RECENT VIDEOS

Vaani Rani Promo
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

SUN TV KANNAMOCHI EPISODE - 12 16/04/2014

PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

ஜய வருட ராசி பலன்கள் - ரிஷபம்மனதில் பட்டதை பளிச்சென்று பேசும் நீங்கள், மற்றவர்களின் தவறுகளை முகத்துக்கு நேரே சுட்டிக்காட்டுவீர்கள். உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் குரு பகவான் வலுவாக அமர்ந்திருக்கும்போது இந்த ஜய வருடம் பிறப்பதால் பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் அடுத்தடுத்து நல்லது நடக்கும். கல்வியாளர்கள், அறிஞர்களின் ஆதரவு கிட்டும். இந்தப் புத்தாண்டு உங்களின் 5ம் வீட்டில் பிறப்பதால் அடிப்படை வசதிகள் உயரும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். வரன் தேடித்தேடி அலுத்துப்போன உங்களின் மகளுக்கு இந்த ஆண்டு திருமணமும் சீரும் சிறப்புமாக முடியும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் யாவும் சாதகமாக முடியும். உங்களை மறந்துபோன தூரத்து உறவினர்கள் தேடி வந்து சொந்தம் கொண்டாடுவார்கள். சொந்த ஊரிலுள்ள பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு.

ஜூன் 12ந் தேதி வரை உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பதால் நினைத்த காரியங்கள் சுலபமாக முடியும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிட்டும். புது வாகனம் வாங்குவீர்கள். ஜூன் 13ந் தேதி முதல் வருடம் முடியும் வரை குரு 3ம் வீட்டில் அமர்வதால் புதிய முயற்சிகள், திட்டங்கள் தாமதமாகி முடியும். ஒரே வேலையை இரண்டு, மூன்று முறை முயன்று போராடி முடிக்க வேண்டியது வரும். அவ்வப்போது சோர்வடைவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். இளைய சகோதர வகையில் சங்கடங்கள் வரும். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துபோகும். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம்.

ஜூன் 20ந் தேதி வரை ராகுபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் தொடர்வதால் உங்களின் சின்னச் சின்ன கனவுகள் நனவாகும். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்கள், உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். வங்கி லோன் கிடைக்கும். ஆனால், கேது 12ல் மறைந்து நிற்பதால் திட்டமிடாத பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் சுயநலவாதிகளை கண்டறிவீர்கள்.

சில நாட்கள் தூக்கம் குறையும். ஜூன் 21ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 5ல் ராகு அமர்வதால் பிள்ளைகளின் பிடிவாத குணம் அதிகமாகும். மகனின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கேது 21ந் தேதி முதல் லாப வீட்டில் நுழைவதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் திடீர் முன்னேற்றம் உண்டாகும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கோயில் விசேஷங்கள், சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

ஆவணி, தை, மாசி, பங்குனி மாதங்களில் திடீர் பணவரவு, வீடு, வாகனம் வாங்கும் யோகம், புதியவரின் நட்பெல்லாம் உண்டாகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். ஐப்பசி மாதம் உங்கள் ராசிநாதனான சுக்கிரனும், சுகாதிபதியான சூரியனும் வலுவிழந்து காணப்படுவதால் தொண்டைப் புகைச்சல், உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி, முன்கோபம், குடும்பத்தில் சலசலப்பு, வாகனப் பழுது வந்து செல்லும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். பெற்றோரின் ஆரோக்யம் பாதிக்கும். அவர்களுடன் மனக்கசப்பு வந்து விலகும்.

டிசம்பர் 15 வரை உங்களின் யோகாதிபதியான சனி பகவான் 6ம் வீட்டில் நிற்பதால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். தள்ளிப்போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதிய பதவிக்கு தேர்ந்தெடுக் கப்படுவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். சிலர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள்.

டிசம்பர் 16ந் தேதி முதல் சனி 7ல் அமர்ந்து கண்டகச் சனியாக உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால் எதிலும் ஆர்வமின்மை, தாழ்வுமனப்பான்மை, சோர்வு, சலிப்பு வந்து நீங்கும். ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டியது வரும். கணவன்-மனைவிக்குள் யார் ஜெயிப்பது, யார் தோற்பது என்ற போட்டிகளெல்லாம் வேண்டாம். வீண் சந்தேகத்தாலும் சண்டை, சச்சரவுகள் வரக்கூடும். மனைவிக்கு சிறுசிறு விபத்துகள், மருத்துவச் செலவுகள் வந்துபோகும். யாருக்காகவும் யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். மனைவி வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரம் சூடுபிடிக்கும்.

ஆனி, ஆடி மாதங்களில் பற்று வரவு உயரும். மக்களின் ரசனையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப புதிய சரக்குகளை கொள்முதல் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். கடையை முக்கிய சாலைக்கு மாற்றி விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தரக்கூடிய பங்குதாரரும் அறிமுகமாவார். துரித உணவகம், மர வகைகள், வாகன உதிரி பாகங்கள், அழகு சாதனப் பொருட்களால் லாபமடைவீர்கள். பழைய பங்குதாரருடன் சிறு சிறு பிரச்னைகள் வந்து நீங்கும்.

உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். இதுவரை உங்களுக்கும் உங்கள் மேலதிகாரிக்கும் இருந்த தவறான புரிதல் விலகும். மூன்றாவது நபர் தலையீட்டால் இதுவரை இருந்த மெல்லிய பகையெல்லாம் அகலும். உங்களின் நிர்வாகத் திறன் கூடும். சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். ஜூன் 13ந் தேதி முதல் குரு 3ல் மறைவதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள்.

பல முக்கிய வேலைகளை மேலதிகாரி உங்களை நம்பி ஒப்படைப்பார். பரவாயில்லை என்று ஏற்றுக்கொண்டு எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யுங்கள். உங்களின் உத்தியோக ஸ்தானாதிபதியான சனிபகவான் டிசம்பர் 16 முதல் 7ல் அமர்வதால் அவ்வப்போது இடமாற்றம் வருமோ என்ற ஒரு அச்சம் இருக்கும். அப்படி வந்தாலும் கூட நன்மையில்தான் முடியும். மேலும், உங்களுக்கு வேண்டாதவர்கள் பழைய விஷயங்களை கிளறி உங்கள் மீது வழக்கு தொடர்வார்கள். ஒன்றும் பயப்படாதீர்கள். அரசு உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வெல்லாம் கிடைத்து விடும்.

கலைத்துறையினரே! சின்னச் சின்ன வாய்ப்புகளை கடந்து இப்போது பெரிய வாய்ப்புகளும் வரும். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள்.
மாணவ-மாணவிகளே! சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். சின்னச் சின்ன தவறுகளையும் திருத்திக் கொள்வீர்கள். ஆசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.

