Thai Piranthal Vazhi Pirakkum Thangamae Thai Piranthal Vazhi Pirakkum Tamil Movie Song(LYRICS)
January 6th, 2008 Posted in Uncategorized
Music: K V Mahadevan
Lyric: MARUDHAKASI
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்க சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
ஆடியிலே வெதை வெதைசோம் தங்கமே தங்கம்
ஐப்பசியில் களை எடுத்தோம் தங்கமே தங்கம்
கார்த்திகையில் கதிராச்சி தங்கமே தங்கம்
கார்த்திகையில் கதிராச்சி தங்கமே தங்கம்
கழனியெல்லாம் பொன்னாச்சி தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்க சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
கன்னியரின் மனசு போலே தங்கமே தங்கம்
கல்யாணம் ஆகுமடி தங்கமே தங்கம் ஆமா !
கன்னியரின் மனசு போலே தங்கமே தங்கம்
கல்யாணம் ஆகுமடி தங்கமே தங்கம்
வண்ணமணி கைகளிலே தங்கமே தங்கம் ஆகா !
வளையல்களும் குலுங்குமடி தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்க சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
முத்துசம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம்
முற்றத்திலே சோறு பொங்கி தங்கமே தங்கம்
குத்து விளக்கேற்றி வச்சி தங்கமே தங்கம் ஆமா
குத்து விளக்கேற்றி வச்சி தங்கமே தங்கம்
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் ….







