கே அலுவலக வரவேற்பறையில் அச்சு அசலாய் கார்த்தியை உரித்து வைத்தது போல அவனோட இரட்டை சகோதரன் உட்கார்ந்திருந்தான்.

One Response to “இவன் அவனில்லை - ஒரு நிமிடக்கதை”

  1. 1
    vimal:

    awwwww venam aluthuruven

Leave a Reply


Add a photo to your comments! SIGN UP NOW!
Question:What is gravatar?
Answer :A gravatar is quite simply an photo that follows you by appearing beside your name when you comments.

You can use these HTML tags in your comments: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Copyright © 2008 techsatish |Trademarks|Terms Of Service | Privacy Policy | Liability Disclaimer | Contact Us