கன்னிப்பெண்களே! நேர்முகத் தேர்வில் வெற்றிப்பெற்று புது வேலையில் சேருவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். அவ்வப்போது அலர்ஜி, இன்பெக்ஷன் வரக்கூடும். பெற்றோர் ஆதரிப்பார்கள்.
இந்த ஜய வருடம் உங்கள் திறமையை சோதிப்பதாக இருந்தாலும், கடின உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம் : கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருவிடைமருதூர் தலத்தில் அருள்பாலிக்கும் மகாலிங்கேஸ்வரரை தரிசியுங்கள். தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு உதவுங்கள்.

மோடி சந்திப்பை பெருமையுடன் எதிர்நோக்குகிறாராம் விஜய்பாஜக-வின் பிரதம வேட்பாளர் மோடியை இன்றிரவு கோவையில் சந்திக்கிறார் விஜய். இதுபற்றி ட்விட்டரில் எழுதியுள்ள அவர், இந்த சந்திப்பில் எந்த அரசியலும் இல்லை, அவருடனான சந்திப்பை பெருமையுடன் எதிர்நோக்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

நாலு பெரிய மனுஷனை தெ‌ரிஞ்சிருந்தால் பிழைச்சுக்கலாம் என்று சொல்வார்களில்லையா. அந்த தத்துவத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார் மோடி. தமிழகத்தைப் பொறுத்தவரை பெரிய மனிதர்கள் என்றால் சினிமா நட்சத்திரங்கள். சிறியவர்கள் என்றால் அந்த நட்சத்திரங்களின் ரசிகர்கள்.

ரஜினியை அவரது வீட்டில் சந்தித்த மோடி இன்று இரவு கோவையில் நடிகர் விஜய்யை சந்திக்கிறார். விஜய் அரசியல் தலைவர்களை தேடிச் சென்று சந்திப்பதும் பிறகு இந்த சந்திப்பிற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்று கூறுவதும் முதல்முறை அல்ல.

இதற்கு முன் ராகுல்காந்தியை தேடிச் சென்று சந்தித்தார். காவலன் பிரச்சனை காரணமாக திமுக-வுக்கு போட்டியாக ஜெயலலிதாவை சென்று சந்தித்தார். தலைவா பிரச்சனைக்குப் பிறகு ஜெயலலிதாவையும் அரசியலுக்கு அப்பாற்பட்டு சந்திக்க முடியாமல் ஆகிவிட்டது. இருக்கிற ஒரே நபர் மோடி.

விஜய் மோடியுடனான சந்திப்பை பெருமையுடன் எதிர்நோக்க காரணம் இருக்கதான் செய்கிறது.

விஜய் வில்லன் சுதீப்...? சிம்புதேவன் பட சீக்ரெட்ஸ்கத்தி படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அவரின் மேனேஜர் பி.டி.செல்வகுமார் தயாரிக்கும் இந்தப் படம் குறித்து உறுதி செய்யப்படாத பல தகவல்கள்.

காமெடிக்கு முக்கியத்துவம் தந்து உருவாகவிருக்கும் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் சுதீப்பை அணுகியுள்ளார் சிம்புதேவன். அவரும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் விஜய் ஜோ‌டியாக ஸ்ருதி நடிக்க அதிக வாய்ப்புள்ளது. ஸ்ரீதேவியை நடிக்க வைக்கவும் விரும்புகிறார் சிம்புதேவன்.

படத்துக்கு இசை அனேகமாக ஏ.ஆர்.ரஹ்மானாக இருக்கலாம். ஏற்கனவே உதயா, அழகிய தமிழ்மகன் படங்களுக்கு ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கத்தி முடிந்த பிறகு செப்டம்பருக்கு மேல் சிம்புதேவன் படம் தொடங்குகிறது.

ஆழ்துளை கிணற்றுக்குள் மேலும் ஒரு குழந்தை விழுந்த பரிதாபம் - உயிருடன் மீட்க போராட்டம்கலசப்பாக்கம் அருகே மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1½ வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

தமிழகத்தில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுவது தொடர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குத்தாலப்பேரி கிராமத்தில் ஆசிரியர் கணேசன்-தமிழ்ச்செல்வி தம்பதியின் மகன் ஹர்சன் (வயது 3) என்ற சிறுவன் அங்குள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான்.

அந்த குழந்தையை மீட்புக்குழுவினர் 6 மணி நேர போராட்டத்துக்கு பின் உயிருடன் மீட்டு காப்பாற்றினர்.

இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 1½ வயது குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கிடாம்பாளையம் அருகே உள்ள பொன்னகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன். விவசாயியான இவர் தனது நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தார். 250 அடி வரை தோண்டப்பட்ட நிலையில் தண்ணீர் வரவில்லை. இதனால் அதை அப்படியே விட்டுவிட்டார்.

இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் துரைக்கண்ணு நேற்று ஆடுகளை மேய்க்க அங்கு சென்றார். அவருடன் அவரது மனைவி ஜெயலட்சுமியும் தனது மகன்கள் சூரியா (வயது 5), சுஜித் (1½) ஆகியோரை அழைத்துச்சென்றார். அவர்களுடன் குழந்தையின் பாட்டி கோவிந்தம்மாளும் துணைக்கு சென்றார்.

நேற்று மாலை பாட்டியிடம் குழந்தைகளை விளையாட விட்டுவிட்டு ஜெயலட்சுமி, அருகில் உள்ள இடத்தில் கீரை பறிப்பதற்காக சென்றிருந்தார். துரைக்கண்ணுவும் சற்று தொலைவில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது சூரியாவும், சுஜித்தும் தனியாக விளையாடிக்கொண்டு இருந்தனர். அருகே மண் குவியல் இருந்ததால் அங்கு அவர்கள் விளையாட சென்றனர். ஆனால் அந்த இடம் மூடப்படாத ஆழ்துளை கிணறு உள்ள இடம் என்பதை யாரும் கவனிக்கவில்லை.

இந்நிலையில் திடீரென சுஜித், அந்த ஆழ்துளை கிணற்றுக்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் விழுந்து விட்டான். உடனே அதனை பார்த்த அவனது அண்ணன் சூரியா, அலறியவாறு தனது தாயாரிடம் சென்று கூறினான். ஜெயலட்சுமியும் கதறியபடியே அங்கு வந்தார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து குழந்தை விழுந்த இடத்தை பார்த்தனர். அது குறித்து அவர்கள் காவல்துறையினருக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து காவல்துறையினரும், தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து வந்தனர். ஆழ்துளை கிணற்றுக்குள் 40 அடி ஆழத்தில் சுஜித் சிக்கிக்கொண்டதை பார்த்த அவர் கள் பக்கவாட்டில் சுரங்கம் அமைத்து அதன் வழியாக சென்று சுஜித்தை மீட்க முடிவு செய்தனர்.

இதனையடுத்து பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் தோண்டும் பணி மாலையில் தொடங்கியது. மேலும் குழிக்குள் சிக்கிக்கொண்ட குழந்தை சுவாசிப்பதற்காக ஆக்சிஜனும் செலுத்தப்பட்டது.

குழந்தையை உயிருடன் மீட்க வேண்டும் என்பதற்காக அரக்கோணத்தில் உள்ள பேரிடர் மீட்புக்குழுவுக்கு கலெக்டர் ஞானசேகரன் தகவல் அனுப்பினார். அதனையடுத்து அரக்கோணத்தில் இருந்தும் வீரர்கள் விரைந்தனர்.

குழந்தையை மீட்கும் பணியை பார்ப்பதற்காக அந்த பகுதி மக்கள் திரண்டு வந்தனர். நேரம் செல்லச்செல்ல பதற்றம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. மீட்பு பணியை துரிதப்படுத்த ஆட்சியர் ஞானசேகரன், மாவட்ட காவல்துறை எஸ்.பி. முத்தரசி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ.ஆகியோரும் அங்கு வந்தனர். அவர்கள் மீட்பு பணி நடைபெறுவதை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினர்.

குழந்தை மீட்கப்பட்டவுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்வதற்காக அங்கு ஆம்புலன்சும் கொண்டு வரப்பட்டது. இரவு நேரம் என்பதால் அதிக வெளிச்சம் உள்ள விளக்குகளும் பொருத்தப்பட்டு மீட்பு பணிகள் இரவிலும் தொடர்ந்து நடந்தது.

இரவு 8.30 மணி அளவில் 20 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டும் பணி முடிந்தது. மேலும் 20 அடி தோண்டிவிட்டால் சிறுவனை மீட்டு விடலாம் என்ற நம்பிக்கையுடன் சுரங்கம் தோண்டும் பணி மேலும் தொடர்ந்தது.

இதனிடையே சங்கரன்கோவில் அருகே சிறுவனை மீட்ட மதுரையை சேர்ந்த குழுவினர் ரோபோவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அதேபோல் கோவையிலிருந்தும் மற்றொரு மீட்புக்குழுவினர் வந்து கொண்டு இருப்பதாக கலெக்டர் தெரிவித்தார். இதன் மூலம் சிறுவனை எப்படியும் உயிருடன் மீட்க அதிகாரிகள் கடுமையான முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

போகாதே போகாதே என் கணவா...உண்மையாகவே இப்படி அழுது புரண்டும் கேட்காமல் பெட்டி படுக்கையோடு சாண்டல்வுட் காமெடியாரின் படத்தில் ஐக்கியமானாராம் சோலார் ஸ்டார். சாண்டல்வுட்டின் காமெடி என்றால் அடுத்தவரை நக்கலும் நையாண்டியும் செய்வதுதான். அதற்கு பார்ட்னர் ஒருவர் இல்லாமல் நடக்காது.

லட்டு படத்தில் லட்டு மாதிரி சிக்கினார் பவர் ஸ்டார். வார்த்தையாலே அவரை கொத்துக்கறியாக்கினார் சான்டல். பவர் இப்போது சிறைப்பறவை என்பதாலும், இமேஜ் பெருமளவு டேமேஜ் என்பதாலும் அவருக்குப் பதில் சோலாரை செலக்ட் செய்தாராம்.

வாயில ஜாங்கிரி வச்சுகிட்டு போஸ் தர்ற அந்தாளை எங்கிருந்தாலும் தூக்கிட்டு வாங்க என இவர் உத்தரவு பிறப்பிக்க, அதற்கு எந்த அவசியமும் இல்லாமல் மனைவியின் பேச்சையும் கேளாமல் சா‌ண்டல் ஹீரோவாக நடிக்கும் படத்தில் காமெடி ஊறுகாயாகியிருக்கிறார்.

சும்மாவே அவரை கலாய்ப்பாங்க. சா‌ண்டல்வுட் அவரை என்னப் பண்ணி வச்சிருக்கிறாரோ என்று ஆழ்ந்த கவலையுடன் இருக்கிறார் சோலாரின் திருமதி தமிழ்.

நடுக்கடலில் மூழ்கிய கப்பல்: 300 பேரை காணவில்லை!


சுமார் 477 பயணிகளுடன் சென்ற தென் கொரிய கப்பலொன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானதாகவும், 300க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடுக்கடலில் மூழ்கிய இந்த கப்பலில் பயணம் செய்தவர்களின் சரியான எண்ணிக்கை தெளிவுப்படுத்தபடாததால் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்திற்கான காரணம் இன்னும் சரிவர தெரியாத நிலையில், இக்கப்பலில், பயணம் செய்தவர்கள், கப்பலில் ஒரு பெரிய சத்தம் கேட்டதாகவும் அதன் பின் கப்பல் மெதுவாக மூழ்க ஆரம்பித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

சுமார் 477 பயணிகளுடன் சென்ற அக்கப்பல் அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் இருந்து அபாய சமிக்ஞை அனுப்பியது என்று அந்நாட்டு கடலோர காவல் படையினர் தரப்பு தகவல்கள் தெரிவித்தன. இதனையடுத்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தற்போது, கப்பல் கவிழ்ந்ததில் 3 பேர் பலியாகியுள்ளனர் என்றும் 12 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் சுமார் 300 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பலில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் ஆவர். அவர்கள் பள்ளியில் இருந்து சுற்றுலாவிற்காக ஜெஜு தீவுக்கு சென்றதாக தெரிகிறது.

மீட்பு பணியில் 100க்கும் மேற்பட்ட சிறிய கப்பல்கள், 18 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 164 பேர் காப்பாற்றபட்டுள்ளதாகவும், ஆனால் இது குறித்து உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாவதால் சரியான நிலை குறித்து தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி கிரகத்தின் புதிய நிலா கண்டுபிடிப்புசனி கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் அக்கிரகதிற்கு அனுப்பப்பட்ட காசினி விண்கலம், சனி கிரகத்தின் புதிய நிலா என கருதப்படும் ஒரு பொருளின் புகைப்படத்தை அனுப்பியுள்ளது.

பூமிக்கு சந்திரனை போல, சனி கிரகத்திற்கு சுமார் 60 துணை கிரகங்கள் உள்ளன. இந்த நிலையில் தற்போது புதிதாக ஒரு துணை கிரகம் உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய காசினி விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி, எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் சனி கிரகத்தின் வளையங்களுக்கு இடையே மிகச்சிறிய துணை கிரகம் உள்ளது.

Peggy என அழைக்கப்படும் அந்த துணை கிரகம் 1200 கி.மீ. நீளமும், 10 கி.மீ அகலத்துடனும் காணப்படுகிறது. அதுபோன்ற ஒரு துணை கிரகத்தை சனி கிரகத்தில் இதற்கு முன்பு பார்த்ததில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மன்மோகன் சிங் அதிகாரம் மிக்க பிரதமர் - பிரியங்கா பதில்


ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மன்மோகன் சிங் மட்டுமே அதிகாரமிக்க பிரதமர் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்குடன் இணைந்து பணியாற்றிய பிரதமர் அலுவலக உதவியாளரும், ஊடகத்துறை ஆலோசகருமான சஞ்சய் பாரு ‘சந்தர்ப்பவசமாக வந்த பிரதமர்’ என்ற தலைப்பில் அண்மையில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.

அதில், தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2-வது பதவி காலத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தான் உண்மையான பிரதமராக திகழ்ந்தார். சோனியாவின் பக்க வாத்தியம்தான் மன்மோகன்சிங். சோனியாவின் சொல்படிதான் மன்மோகன்சிங்கால் ஆட்சி நடத்த முடிந்தது என்று பல்வேறு தகவல்களை தனது புத்தகத்தில் அவர் கூறியிருந்தார். பிரதமரின் செயல்பாடுகள் குறித்து அவரது உதவியாளர் ஒருவரே பகிரங்கமாக புத்தகம் வாயிலாக விமர்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இது முற்றிலும் தவறான தகவல், சஞ்சய் பாருவின் கற்பனை என்று காங்கிரஸ் தரப்பில் மறுக்கப்பட்டது. பிரதமர் அலுவலகமும் சஞ்சய் பாருவின் குற்றச்சாட்டுகளை மறுத்தது. எனினும் இது குறித்து சோனியாகாந்தி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் தனது சகோதரர் ராகுல் காந்திக்காக அமேதி தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் 42 வயது பிரியங்காவிடம் சஞ்சய் பாருவின் புத்தகம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு அவர் சுருக்கமாக பேட்டியளித்தார்.

அப்போது, தனது தாயார் சோனியா பிரதமர் போல செயல்பட்டார் என்பதை அவர் மறைமுகமாக மறுத்தார். இது குறித்து பிரியங்கா கூறுகையில் ‘மன்மோகன்சிங் மட்டுமே அதிகாரமிக்க பிரதமர்’ என்று தெரிவித்தார்.

சோனியா காந்தி நேற்று முன்தினம் தொலைக்காட்சியில் பேசுகையில், ‘நாட்டு மக்களை துண்டாட நினைப்பவர்களிடம் இருந்து இந்தியாவின் இதயத்தையும், ஆன்மாவையும் பாதுகாக்கவே தற்போதைய தேர்தல் நடக்கிறது. நாங்கள் ஒற்றுமையை விரும்புகிறோம். அவர்கள் பிரித்தாள நினைக்கிறார்கள். என்னை நம்புங்கள்’ என்று குறிப்பிட்டது குறித்து பிரியங்காவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த பிரியங்கா, ‘பாஜக என்னவேண்டும் என்றாலும் சொல்லட்டும். ஆனால் இந்தியாவின் இதயத்தை பாதுகாப்பதற்கான சண்டை தொடர்ந்து நடக்கிறது’ என்று கூறிய, அவர் மேற்கொண்டு அது குறித்து விரிவாக எதையும் கூறவில்லை.

இளையராஜா இசையில் பாடிய ஸ்ருதிஹாசன்இந்திப் படத்துக்காக இளையராஜா இசையில் ஒரு பாடல் பாடியுள்ளார் ஸ்ருதிஹாசன்.

இளையராஜா இசையில் தேவர்மகன் படத்துக்காக போற்றிப்பாடடி பெண்ணே பாடலை தனது மழலைக் குரலில் ஸ்ருதி ஏற்கனவே பாடியுள்ளார். அப்போது அவர் குழந்தை.

இந்தியில் பால்கி தனது 3-வது படத்தை இயக்கி வருகிறார். ஸ்ருதியின் தங்கை அக்ஷராஹாசன்தான் அப்படத்தில் நாயகி. தனுஷ் நாயகன். அமிதாப்பச்சன் முக்கிய வேடத்தில் வருகிறார். முதலிரு படங்கள் - சீனி கம், பா - போலவே இந்தப் படத்திலும் ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம், இசை இளையராஜா.

இந்தப் படத்துக்காக ஸ்ருதி ஒரு பாடலை இளையராஜா இசையில் பாடினார். திரையில் ஸ்ருதியின் குரலுக்கு வாயசைக்கப் போகிறவர் அவரது தங்கை அக்ஷராஹாசன்.

பால்கி தனது படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

பெட்ரோல் விலை 89 காசுகள் குறைந்தது; ரூபாய் மதிப்பு உயர்வு எதிரொலி!ரூபாய் மதிப்பு உயர்ந்து வருவதால், பெட்ரோல் விலை லிட்டருக்கு 89 காசுகள் குறைக்கப்பட்டது. ஆனால், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போதிருந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மாதந்தோறும் 1 மற்றும் 16 ஆம் தேதிகளில் பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

தற்போது, ரூபாய் மதிப்பு உயர்ந்து வருவதால், கடந்த 1 ஆம் தேதி பெட்ரோல் விலை 99 காசுகள் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக நேற்றும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. உள்ளூர் வரிகளைத் தவிர்த்து, பெட்ரோல் விலை 70 காசுகள் குறைக்கப்படுவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. இந்த விலை குறைப்பு, நேற்று நள்ளிரவு அமலுக்கு வந்தது. உள்ளூர் வரி குறைப்பையும் சேர்த்து, முக்கிய பெரு நகரங்களில் விலை குறைப்பில் சிறிதளவு வேறுபாடு காணப்பட்டது.

அதன்படி, சென்னையில் ரூ.75 ரூபாய் 49 காசுகளாக இருந்த பெட்ரோல் விலை, ரூ.74 ரூபாய் 60 காசுகளாக குறைந்தது. அதாவது, லிட்டருக்கு 89 காசுகள் குறைந்தது.

டெல்லியில், ரூ.72.26 ஆக இருந்த பெட்ரோல் விலை, 85 காசுகள் குறைந்து, ரூ.71.41 ஆனது. கொல்கத்தாவில், ரூ.80.13 ஆக இருந்த பெட்ரோல் விலை, 88 காசுகள் குறைந்து, ரூ.79.25 ஆனது. மும்பையில், ரூ.80.89 ஆக இருந்த பெட்ரோல் விலை, 89 காசுகள் குறைந்து, ரூ.80 ஆனது.

ஆனால், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டீசலுக்கான நஷ்டத்தை ஈடுகட்டும்வரை, மாதந்தோறும் 50 காசுகள் விலையை உயர்த்திக்கொள்ளுமாறு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அனுமதி அளிக்கப்பட்டது. அப்போதிருந்து, இதுவரை 14 தவணைகளாக டீசல் விலை ரூ.8.33 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், டீசல் இன்னமும் லிட்டருக்கு ரூ.5.49 நஷ்டத்தில் விற்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறி வருகின்றன.

தற்போது, தேர்தல் நேரம் என்பதாலும், ரூபாய் மதிப்பு உயர்ந்து வருவதாலும், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என்று கருதப்படுகிறது.

அவங்க ஒண்ணு சேர்ந்திட்டாங்க...தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணியான கௌதம் வாசுதேவ மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் இணைகிறார்கள். சந்தேகத்துடன் பேசப்பட்டு வந்த இந்த சந்தோஷ செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மின்னலே படத்தில் கௌதம் - ஹாரிஸ் இருவரும் சேர்ந்தே அறிமுகமானார்கள். அந்தப் படத்தின் பாடல்கள் ஹாரிஸுக்கு அழிக்க முடியாத முகவரியாக மாறியது. குறிப்பாக வசீகரா பாடல். இன்றும் அப்பாடல் தனித்துவம் இழக்காமல் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.

அதன் பிறகு கௌதமின் ஒவ்வொரு படத்தையும் ஹாரிஸின் இசை அலங்கரித்தது என்றால் வார்த்தைகளால் வண்ணம் பூசியவர் கவிஞர் தாமரை. நெஞ்சுக்குள் மாமழையாக பெய்த இந்தக் கூட்டணி சட்டென்று மாறிய வானிலையால் எதிர்பாராமல் உடைந்தது.

நெருங்கி நண்பரான கௌதம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் தனக்குப் பதில் ரஹ்மானை பயன்படுத்துவதை சொல்லவில்லை என ஹாரிஸுக்கு வருத்தம். இவ்வளவுதானா நமது நட்பு என்று நட்புக்கான வாசலை ஹாரிஸ் அடைக்க, கௌதமும் ரஹ்மான் இருக்கும் பலத்தில் அதனை கண்டு கொள்ளவில்லை. ஆனால் நட்புக்கும் உண்டோ அடைக்கும்தாழ்...?

ஹாரிஸுடன் மீண்டும் பணிபுரிய கௌதம் பலமுறை முயன்றார். தன்மீதே தவறு என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். கடைசியில் ஹாரிஸின் மனம் கனிந்தது. ஸ்ரீ சத்ய சாய் தயாரிப்பில் கௌதம் - அஜீத் இணையும் படத்துக்கு இசையமைக்க ஹாரிஸ் ஒத்துக் கொண்டார். பாடல்கள் எழுதுவது தாமரை என்றும் சொல்லப்படுகிறது.

இந்த முக்கூட்டணி மீண்டும் சரித்திரம் படைக்கட்டும்.

துரோகம் செய்தது யார்? நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? -ஜெ. சவால்!காவிரி நீர் பிரச்சனையில் துரோகம் செய்தது யார்? நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என்று கருணாநிதிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா சவால் விடுத்தார்.

அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா நேற்று, ஆரணி தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.

அதே தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலையை ஆதரித்து, வடதண்டலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டு 2013-ல் ஜூலை மாதம் முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை மின்வெட்டு இல்லாத சூழ்நிலை தமிழகத்தில் நிலவியது. இதனை, நான் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரின் போது பெருமையாக கூறினேன். இவ்வாறு நான் சொன்னவுடன், தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் ஒப்படைக்கப்படாத புதிய கூட்டு மின் திட்டங்கள் உட்பட மத்திய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் பெறப்பட்டு வந்த மின் உற்பத்தி சுமார் 2,500 மெகாவாட் அளவுக்கு சொல்லி வைத்தாற் போல் திடீர் என ஒரே சமயத்தில் குறைந்தது.

இதன் காரணமாக, மீண்டும் கடுமையான மின் பற்றாக்குறை ஏற்பட்டது. இது ஏதோ சதிச்செயல், வேண்டுமென்றே மின் உற்பத்தி நிலையங்களை பழுதடைய செய்து இருக்கிறார்கள் என்று நான் தெரிவித்தேன். அதுபற்றி பாரத பிரதமருக்கும் கடிதம் எழுதினேன். அதை ஏற்றுக்கொள்வதை போலவே பாரதப்பிரதமரும் இது யதேச்சையாக நடந்தது என்று தெரிவித்து கடிதம் எழுதினார்.

அப்போது, ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. பின்னர் இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டுவிட்டது. மின்வெட்டு இல்லாத சூழ்நிலை மீண்டும் நிலவியது.

அதன் பின்னர், மக்களவை பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நான் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ள சூழ்நிலையில், தேர்தலுக்கு சில நாட்களே உள்ள இந்த காலகட்டத்தில் தற்போது மீண்டும் இந்த மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் 600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் நிலையத்தின் புதிய அலகு, மீண்டும் ஹைட்ரஜன் வாயு கசிவின் காரணமாக 6.3.2014 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 600 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை அனல் மின் நிலையத்தின் புதிய அலகு 5.4.2014 முதல் பழுதடைந்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு கிடைத்து வந்த 370 மெகாவாட் மின்சார உற்பத்தி பழுதின் காரணமாக தடைபட்டு, தற்போது மீண்டும் சரி செய்யப்பட்டு மின்சாரம் பெறப்படுகிறது.

தற்போது, மொத்தத்தில் 1,200 மெகாவாட் அளவுக்கு மின்சார உற்பத்தி குறைந்துள்ளது. தேர்தல் சமயத்தில் இதுபோன்று மின்வெட்டு ஏற்பட்டு இருப்பதும், அதிமுக அரசின் மீது எந்தக் குறையையும் சுட்டிக்காட்ட முடியாத சூழ்நிலையில் இந்த மின்வெட்டுப் பிரச்சனையை எதிர்க்கட்சிகள், குறிப்பாக திமுக சுட்டிக்காட்டி பிரச்சாரம் செய்து வருவதும், இதேபோன்ற பிரச்சனை தேர்தல் காலங்களில் ஏற்படுவதும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் மீது மக்கள் மனதில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த புதிய மின் அலகுகள் பழுது அடைந்ததில் ஏதாவது சதி செயல் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து, இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பு சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. மேட்டூர் மின் அலகில் ஏற்பட்டுள்ள பாதிப்பினை சரி செய்ய சீனாவில் இருந்து வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு, போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மின் நிலையம் மீண்டும் துவங்கும் போது மின் வெட்டு வெகுவாக குறைக் கப்பட்டுவிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது மட்டுமல்லாமல் எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு, 3,300 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் திட்டங்களுக்கு சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, பெறப்பட்டுள்ளன. இதில், 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் விரிவாக்க மிக உய்ய அனல்மின் திட்டத்திற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவை வெகு விரைவில் இறுதி செய்யப்படும். 2 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டத்திற்கான தொடக்க ஆய்வு பணிகள் முடிவு பெற்றுள்ளன. விரைவில் முதற்கட்டத்திற் கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் எடுத்துக் கொள்ளப்படும்.

மின்சார பிரச்சனையில் மக்களுக்கு துன்பங்களை விளைவித்து, அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இந்த தேர்தலில் நீங்கள் சவுக்கடி கொடுத்து விரட்ட வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது மின் உற்பத்தியை பெருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்காதவர் கருணாநிதி. எனது முந்தைய ஆட்சிக்காலத்தில் பைகாரா புனல் மின்திட்டத்திற்கு மத்திய அரசு மூலம் தடை போட்டவர் கருணாநிதி. சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு என்ற கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தவர் கருணாநிதி. காவிரி நதிநீர் பிரச்சனையில் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாதவர் கருணாநிதி.

இப்படி தமிழகத்திற்கு துரோகத்தை மட்டுமே இழைத்த கருணாநிதி, அண்மையில் திருவாரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காவிரி பிரச்சனை குறித்து வாதம் செய்ய சட்டமன்றத்திலே நேரம் ஒதுக்கலாம். ஒதுக்கி, அதிலே விவாதித்து யார் தவறு செய்தார்கள்? யார் நியாயமாக நடந்து கொண்டார்கள்? யார் நம்முடைய உரிமைகளை பெற்றுத்தர முயற்சித்தார்கள்? என்ற உண்மையை நாட்டு மக்களுக்கு விளக்கட்டும் என்று கூறி இருக்கிறார்.

காவிரி நதிநீர் பிரச்சனையில் பல துரோகங்களை செய்து இருக்கிறார் கருணாநிதி. கர்நாடகம் அணைகளை கட்டிக்கொள்ள அனுமதித்தது, உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தன்னிச்சையாக வாபஸ் வாங்கியது, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்காதது என அடுக்கிக் கொண்டே போகலாம்.

கருணாநிதியின் சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். தேர்தல் முடிந்து, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டப்பட்ட உடன், காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். கருணாநிதியின் துரோகங்களை பட்டியலிட நான் தயாராக இருக்கிறேன். என் கட்சியின் சார்பில் நான் தான் பேசுவேன். இதேபோல் கருணாநிதியும் வந்து சட்டமன்ற விவாதத்தில் கலந்து கொள்ளத்தயாரா?.

திமுகவின் சார்பில் துரைமுருகனோ அல்லது வேறு பிரதிநிதிகளோ விவாதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை கருணாநிதி ஏற்றுக்கொள்ள தயாரா? சட்டமன்றத்திற்கு வரத் தயாரா?. என்னை நேருக்கு நேர் சந்தித்து விவாதிக்க தயாரா? இதனை கருணாநிதி ஏற்றுக்கொள்கிறாரா, இல்லையா? என்பது குறித்த அவருடைய முடிவை அவர் அறிவிக்க வேண்டும். இல்லையெனில் துரோகங்கள் இழைக்கப்பட்டது உண்மை தான் என்று கருணாநிதியே ஒப்புக்கொள்கிறார் என்று தான் அர்த்தம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதிமுக பாஜகவின் ‘பி’ டீம் என்றும், பாஜகவை எதிர்த்து ஏன் பேசவில்லை என்றும், எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. எங்களைப் பொறுத்த வரையில் நாங்கள் யாருக்கும் ‘பி’ டீம் இல்லை என்பதையும், எங்கள் அணி தான் முதன்மையான அணி என்பதையும் நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன்.

காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத ஆட்சி மத்தியிலே அமைய வேண்டும் என்பதே அதிமுகவின் லட்சியம் ஆகும். இதை நான் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக கழகத்தின் பொதுக் குழுவிலேயே அறிவித்தேன். இந்த லட்சியம் நிறைவேற வேண்டுமென்றால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றே தீரவேண்டும். எனவே தான், இந்த தேர்தலில் அதிமுக 40 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து மத்தியில் ஆட்சி அமைக்கும் நிலை தான் உள்ளது. அதுதான் அதிமுகவின் லட்சியம். மத்தியிலே காங்கிரஸ் அல்லாத ஆட்சி; பாஜக அல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்பது தான் அதிமுகவின் லட்சியம்.

இதுபோன்ற ஆட்சியில் அதிமுக முக்கிய பங்கு வகிக்க வேண்டுமென்றால், 40 இடங்களிலும் நாம் வெற்றி பெற்றே தீர வேண்டும். அது போன்றதொரு சூழ்நிலையை நீங்கள் உருவாக்கிக்கொடுக்க வேண்டும். அதை உங்களால் தான் சாதிக்க முடியும். அப்பொழுது தான், தமிழ்நாட்டின் குரல் மத்தியில் ஓங்கி ஒலிக்கும். தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்படும். தமிழினம் பாதுகாக்கப்படும். சிறுபான்மையினர் நலன்கள் உறுதி செய்யப்படும். எனவே, வருகின்ற பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் உங்களுடைய வாக்குகளை அதிமுக விற்கு சிந்தாமல், சிதறாமல் நீங்கள் அளிக்க வேண்டும்.

தமிழர்கள் நலன்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆகியவற்றின் வேட்பாளர்களை அனைத்து தொகுதிகளிலும் நீங்கள் படுதோல்வி அடைய செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அதிமுக மகத்தான வெற்றி பெறும்போது என்னென்ன செயல் திட்டங்களை செயல்படுத்துவோம் என்பதை தான் நான் விளக்கமாக எடுத்துரைத்து வருகிறேன். திமுக மற்றும் இதரக் கட்சிகள் தாங்கள் என்ன செய்துள்ளோம், இனி என்னென்ன செய்யப்போகிறோம் என்பதை எடுத்துச் சொல்வதில்லை.

அவர்கள் சொல்வது இரண்டே இரண்டு விஷயங்கள் தான். ஒன்று, ஜெயலலிதா பாரத பிரதமர் ஆகிவிடக்கூடாது. மற்றொன்று, தாங்கள் சுட்டிக்காட்டுபவர் தான் பாரத பிரதமர் ஆக வேண்டும்.

பாஜகவை பொறுத்த வரை அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையில் காவிரி நதிநீர் பிரச்சனை குறித்தோ, முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை குறித்தோ, இலங்கை தமிழர் பிரச்சனை குறித்தோ, தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்தோ, கச்சத்தீவு பிரச்சனை குறித்தோ எதுவுமே குறிப்பிடப்படவில்லை. எனவே, தமிழகத்தின் முக்கியமான பிரச்சனைகளில் பாஜக.வுக்கு அக்கறை இல்லை என்று தான் நாம் பொருள் கொள்ள வேண்டும்.

1996 ஆம் ஆண்டு முதல் மத்தியிலே கூட்டணி ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிகள் மத்தியில் ஆட்சி புரிந்துள்ளன. ஆனால், தற்போதைய பாராளுமன்ற தேர்தல் முற்றிலும் மாறுபட்ட தேர்தல் முடிவுகளை அளிக்கக்கூடியது.

இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

200 இளம் மாணவிகளை கடத்தி பாலியல் தொல்லை; தீவிரவாதிகள் அட்டூழியம்மத்திய ஆப்பிரிக்க நாட்டில் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் 200 பள்ளி இளம் மாணவிகளை கடத்திச் சென்றுள்ளனர். அவர்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டதாக தப்பி வந்த மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டுமென போக்கோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு ஆயுதமேந்திய போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.

நைஜீரியாவில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்களை தாக்கி அழிக்கும் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் அப்பாவி பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர்.

நைஜீரியா நாட்டின் வடகிழக்கு மாநிலமான போர்னோவில் உள்ள அம்ச்சக்கா மற்றும் சுற்றுப்புற கிராங்களுக்குள் நேற்று முன்தினம் கும்பலாக புகுந்த போகோ ஹரம் தீவிரவாதிகள், அங்கிருந்த வீடுகளின் மீது சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வீசி ஆவேச தாக்குதல் நடத்தினர்.

உயிர் பயத்தில் வீடுகளுக்குள் இருந்து வீதிக்கு ஓடி வந்த அப்பாவி மக்களின் மீது அந்த கொடியவர்கள் கண்மூடித் தனமாக துப்பாக்கிகளால் சுட்டதில் 70-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பலியாகினர். அம்ச்சக்கா கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்த ஒரு ஆழ்துளை கிணற்றையும் அவர்கள் வெறித்தனமாக அழித்து, சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றனர்.

இந்நிலையில், போர்னோ மாவட்டத்தில் உள்ள மைடுகுரி நகரில் இருந்து 130 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சிபோக் பகுதியில் உள்ள பெண்கள் உறைவிட மேல்நிலைப் பள்ளிக்கு நேற்றிரவு வேன், லாரி மற்றும் பஸ்களில் வந்த போக்கோ ஹரம் தீவிரவாதிகள், காவலர்களூடன் கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.

விடுதிக்குள் தூங்கிக் கொண்டிருந்த சுமார் 200 இளம் வயது மாணவிகளை பலவந்தமாக வாகனங்களில் தூக்கிப் போட்டுக் கொண்டு கடத்திச் சென்றனர். போகும் வழியில் இருந்த வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களையும் அவர்கள் தீயிட்டு கொளுத்தி அழித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்ட உள்ளூர் ராணுவ அதிகாரிகள், ‘விரைவில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிடும்’ என்று தெரிவித்தனர்.

மேற்கத்திய நாடுகளின் கல்வி முறையை தீவிரமாக எதிர்த்து வரும் போக்கோ ஹரம் அமைப்பினர், சமீப காலமாக பள்ளிகள் மற்றும் மாணவர்களை குறி வைத்து தாக்கி வருகின்றனர். கடந்த மாதம் ஒரு பள்ளியின் விடுதிக்குள் புகுந்து மாணவர்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றனர்.

மாணவிகளை கடத்தப் போவதாக சில தினங்களுக்கு முன்னர் வீடியோ மூலம் மிரட்டல் விடுத்திருந்தனர். அரசு போதுமான பாதுகாப்பு அளித்திருந்தால் இந்த கடத்தல் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என்று சிபோக் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

தீவிரவாதிகள் சென்ற லாரிகளில் ஒன்று நடு வழியில் பழுதானதால் அதில் இருந்த மாணவிகளை இறக்கி, வேறொரு லாரியில் ஏற்றியப் பின்னர் பழுதான லாரியை அவர்கள் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

இதேபோல், ஒரு வேனும் ‘பஞ்சர்’ ஆகிப் போனதால், அதிலிருந்த மாணவிகளையும் மற்றொரு வாகனத்தில் ஏற்றியபோது, இருளில் தீவிரவாதிகளின் கண்களில் படாமல் புதர் மறைவில் பதுங்கியபடி சிபோக் நகரை வந்தடைந்த சில மாணவிகள் வாகனத்தின் உள்ளே தீவிரவாதிகள் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

ரஜினியின் புதிய படம் - பொம்மையில்லை உண்மை ரஜினிஎன்னதான் மோஷன் கேப்சர் டெக்னாலஜி, அவதார், டின்டின் தொழில்நுட்பம் என்றாலும் உண்மை ரஜினியின் ரசிகர்கள் இந்த பொம்மை ரஜினியை ஏற்றுக் கொள்வார்களா என்ற பதற்றம் படம் எடுத்தவர்களுக்கு இருக்கிறது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் விரைவில் ரஜினி நடிக்கயிருக்கும் படத்திலும் அனிமேஷன் ரஜினிதான் என்ற அதிர்ச்சி தகவல் கொஞ்ச நாளாக உலவுகிறது.

அது உண்மையா?

இல்லை. அப்படிதான் ரஜினியுடன் நடிக்கயிருக்கும் சோனாக்ஷி சின்கா கூறியுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய படம் மே மாதம் ஆரம்பமாகிறது. ரஹ்மான் இசையமைக்க வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். இதுவொரு ஃபேன்டஸி படம், அனிமேஷன் ரஜினி அல்ல ரசிகர்கள் விரும்பும் நிஜ ரஜினியே இதில் நடிக்கிறார் என சோனாக்ஷி சின்கா மும்பையில் பேட்டியளித்துள்ளார்.

ஆக, ரஜினியின் புதிய படத்தில் அவர் அவராகவே தோன்றுகிறார். ரசிகர்களுக்கு இது இனிப்பான செய்திதான்.

பெங்களூருவில் சொகுசு பேருந்தில் தீ பிடித்து 6 பேர் பலி


பெங்களூருவில் சொகுசு பேருந்தில் தீ பிடித்து 6 பேர் பலியாயினர், பலர் படுகாயமடைந்தனர்.

கர்நாடகா மாநிலம் தவன்கெரேவில் இருந்து பெங்களூருக்கு நேற்றிரவு ஒரு ஆம்னி பேருந்து புறப்பட்டு வந்தது. தனியாருக்கு சொந்தமான அந்த குளிர்சாதன நவீன சொகுசு பேருந்தில் 29 பயணிகள் இருந்தனர்.

இன்று அதிகாலை அந்த பேருந்து சித்ரதுர்கா அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டீசல் டேங்கில் கசிவு ஏற்பட்டது. அந்த கசிவால் தீ பற்றிக் கொண்டது.

பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்ததால், பலத்த காற்றில் தீ பரவியது. மறு நிமிடம் டீசல் டேங்க் வெடித்தது. இதனால் பேருந்து முழுவதும் தீ பிடித்து கொண்டது.

பேருந்தில் தீ பிடித்தபோது, பயணிகளில் பெரும்பாலானவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். தீ பரவியதை தொடர்ந்து பயணிகள் அலறினார்கள். உடனே ஓட்டுனர் பேருந்தை நிறுத்தினார். பேருந்து

கதவை திறந்து பயணிகளை வெளியேற கூறினார்கள்.

11 பயணிகள் வெளியில் தப்பி வந்துவிட்டனர். 18 பயணிகள் பேருந்தின் உள்ளே சிக்கிக் கொண்டனர். அவர்களில் 6 பேர் பேருந்தின் உள்ளே சிக்கி தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மீதமுள்ள 12 பயணிகள் தீ பிடித்த நிலையில் மீட்கப்பட்டனர். அவர்கள் படுகாயங்களுடன் தவித்தனர்.

இதற்கிடையே சொகுசு பேருந்தில் தீ பிடித்த தகவல் அறிந்த காவல்துறையினரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் 12 பயணிகளையும் தவன்கெரேயில் உள்ள

மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றனர். அங்கு 12 பயணிகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் ஓட்டுனரும், உதவியாளர் இருவரும் உயிர் தப்பியுள்ளனர். அவர்களிடம் காவல்துறை அதிகாரி சீனிவாச மூர்த்தி விசாரணை நடத்தினார்.

இதையடுத்து உயிரிழந்த 6 பயணிகள் பற்றி தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

அவரையே வேண்டாம்னுட்டேன்ஷேக்ஸ்பியரின் காதல் ஜோடி பெயரில் ஒரு படம் தயாராகிறதல்லவா... அதில் ஜெயம் நாயகனுக்கு இணை மொத்வானி நடிகை. முதலில் இந்தக் கதையை இயக்குனர் நயனத்திடம்தான் கூறினாராம்.

அவர் தயாரித்த திருடனின் காதலி படத்தில் நயனம்தான் ஹீரோயின். அந்த நட்பில் கதையை கேட்ட நடிகை, கதை பிடித்து நடிக்கவும் சம்மதித்தாராம். ஆனால் அவரை வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம் இயக்குனர். ஏன்?

ஜெயத்துடன் நயனம் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படம் வெளிவராத நிலையில் உடனே அவரையே மீண்டும் ஜோடியாக்கினால் நன்றாக இருக்காது இல்லையா... அதுதான் ஆளை மாத்திட்டேன் என்றார் இயக்குனர்.

லஞ்சம் வாங்க மாட்டேன், கட்ட பஞ்சாயத்து செய்ய மாட்டேன்லஞ்சம் வாங்க மாட்டேன், கட்ட பஞ்சாயத்து செய்ய மாட்டேன், அடுத்தவர்கள் சொத்தை அபகரிக்க மாட்டேன் என்று பெருந்துறை ஒன்றிய பகுதி வாக்காளர்களிடம் உறுதி அளித்து வாக்கு சேகரித்தார் திருப்பூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

பெருந்துறை ஒன்றியப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்குகள் சேகரித்தார் இளங்கோவன். அவர் பேசியது:

எங்கள் முன்னோர்கள் வைத்துவிட்டுச் சென்ற சொத்தை விற்றுதான் குடும்பம் நடத்தி வருகிறேன்.

அரசு வேலை வாங்கித் தருவதற்காக லஞ்சம் வாங்கமாட்டேன். கட்ட பஞ்சாயத்து செய்து அடுத்தவர்கள் சொத்தை அபகரிக்கமாட்டேன். மக்களுக்கு சேவை செய்தற்கு பாகுபாடு பார்க்கமாட்டேன். வங்கியில் கல்விக் கடன் பெற்றுத் தருவேன்.

கிராமப்புறங்களில் வறட்சியால் மக்கள் வேலையின்றி கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் கஷ்டங்களை போக்கும் விதமாக 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்துவதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சம்பளமும் ரூ. 168 என உயர்த்தி வழங்கப்படும்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களில் 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியால் மட்டுமே மக்களுக்கு முழு பாதுகாப்பு தர முடியும் என்றார்.

பெருந்துறை ஒன்றியத்திற்கு உள்பட்ட பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், பள்ளபாளையம், காஞ்சிக்கோவில், பெத்தாம்பாளையம், நல்லாம்பட்டி ஆகிய பேரூராட்சிகள், சிங்காநல்லூர், திங்களூர், வெட்டையன்கிணறு, துடுப்பதி, சுள்ளிபாளையம், சீனாபுரம், பட்டக்காரன்பாளையம், பெரிய வீரசங்கிலி, சின்ன வீரசங்கிலி, விஜயமங்கலம் ஆகிய ஊராட்சிகள் உள்பட 60 க்கும் மேற்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

மோடி பிரதமரானால் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வார்
பாஜக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபடவேண்டும் என்று தனது ஆதரவாளர்களுக்கு முன்னாள் மததிய அமைச்சர் மு.க.அழகிரி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரையில் நேற்றிரவு ரகசியக் கூட்டம் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கூட்டத்தில் அழகிரி பேசியது குறித்து அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது:

எந்த தவறும் செய்யாத மதுரை மாநகர் திமுக நிர்வாகிகளை கூண்டோடு கலைத்தனர். அவர்களுக்காக திமுக தலைவர் கருணாநிதியிடம் நியாயம் கேட்டேன். என் மீது அபாண்டமான பழி போட்டனர். 'கட்சியையும், கட்சி தலைவரையும் மீட்டெடுப்போம்' அதற்கு இனி நாம் தயாராக வேண்டும். என் ஆதரவாளர்களான, உங்களுக்காக, மன்னிப்பு கேட்கவும் தயார் என்றேன். ஆனால், அவர்கள் இதை ஏற்கவில்லை. திட்டமிட்டும், சதி செய்தும், நம்மை பழிவாங்கி விட்டனர். நீதி கேட்டு நெடும் பயணம் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது.

தேர்தலில் நம் ஆதரவாளர்கள் எல்லோரிடம் நான் தனிப்பட்ட முறையில் கருத்து கேட்டேன். அதன் அடிப்படையில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரிப்பது என, முடிவெடுக்கப்பட்டுள்ளது. இரவோடு இரவாக வைகோ போன்றவர்களுக்கு சாதகமாக உடனே தேர்தல் பணியாற்ற வேண்டும். மதுரையில் தேமுதிக, வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும்.

தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகளை ஆதரிப்போம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நம் ஆதரவால் தான் திமுக, தென் மண்டலத்தில் 9 எம்.பி., க்கள் வெற்றி பெற்றனர். தற்போது தென் மண்டலத்தில் திமுக, வேட்பாளர்கள் தோல்வி அடையும் போது நம்முடைய சக்தி தெரியும்.

குஜராத்தில் சிறப்பாக ஆட்சி செய்யும் மோடி, பிரதமரானால், நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வார், அவர் ஒரு சிறந்த நிர்வாகி. குஜராத் மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள் மோடிக்கு வாக்களித்துள்ளனர். ஆகவே குஜராத் மாநிலத்தில் வாழும் சிறுபான்மையினர், அவரை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று தான் அர்த்தம். இவ்வாறு அழகிரி பேசியதாக, அவரது ஆதரவாளர்கள் கூறினர். மேலும் விரைவில் அழகிரி-மோடி சந்திப்பு நடக்கவுள்ளதாக அழகிரியின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

Vani Rani 16-04-2014 - Sun Tv Serial | Vani Rani 16.04.14 | Vani Rani | Vani Rani 16 Apr 2014 | Vani Rani Sun tv Serial Online | Watch Vani Rani Sun Tv Serial Online | Vani Rani 16 Apr 2014 | Vani Rani Episode 325


PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHINGVani Rani 16-04-2014 - Sun Tv Serial | Vani Rani 16.04.14 | Vani Rani | Vani Rani 16 Apr 2014 | Vani Rani Sun tv Serial Online | Watch Vani Rani Sun Tv Serial Online | Vani Rani 16 Apr 2014 | Vani Rani Episode 325

Rajnikanth Comedy – 16-04-2014 Tamil Movie Superhit Comedy ScenesRajnikanth Comedy – 16-04-2014 Tamil Movie Superhit Comedy Scenes

Santhanam’s Upcoming movie – Vallavanukku Pullum Aayudham Audio Launch

Ultimate Job Fail Compilation


Actress Vindhya’s direct attack on Stalin & Vijaykanth


Actress Vindhya’s direct attack on Stalin & Vijaykanth

Nerpada Pesu – Puthiya Thalaimurai 16-04-2014


Nerpada Pesu – Puthiya Thalaimurai 16-04-2014

Naattin Naadikanippu (Karnataka) (15/04/2014)

Mothum Vetpaalargal-Kanikkum Vaakkalargal 16-04-2014
 

Receive techsatish updates via Facebook.Just Like Us!